ஞானசார தேரர் இலங்கையின் தேசிய வீரர்: அசின் விராது

0 495

‘அன்பின் நண்பர் ஞான­சார தேரர் நீங்கள் தொடர்ந்தும் போரா­டுங்கள்; உங்கள் போராட்­டத்தை ஒரு போதும் கைவி­ட­வேண்டாம்; நாங்கள் உங்­க­ளுக்கு உத­வி­யாக இருப்போம்; உங்­களை விரைவில் சந்­திப்­ப­தற்கு விரும்­பு­கிறேன்; நீங்கள் ஒரு தேசிய வீரர்’ என மியன்­மாரைச் சேர்ந்த அசின்­வி­ராது தேரர் தெரிவித்துள்ளார்.

பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­த­மொன்றில் தெரி­வித்­துள்ளார். மியன்மார் மண்டலே நக­ரி­லுள்ள அசின்­வி­ராது தேரரின் விகா­ரை­யி­லி­ருந்தே இந்தச் செய்­தியை அவர் அனுப்பி வைத்­துள்ளார்.

குறிப்­பிட்ட கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

‘எமது நண்பர் ஞான­சார தேர­ருக்கு செய்­தி­யொன்­றினைத் தெரி­விக்க நான் விரும்­பு­கிறேன். தேசிய போராட்டம் மற்றும் சுதந்­தி­ரத்­திற்­காக உங்­க­ளது வாழ்க்­கையை இவ்­வா­றான ஒரு நிலை­மைக்­குள்­ளாக்கிக் கொண்­டமை தொடர்பில் பெரு­மை­ய­டைய வேண்டும்.’ நீங்கள் சிறைச்­சா­லை­யினுள் இருப்­பது குறித்து நான் கவ­லை­ய­டை­கிறேன். என்­றாலும் இதற்­காக நீங்கள் பெரு­மை­ய­டை­ய­வேண்டும். மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். நீங்கள் இலங்­கையில் ஒரு தேசிய வீரர். உங்­க­ளுக்கு கட்­டா­ய­மாக விடு­தலை கிடைக்கும். நீங்கள் சிறைச்­சா­லையில் இருப்­பது குறித்து கவ­லை­ய­டைய வேண்டாம். மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களின் மீது அவர்கள் என்றும் அன்பு செலுத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.