வெளிநாடுகளின் தலையீடுகளின்றி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு

இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹம்தல்லா ஸைத்

0 592

ஏனைய நாடு­களின் தலை­யீ­டு­க­ளின்றி தமது உள்­ளக விட­யங்­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான இய­லுமை இலங்கை மக்­க­ளிடம் உள்­ள­தென இலங்­கைக்­கான பலஸ்­தீன  தூதுவர் ஸுஹைர் ஹம்­தல்லாஹ் ஸெய்த் தெரி­வித்தார்.

ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு  வழங்­கிய நேர்­கா­ண­லிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்கை மக்­களால் வெளித் தலை­யீ­டு­க­ளின்றி தமக்­கி­டையே திறந்த கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­ப­டவும் புரிந்­து­ணர்­வு­களை கட்­டி­யெ­ழுப்­பவும் முடியும்.

நாட்­டி­னு­டைய தற்­போ­தைய நிலையை எடுத்துக் கொண்டால் அதனைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இன்றேல் வெளியில் ஏற்­பட்­டுள்ள பிர­தி­ப­லிப்­பு­க­ளி­லி­ருந்து மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வது கஷ்­ட­மான ஒன்­றா­கி­விடும்.

இன்று சிறி­ய­தொரு விடயம் கூட சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பரவி பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. நாம் தீவி­ர­வா­தத்­துக்கு எதிராகப் போராட வேண்­டிய கட்­டா­யத்தில் இருக்­கின்றோம்.

நாம் பரஸ்­பரம் புரிந்­து­ணர்­வு­டனும் ஒரு­வரை ஒருவர் மதித்தும் வாழ்­வது பற்றி கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒற்­று­மை­யாக வாழ என்ன வழி என்­ப­தையும் கண்­ட­றிய வேண்டும்.

பலஸ்­தீ­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் உள்ள உறவைப் பார்க்­கும்­போது அது மிகவும் உறு­தி­யா­னது. எங்­க­ளுக்கும் இலங்­கைக்கும் இடையில் மிகச்­சி­றந்த உறவு காணப்­ப­டு­கி­றது. பலஸ்­தீனை ஒரு அர­சாக முதன்­மு­தலில் அங்­கீ­க­ரித்­தது இலங்­கைதான். அர­சியல் ரீதி­யா­கவும் இலங்­கை­யுடன் பரந்த உற­வொன்று காணப்­ப­டு­கி­றது. இலங்­கை­யி­ட­மி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கவும் பொது­மக்­க­ளு­டைய நிலையில் இருந்தும் எங்­க­ளுக்கு அர­சியல் பங்­க­ளிப்பு கிடைக்­கி­றது. எங்­க­ளுக்கு பங்­க­ளிப்பு வழங்­கு­வதில் இலங்கை ஒன்­று­பட்டு செயற்­ப­டு­கி­றது.

முஸ்லிம் உல­கையும் இலங்­கை­யையும் இணைக்கும் பால­மாக பலஸ்தீன் நிச்­சயம் செயற்­படும். அத்­துடன் இலங்கை எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு பலஸ்தீன் முடிந்­த­ளவு பங்­க­ளிப்பு வழங்கும்.

பலஸ்­தீனில் நுக­ரப்­படும் 95 சத­வீ­த­மான தேயிலை இலங்­கையில் இருந்தே இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது. இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வர்த்­தக நட­வ­டிக்­கை­களின் புள்­ளி­வி­ப­ரங்­களை என்னால் சரி­யாகத் தர­மு­டி­ய­வில்லை. எனென்றால் மூன்றாம்   நாடு­க­ளுக்கு ஊடா­கவே வர்த்­தக பரி­மாற்­றங்கள் நடக்­கின்­றன.

இதி­லி­ருந்தே நாங்கள் எங்­க­ளது விருந்­தா­ளி­க­ளுக்கு தேநீர் கொடுக்­கின்றோம். நாங்­களும் தேனீரை நுகர்­கின்றோம். எங்­க­ளு­டைய காலை உணவில் தேநீரும் ஒரு பகு­தி­யாகும்.

நான் இலங்­கையில் கட­மை­யாற்றும் கடந்த 5 வருட காலத்தில் எந்த துன்­பு­றுத்­தல்­க­ளு­மற்ற மிகவும் சிறந்­த­தொரு நாடாக இலங்கை விளங்­கு­கி­றது. முஸ்­லிமோ கிறிஸ்­த­வரோ அனை­வரும் மதிக்­கப்­ப­டு­கி­றார்கள். எனினும் சில தீவி­ர­வாத சக்­திகள் நாட்டின் சமாதானத்தை குலைக்க முற்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தம்மை முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் முஸ்லிம்கள் அல்லர். இலங்கையின் உள்ளக சமாதானத்தை சீர்குலைக்க விரும்பும் சில வெளிச் சக்திகளின் கையாட்களாகவே இந்த தீவிரவாதக் குழுக்கள் செயற்பட்டுள்ளன என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.