துருக்கி உள்ளூர் தேர்தலில் அர்துகானுக்கு பின்னடைவு

0 573

துருக்­கியில் உள்ளூர் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­தி­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. உள்ளூர் நேரப்­படி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­க­ளிப்பு நட­வ­டிக்­கைகள் மாலை 4 மணி­யுடன் நிறை­வ­டைந்­த­தாக அந்­நாட்டு தேர்­தல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

நாட்டில் கல­வரம் ஏதும் ஏற்­ப­டாத வண்ணம் குறிப்­பாக ஆயு­த­மேந்­திய பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் வெளி­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி தையீப் அர்­து­கானை பதவி வில­கு­மாறு தொடர்ச்­சி­யாக கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வந்­தன. தனது ஆட்­சியை தக்­க­வைத்து கொள்ள வேண்­டு­மாக இருந்தால் இந்தத் தேர்­தலில் அவர் அதிக இடங்­களில் வெற்றி பெற வேண்டும்.

துருக்கி உள்ளூர் தேர்­தலில் தையீப் அர்­து­கானின் கட்சி தலை­நகர் அங்­கா­ராவில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, துருக்­கியின் அதிக மக்கள் தொகை கொண்ட நக­ரான இஸ்­தான்­புல்­லிலும் எதிர்க்­கட்சி ஒன்று ஆதிக்கம் செலுத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில், தமது ஆளும் கட்சி சில நக­ரங்­களின் ஆட்­சியை இழந்­துள்­ள­மையை ஜனா­தி­பதி அர்­துகான் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

நாட்டின் பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கு மத்­தியில் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­தி­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தன. இந்த உள்ளூர் தேர்­த­லா­னது நாட்டின் தலை­மையை தீர்­மா­னிக்கும் வாக்­கெ­டுப்பு என பர­வ­லாக பேசப்­பட்டு வரு­கி­றது.

இத்­தேர்­த­லா­னது 16 ஆண்­டு­க­ளாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் தமது கட்சியினது நிலைத்தன்மையை தீர்மானிப்பதற்கானது என ஜனாதிபதி அர்துகான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.