ஆப்­கானில் திரு­மண நிகழ்வில் குண்டுத் தாக்­குதல்

63 பேர் பலி; 200 பேர் வரை காயம்

0 699

ஆப்­கா­னிஸ்­தானின் தலை­ந­கரில் திரு­மண நிகழ்­வொன்­றினை இலக்கு வைத்து நேற்று முன்­தினம் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் குறைந்தது 63 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு சுமார் 200 பேர் வரை காய­ம­டைந்­துள்­ளனர். இவ்­வாண்டில் காபூலில் மேற்­கொள்­ளப்­பட்ட மோச­மான தாக்­குதல் இது­வாகும். 

சனிக்­கி­ழமை மாலை மேற்கு காபூலில் அமைந்­துள்ள துபாய் சிட்டி திரு­மண மண்­ட­பத்தில் திரு­மண நிகழ்வு இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது ஆண்கள் பகுதி முழு­மை­யாக நிறைந்­தி­ருந்த வேளையில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. உயி­ரி­ழந்­த­வர்­களுள் பெண்­களும் சிறு­வர்­களும் அடங்­கு­வ­தாக உள்­துறை அமைச்சின் பேச்­சாளர் நஸ்ரத் ரஹீமி தெரி­வித்தார்.

அமெ­ரிக்க ஆத­ர­வு­ட­னான ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்­துடன் பாது­காப்பு மற்றும் சமா­தானப் பேச்­சுக்கள் தொடர்பில் தலிபான் அமைப்புகாட்டும் அர்ப்­ப­ணிப்­புக்குப் பக­ர­மாக அமெ­ரிக்கப் படை­யி­னரை வாபஸ் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் தலிபான் அமைப்பும் அமெ­ரிக்­காவும் பேச்­சு­வார்த்தை நடத்த முயன்­று­வரும் நிலையில் இத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.

இத் தாக்­கு­த­லுக்கும் தமக்கும் எவ்­வித சம்­பந்­தமும் இல்லை என மறுத்­துள்ள தலிபான் அமைப்பு இத் தாக்­குதல் நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டி­யதும் நியா­யப்­ப­டுத்த முடி­யா­த­து­மாகும் எனத் தெரி­வித்­துள்­ளது.

இத் தாக்­கு­தலை வன்­மை­யாகக் கண்­டித்த ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதி அஷ்ரப் கானி பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்த தலி­பான்கள் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து தம்மை விடு­வித்­துக்­கொள்ள முடி­யாது எனவும் தெரி­வித்­துள்ளார்.

மேடைக்கு அரு­கி­லி­ருந்த இசைக் கலை­ஞர்­க­ளுக்கு அண்­மையில் நின்­றி­ருந்த அனைத்து இளை­ஞர்­களும் சிறு­வர்­களும் அதே­போன்று அங்கு காணப்­பட்ட அனை­வரும் கொல்­லப்­பட்­ட­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட குல் மொஹமட் தெரி­வித்தார்.

தாக்­குதல் நடந்­ததன் பின்னர் மண்­ட­பத்­தினுள் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களில் இரத்தம் தோய்ந்த உடல்கள் தரையில் விழுந்­தி­ருந்­த­தோடு சதைத் துண்­டங்கள் கிழிந்த ஆடைகள் தொப்­பிகள், பாத­ணிகள் மற்றும் தண்ணீர் போத்­தல்கள் என்­ப­னவும் சிதறிக் காணப்­பட்­டன.

மத்­திய காபூலில் அமைந்­துள்ள அவ­சர வைத்­தி­ய­சா­லையில் காய­ம­டைந்­தோ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டு­வரும் நிலையில் டசின்கணக்கானோர் தமது உறவுகளின் நிலைமை தொடர்பில் அறிந்துகொள்ள காத்துக் கொண்டிருந்தனர். குண்டு வெடிப்பில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் உடல்களும், காயமடைந்தோரும் இரவு வேளையில் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டனர்.

எம்.ஐ.அப்துல் நஸார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.