புல்மோட்டை அரிசிமலையில் அதிகரிக்கும் பிக்குவின் அடாவடித்தனம்

ஜும்ஆத் தொழு­கைக்கு மக்கள் பள்­ளி­வா­ச­லுக்கு சென்­றி­ருந்த தரு­ணம் ­பார்த்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை மதியம் புல்­மோட்டை சாத்­த­ன­மடு, வீரே­டிப்­பிட்டி பகு­தி­க­ளி­லுள்ள வயல் காணி­களை அப­க­ரிக்கும் முயற்சிகளை பௌத்த பிக்­குகள் தலைமையிலான குழு­வினர் முன்னெடுத்துள்ளனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை 2019 இல் இரத்து செய்தது ஏன்?

முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட நலன்­புரிச் சங்­க­மொன்றின் சொத்­துக்கள் சம்­பந்­த­மாக திரு­கோ­ண­மலை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பை­ய­டுத்தே முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த முஸ்லிம் இயக்கங்கள், தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் பதி­வு­களை இரத்துச் செய்­வ­தற்கு காரணம் என தெரி­ய­வந்­துள்­ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம்: முஸ்லிம் கட்சியினரை மாத்திரம் ஜனாதிபதி ரணில் சந்திக்கலாகாது

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் தரப்பை சந்­திக்­கும்­போது, முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை மாத்­திரம் சந்­தித்து பேச்சு நடத்­தாமல், அனைத்து முஸ்லிம் தரப்­பு­க­ளையும் இணைத்தே பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­முன்­வர வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் முஸ்லிம் மத விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான உறுப்­பி­ன­ரு­மான அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

வக்பு செய்யப்பட்ட காணித் துண்டுகள் நூராணியாவுக்கா? நிதா டிரஸ்ட்டுக்கா?

ராஜ­கி­ரிய நுரா­ணியா ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் கீழ் இயங்கு அல் மத­ர­ஸதுல் நூரா­ணியாவின் வக்பு சொத்துகளை நிதா பவுண்­டே­ஷனின் பெய­ருக்கு மாற்றம் செய்ய முயற்­சிகள் நடப்­ப­தாகக் கூறி அதற்கு எதி­ராக வக்பு சபையில் மனு தாக்கல் செய்­யப்­பட்­டிருந்தது.