ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து வர அனுமதியளிக்குக
கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் 7 முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கல்லூரிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்டக்கிளை நேற்று கல்லூரி அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது.
முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து கடமைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து ஆசிரியைகள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவிடம் முறையிட்டிருந்தனர். ஆளுநர் இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கண்டி பிரஜைகள் முன்னணி…