4/21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முஸ்லிம் லீக் 5 மில்லியன் டொலர் அன்பளிப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கைக்கு 5 மில்லியன் டொலர்கள் உதவியாக வழங்கவுள்ளதாக உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் கலாநிதி ஷேக் மொகமட் பின் அப்துல் கரீம் அல்ஈசா தெரிவித்துள்ளார். மேல் மாகாண ஆளுநர் காரியாலயமும், முஸ்லிம் சமய விவகார அமைச்சும் இணைந்து நேற்று முன்தினம் கொழும்பு தாமரைத் தடாக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த சமாதானம், அமைதி, சகவாழ்வு தொடர்பான மாநாட்டில் கலந்து…