துருக்கி : இஸ்தான்பூல் மேயருக்கான மீள் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

0 622

துருக்­கியில் இடம்­பெற்ற இஸ்­தான்பூல் மேய­ருக்­கான மீள் தேர்­தலில் எதிர்க்­கட்­சி­யான குடி­ய­ரசு மக்கள் கட்­சியின் வேட்­பாளர் எக்ரெம் இமா­மோ­குலு வெற்றி வெற்றி பெற்­றுள்ளார். இந்த வெற்­றி­யா­னது துருக்கி ஜனா­தி­பதி றிசெப் தைய்யிப் அர்­து­கா­னுக்கு பாரிய பின்­ன­டை­வாகும்.

அனைத்து வாக்குப் பெட்­டி­களும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை திறக்­கப்­பட்ட நிலையில் 54 வீத­மான வாக்­கு­களைப் பெற்று இமா­மோ­குலு வெற்றி பெற்ற அதே­வேளை ஆளும் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் வேட்­பாளர் 45 வீத­மான வாக்­கு­க­ளைப்­பெற்று தோல்­வியைத் தழு­வினார்.

துருக்­கியின் பெரிய நக­ரமும் மற்றும் வர்த்­தக கேந்­திர நிலை­ய­மு­மான இஸ்­தான்­பூலின் புதிய ஆரம்பம் என இமா­மோ­குலு உறு­தி­ய­ளித்தார். துருக்­கியில் ஜன­நா­ய­கத்தின் அந்­தஸ்­தினை நீங்கள் காப்­பாற்­றி­யுள்­ளீர்கள் என தனது ஆத­ர­வா­ளர்­களிடம் தெரி­வித்தார்.

அவரை எதிர்த்துப் போட்­டி­யிட்ட முன்னாள் துருக்கி பிர­தமர் பினாலி இல்ட்ரிம் சொற்ப வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்தார்.

தற்­போ­தைய பெறு­பே­று­க­ளுக்கு அமை­வாக என்னை எதிர்த்துப் போட்­டி­யிடும் எக்ரெம் இமா­மோ­குலு முன்­ன­ணியில் இருக்­கின்றார். அவ­ருக்கு எனது வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன் என இல்ட்ரிம் தெரி­வித்தார்.

இதற்கு முன்­ன­தாக இஸ்­தான்பூல் மேய­ருக்­கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடை­பெற்­றது. இதில் எக்ரெம் இமா­மோ­குலு 48.8 வீத வாக்­கு­களைப் பெற்ற அதே­வேளை நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் வேட்­பாளர் இல்ட்ரிம் 48.55 வீத வாக்­கு­க­ளையும் பெற்­றனர்.

இந்தப் பெறு­பே­றுகள் தொடர்பில் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்சி புற­ந­டை­யான எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யதை அடுத்து உயர்மட்டத் தேர்தல் ஆணைக்குழு குறித்த பெறுபேறுகளை இரத்துச் செய்தததோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்த முடிவு எட்டப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.