ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவு; கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையால் பெரும் குழப்பம்

0 332

(எம்.எப்.அய்னா)
சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­களை அடுத்து உயி­ரி­ழந்த கொழும்பு ‍ கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த 3 வய­தான ஹம்தி பஸ்­லிமின் மரணம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை நடாத்­து­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய பொரளை பொலி­ஸா­ருக்கு நேற்று உத்­த­ர­விட்டார்.

குறித்த குழந்­தையின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை பொரளை பொலிஸார் நேற்று நீதி­மன்றில் சமர்ப்­பித்­தனர். கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி எம்.என். ரூஹுல் ஹக்கின் கையெ­ழுத்­துடன் சமர்ப்­பிக்­கப்­பட்ட அந்த அறிக்­கையில், குழந்தை ஹம்தி ஒற்றை சிறு­நீ­ர­கத்­துடன் இருந்­துள்­ள­தா­கவும் அது தற்­செ­ய­லாக நடந்த விபத்தை ஒத்த சம்­ப­வத்தால் அகற்­றப்­பட்­ட­மையால் மர­ண­ம­டைந்­துள்­ள­தாக கூற‌ப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் நேற்று நீதி­மன்றில் பர­வ­லான விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­னது. குழந்தை ஹம்தி சார்பில் நேற்று மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வான் உவைஸ், வைத்­தியர் வை.எல்.யூசுப், லுத்பி, அர­விந்து மன­துங்க மற்றும் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட குழு­வினர் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையின் உள்­ள­டக்கம் தொடர்பில் நீதி­வானின் கவ­னத்தை ஈர்த்­தனர்.

இதன்­போது திறந்த மன்றில் பேசிய நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய, குறித்த பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை வழங்­கி­யுள்ள சட்ட வைத்­திய அதி­காரி ஏற்­க­னவே சில வழக்­கு­களில் வழங்­கி­யுள்ள அறிக்­கைகள் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ள­தாக கூறினார். அண்­மையில் கூட அவரால் வழங்­கப்­பட்ட அறிக்­கை­யொன்று சர்ச்­சைக்­குள்­ள­ானதா­கவும், அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிலு­வையில் உள்­ளதால் அது குறித்து கருத்து கூற தான் விரும்­ப­வில்லை எனவும் நீதிவான் இதன்­போது குறிப்­பிட்டார். அதனால் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையை மட்டும் மையப்­ப‌­டுத்தி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­காது விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொரளை பொலி­சா­ருக்கு உத்­த­ர­விட்ட நீதிவான், குழந்­தையின் மருத்­துவ ஆவ­ணங்­களை விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வழங்க கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லைக்கும் உத்­த­ர­விட்டார்.

இதன்­போது, குழந்தை ஹம்­திக்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட சத்­திர சிகிச்­சையின் பின்னர் அவ­ரது பழு­த­டைந்த இடது பக்க சிறு­நீ­க­ரத்­துக்கு மேல­தி­க­மாக நல்ல இயங்கு நிலையில் இருந்த வலது பக்க சிறு­நீ­ர­கமும் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக சட்­டத்­த­ர­ணி­களால் நீதி­மன்றின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

குறிப்­பாக சத்­திர சிகிச்­சையின் பின்னர், அகற்­றப்­பட்ட ஒரு சிறு­நீ­ரகம் மட்டும் ஆய்வு கூடத்­துக்கு அனுப்­பப்பட்­டுள்­ளமை தொடர்பில் வைத்­தியர் சாந்­தினி குல­துங்­கவின் பெத்­த­லொஜி அறிக்­கையில் தெளி­வாகக் கூறப்­பட்­டுள்­ள­தாக சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றின் அவ­தா­னத்­துக்கு கொண்­டு­வந்­து வலது சிறு­நீ­ர­கத்­துக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்­பினர். குழந்­தைக்கு சத்­திர சிகிச்சை வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட அனைத்து ஆவ­ணங்­க­ளிலும் வலது, இடது என இரு சிறு­நீ­ர­கங்­களின் தொழிற்­பாடு தொடர்பில் தெளி­வாக கூறப்­பட்­டுள்ள நிலையில், எந்த அடிப்­ப­டையில் குழந்தை ஒற்றை சிறு­நீ­ர­கத்­துடன் இருந்­த­தாக சட்ட வைத்­திய அதி­காரி தெரி­விக்க முடியும் என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணிகள் குழாம் கேள்வி எழுப்­பினர்.
இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே விரி­வான விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, குழந்தை ஹம்­தியின் மரண விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. நேற்று குழந்தையின் தாய் பாத்­திமா ரிசானா அப்துல் காத­ரிடம் சாட்­சியம் பெறப்­பட்­டது. பொரளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­தகர் தயா­சி­ரியின் நெறிப்­ப­டுத்­தலில் இந்த சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்­டது.

இதன்­போது, கடந்த 2020.04.11 அன்று ஹம்தி, காசல் வீதி மகளிர் வைத்­தி­ய­சா­லையில் பிறந்­த­தா­கவும், பிறப்பில் அக்­கு­ழந்­தைக்கு எந்த நோய் நிலை­மையும் இருக்­க­வில்லை எனவும் தாயார் சாட்­சி­ய­ம­ளித்தார்.

ஒன்­பது மாதங்­களின் பின்னர் ஏற்­பட்ட நிலைமை மற்றும் அதற்­காக குழந்­தைக்கு அளிக்­கப்­பட்ட சிகிச்சை தொடர்பில் விரி­வாக சாட்­சி­ய­ம­ளித்த தாயார், 2023 பெப்­ர­வரி மாதம் இடம்­பெ­ற­வி­ருந்த சத்­திர சிகிச்­சை­யையே, வைத்­தி­யர்கள் முன் கூட்டி கடந்த 2022 டிசம்பர் மாதம் செய்­த­தாக குறிப்­பிட்டார்.

விஷேட வைத்­தியர் ரந்­துல ரண­வக்க, வைத்­திய நிபுணர் மலிக் சம­ர­சிங்க மற்றும் சத்­திர சிகிச்சை நிபுணர் நவீன் விஜேகோன் தொடர்­பிலும், அவர்கள் வழங்­கிய சிகிச்­சைகள் மற்றும் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையின் பெற்றோரை அழைத்து கூறிய விடயங்கள் தொடர்பிலும் தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்தார். தனது குழந்தையின் இரு சிறு நீரகங்களும் அகற்றப்பட்ட மையே அவரது உயிரிழப்புக்கு காரணம் என தான் நம்புவதாக தாயார் நீதிமன்றில் கூறினார்.

இதனையடுத்து மேலதிக மரண விசாரணை சாட்சிப் பதிவு எதிர்வரும் 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.