தேசிய மக்கள் சக்தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக

காலி முகத்திடலில் நடைபெற்ற பேரணியில் அறிவிப்பு

0 594

மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மை­யி­லான “தேசிய மக்கள் சக்­தியின்” ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜே.வி.பி. யின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக நேற்று அறி­விக்­கப்­பட்டார்.

ஆயி­ரக்­க­ணக்­கான ஆத­ர­வா­ளர்­களை காலி முகத்­தி­ட­லுக்கு அழைத்து வந்து தமது ஜனா­தி­பதி தேர்தல் போட்­டியை ஆரம்­பித்­தது தேசிய மக்கள் சக்தி அமைப்பு.

2020 ஆம் ஆண்­டுக்­கான ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து கள­மி­றங்­கு­வ­தாக அறிவித்திருந்த நிலையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மையில் சிவில் அமைப்­புகள், தொழிற்­சங்­கங்கள், விவ­சாய அமைப்­புகள், இளைஞர் அணி­யினர், பெண்கள் நலன் அமைப்பு, சுகா­தார சேவயர் சங்கம் உள்­ளிட்ட பல சங்­கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலை­ய­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் ஒன்­றி­ணைந்த ‘தேசிய மக்கள் சக்தி” யின் மாநாடு நேற்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் பிற்­பகல் 4 மணி­ய­ளவில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

இலங்­கையில் சகல பிர­தே­சங்­களில் இருந்தும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ர­வா­ளர்கள் ஆயி­ரக்­க­ணக்­கானோர் நேற்று காலி­மு­கத்­தி­டலில் தமது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்கும் விதத்தில் மக்கள் கூட்­டத்தில் கலந்து கொண்­டனர். இந்த நிகழ்வில் சட்­டத்­த­ரணி லால் விஜ­ய­நா­யக, சிவில் சமூக பிர­தி­நி­தி­யான முனீர் முழப்பர், சோஷ­லிச புரட்சி முன்­ன­ணியின் செய­லாளர் வசந்த திசா­நா­யக்க, தேசிய கலை­ஞர்கள் அமைப்பின் தலைவர் ஜய­தி­லக கன்­னல்­ல­வீர, பொறி­யி­ய­லாளர் மயில்­வா­கனம் சூரி­ய­சே­கரன், ஜகத் மனு­வர்ண, பெண்­கள் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் உறுப்­பினர் சரோஜா சாவித்­திரி உள்­ளிட்ட முக்­கிய பிர­தி­நி­திகள் உரை­யாற்­றினர். இதன்­போது தேசிய மக்கள் சக்­தியின் கொள்­கைத்­திட்­டமும் வாசிக்­கப்­பட்­டது. ஊழல் மோச­டிகள் இல்­லாத ஆட்­சி­யையும், மக்­களை பாது­காக்கும் ஜன­நா­ய­கத்தை உரு­வாக்கும், மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தும் தூய்­மை­யான ஆட்­சியை உரு­வாக்கி அதன் மூல­மாக நாட்டின் பொரு­ளா­த­ரத்தை கட்­டி­யெ­ழு­புவோம் என்ற தமது நோக்­கத்தை இதன்­போது அறி­வித்­தனர். அதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்ற அறி­விப்பு தமிழ், சிங்­கள மொழி­களில் அறி­விக்­கப்­பட்­டது. இதன்­போது தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அனு­ர­கு­மார திச­நா­யாக அறி­விக்­கப்­பட்ட வேளையில் அனு­ர­கு­மார திசா­நா­யக மேடைக்கு வரு­கை­தந்தார். மக்­களின் பலத்த கர­கோ­ஷத்­துடன் மக்­களின் உற்­சா­க­மான வர­வேற்­புடன் தனது தலை­மைத்­து­வத்தை ஏற்­று­கொண்ட அவர் தனது பிர­தான உரையை நிகழ்த்­தினார். “எம்மை நம்பி கைகோர்க்கும் மக்­களை ஒரு­போதும் ஏமாற்ற மாட்டோம்” என்ற பிர­தான அறை­கூ­வ­லுடன் தனது உரை­யினை அவர் முடித்­துக்­கொண்டார்.
இறு­தி­யாக ஜே.வி.பி. யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா உரை­யாற்­றினார். மக்கள் நம்பும், மக்கள் எதிர்­பார்க்கும் மிகச் சிறந்த தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நாட்டின் ஊழல் வாத, குற்­றங்கள் நிறைந்த இரண்டு பிர­தான கட்­சி­க­ளுடன் போராடத் தயா­ரா­கி­விட்டோம். இந்த ஊழல் ஆட்சியை வீழ்த்தி தூய்மையான பலமான அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இதில் மனித நேயம் கொண்ட ஜனநாயக தன்மை நிறைந்த ஆட்சியை எம்மால் உருவாக்கிக்கொடுக்க முடியும். இன மத பேதம் இன்றி அனைத்து மக்களும் எம்முடன் கைகோர்த்து நல்லாட்சியை உருவாக்குவோம் என்றார்.

ஆர்.யசி, இ. ஹஷான்

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.