பங்­க­ளாதேஷ் பொதுத் தேர்­தலில் ஹஸீனா வெற்றி எதிர்க்­கட்­சி­களால் தேர்தல் முடி­வுகள் நிரா­க­ரிப்பு

0 511

பிர­தமர் ஷெய்க் ஹஸீ­னாவின் அவா­மிலீக் கட்சி பங்­க­ளாதேஷ் பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெற்­றுள்­ள­தாக அந்­நாட்டின் தேர்தல் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. எனினும் எதிர்க்­கட்சிக் கூட்­டணி தேர்தல் முடி­வு­களை நிரா­க­ரித்­துள்­ளது.

350 ஆச­னங்­களைக் கொண்ட ஜாதிய சங்ஷாட் என அழைக்­கப்­படும் பாரா­ளு­மன்­றத்­திற்­காக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற தேர்தல் 300 ஆச­னங்­களைக் கைப்­பற்­று­வ­தற்­கா­ன­தாகும், 50 ஆச­னங்கள் பெண்­க­ளுக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளன.

கடந்த திங்­கட்­கி­ழமை 298 ஆச­னங்­க­ளுக்­கான பெறு­பே­றுகள் வெளி­யா­கி­யி­ருந்த நிலையில் 287 ஆச­னங்­களை அவாமி லீக் தலை­மை­யி­லான கூட்­டணி கைப்­பற்­றி­யி­ருந்­தது. பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாதக் கட்­சி­யினை முதன்­மை­யாகக் கொண்ட எதிர்க்­கட்சிக் கூட்­ட­ணியால் ஆறு ஆச­னங்­களை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தாயின் ஒரு கட்­சிக்கு 151 ஆச­னங்கள் அவ­சி­ய­மாகும்.

அவாமி லீக் கட்­சிக்கு எனது வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன் என பெறு­பே­று­களை தொலைக்­காட்­சியில் அறி­வித்த தேர்தல் ஆணைக்­குழு செய­ல­கத்தின் செய­லாளர் ஹலா­லுத்தீன் அஹமட் தெரி­வித்தார்.

வாக்­கெண்ணும் பணி ஆரம்­பித்து சில மணி நேரங்­க­ளி­லேயே பங்­க­ளாதேஷ் ஆளும் கட்சி முன்­னிலை வகிக்க ஆரம்­பித்­து­விட்­டது. இத­னை­ய­டுத்து பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாதக் கட்­சி­யினை முதன்­மை­யாகக் கொண்ட எதிர்க்­கட்­சி­களின் கூட்­ட­ணி­யான ஜாதிய ஒயிக்யா முன்­னணி அச்­ச­ம­டைந்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு அவ­ச­ர­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட செய்­தி­யாளர் மாநாட்டில் இந்தத் தேர்தல் ஒரு கேலிக்­கூத்து என ஜாதிய ஒயிக்யா முன்­னணி தெரி­வித்­தது.
நாம் இந்தக் கேலிக்­கூத்­தான தேர்­தலை நிரா­க­ரிக்­கின்றோம். பக்­க­சார்­பில்­லாத நிரு­வா­கத்தின் கீழ் புதிய தேர்­த­லொன்றை நடத்­து­மாறு நாம் தேர்தல் ஆணைக்­கு­ழுவைக் கோரு­கின்றோம் என நாட்டின் மதச்­சார்­பற்ற அர­சியல் யாப்­பினை வரைந்த 82 வய­தான நீதி­ப­தி­யான கமால் ஹுஸைன் தெரி­வித்தார்.

1981 ஆம் ஆண்­டி­லி­ருந்து அவாமி லீக் கட்­சிக்கு தலைமை தாங்­கி­வரும் ஷேக் ஹஸீனா, ஒரு தசாப்­த­கால சிறந்த உள்­நாட்டு உற்­பத்தி, தைத்த ஆடைகள் ஏற்­று­மதி முன்­னேற்றம் என்­ப­வற்றின் பின்­ன­ணியில் தேர்­தலை எதிர்­கொள்ளத் தீர்­மா­னித்தார். சீனா­வுக்கு அடுத்­தாக உலகின் இரண்­டா­வது மிகப்­பெரும் தைத்த ஆடை­களை ஏற்­று­மதி செய்யும் நாடாக பங்­க­ளாதேஷ் காணப்­ப­டு­கின்­றது.

160 மில்­லியன் மக்­களைக் கொண்ட தெற்­கா­சிய முஸ்லிம் பெரும்­பான்மை நாட்டில் நான்­கா­வது தட­வை­யாக பதவி வகிக்கும் பெண் என்ற சாத­னை­யினை 71 வய­தான ஷேக் ஹஸீனா படைத்­துள்ளார்.
அண்டை நாடான மியன்­மா­ரி­லி­ருந்து கடு­மை­யான இரா­ணுவ கெடு­பி­டி­க­ளி­லி­ருந்த தப்பி வந்த சுமார் ஒரு மில்­லியன் ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு அடைக்­கலம் வழங்­கி­ய­மைக்­காக அவர் பெரிதும் பாராட்­டப்­பட்டார்.

எனினும் அவரை விமர்­சிப்­ப­வர்கள் அவர் சர்­வா­தி­கா­ரத்­துடன் செயற்­ப­டு­வ­தா­கவும், எதிர்க்­கட்­சி­களை நசுக்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். அவ­ரது அர­சியல் எதி­ரியும், பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாதக் கட்­சியின் தலை­வி­யு­மான 73 வய­தான காலிதா ஸியா ஊழலில் ஈடு­பட்­ட­மைக்­காக 17 வருட சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றார்.

தலை­நகர் டாக்­காவில் இரா­ணு­வத்­தி­னரும் துணைப் படை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு போக்­கு­வ­ரத்­துக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வாக்களிப்பு பெரும்பாலும் சுமுகமாகவே இடம்பெற்றது.

தேர்தல் வன்முறைகளைத் தடுப்பதற்காக சுமார் ஆறு இலட்சம் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் எதிர்நிலைக் கட்சிகளின் அங்கத்தவர்ளுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக நாடு முழுவதும் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.