எதிர்க்கட்சியினர் மீண்டும் எமது பின்னால் கத்தியால் குத்தியுள்ளனர்

சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல

0 546

வாக்­கெ­டுப்பு கோர­மாட்டோம் என கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்த தீர்­மா­னத்தை முறி­ய­டித்து எதிர்க்­கட்சி மீண்­டு­மொ­ரு­முறை எமக்கு பின்னால் கத்­தியால் குத்­தி­னார்கள். பாரா­ளு­மன்­றத்தில் இருப்­ப­வர்கள் கெள­ர­வ­மா­ன­வர்கள் என்றால் அவர்கள் வாக்­கு­று­தியை மீற­மாட்­டார்கள் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்றுக் காலை பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் கூடி­யது. பிர­தான நிகழ்­வுகள் இடம்­பெற்ற பின்னர் ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை முன்­வைத்து பிர­தான எதிர்க்­கட்சி உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன குறிப்­பி­டு­கையில், பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வியா­ழக்­கி­ழமை உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள் மாகாண மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தோற்­க­டிக்­கப்­பட்­ட­மையால் மாகாண சபையில் தொழில்­பு­ரியும் 5 இலட்சம் பேருக்கு எதிர்­வரும் புத்­தாண்­டுக்கு முன்னர் சம்­பளம் வழங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன தெரி­வித்­துள்­ள­துடன் பிர­த­மரும் இது தொடர்­பாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற ஒரு விட­யத்தை வெளியில் சென்று அதனை வேறு­வி­த­மாக தெரி­விப்­பது முறை­யல்ல. அத்­துடன் மாகாண சபை ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­வதில் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. ஏனெனில் ஏப்ரல் மாதம் வரைக்கும் இடைக்­கால வரவு செலவுத் திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று அவ­சர  நிலை­மை­களின் போது பணம் பெற்­றுக்­கொள்ள திறை­சே­ரியில் ஒரு பிரி­வொன்று இருக்­கின்­றது. அதனால் அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தோல்­வி­யுற்­றாலும் ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­வ­தற்கு எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டு­வ­தில்லை. அர­சாங்கம் இதனை மக்கள் மத்­தியில் எதிர்க்­கட்­சியின் செயற்­பாட்டை தவ­றாக சித்­தி­ரிக்க முயற்­சிக்­கின்­றது என்றார்.

இதன்­போது எழுந்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, பாரா­ளு­மன்­றத்தில் குழு­நிலை விவாதம் இடம்­பெ­றும்­போது வாக்­கெ­டுப்­புகள் கோர­மாட்டோம் என்று கட்சி தலை­வர்­களின் கூட்­டத்­தின்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அந்த இணக்­கப்­பாட்டை இவர்கள் முறி­ய­டித்து எமக்கு பின்னால் கத்­தியால் குத்­தினர். ஒக்­டோபர் மாதமும் இத­னைத்தான் இவர்கள் செய்­தனர் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பினர் நளின்த ஜய­திஸ்ச ஒழுங்கு பிரச்­சினை ஒன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கையில், அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தோல்­வி­ய­டைந்­ததால் அமைச்­சுக்கு ஒதுக்­கப்­பட்ட மொத்த நிதியில் 320 ரூபாவே இல்­லா­ம­லாக்­கப்­ப­டு­கின்­றது. அதனால் எந்த பிரச்­சி­னையும் இல்லை என்று பிர­தமர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அப்­ப­டி­யாயின் ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் கொடுப்­பதில் எவ்­வாறு பிரச்­சினை ஏற்­படும்?அத்­துடன் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் வாக்­கெ­டுப்பு கோரு­வ­தில்லை என்று தீர்­மா­னித்­த­தாக அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­விக்­கிறார். ஆனால் எந்த கட்சி கூட்­டத்­திலும் அவ்­வா­றான தீர்­மானம் எடுக்­க­வில்லை. முடி­யு­மானால் அதனை தெரி­விக்­க­வேண்டும். மாறாக விவா­தத்­தின்­போது கோரம் தொடர்பில் கேள்வியழுப்பாமல் இருப்பதற்கும் விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு தேவையென்றால் கோருவதற்கும் கட்சி தலைவர் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கெடுப்பை கோரும் உரிமை உறுப்பினர்களுக்கு இருக்கின்றது. அதனை யாராலும் நிறுத்த முடியாது என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.