துருக்கி, சிரியா மக்களுக்கு உதவுவோம்

0 245

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடு­களில் கடந்த திங்கட் கிழமை ஏற்­பட்ட பாரிய பூமி­ய­திர்ச்சி அந்­நா­டு­களின் மக்­களை மாத்­தி­ர­மன்றி முழு உலக மக்­க­ளை­யுமே பாரிய சோகத்­திலும் அதிர்ச்­சி­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது. இது­வரை 12 ஆயிரம் பேர் வரை உயி­ரி­ழந்­துள்­ள­துடன் காய­ம­டைந்­த­வர்­களின் எண்­ணிக்­கையும் 40 ஆயி­ரத்தை தாண்­டி­யுள்­ளது.

பூமி­ய­திர்ச்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளி­லி­ருந்து கிடைக்கும் செய்­திகள், புகைப்­ப­டங்கள், வீடியோ காட்­சிகள் மனதை உலுக்­கு­வ­தாக உள்­ளன. ஏலவே பொரு­ளா­தார நெருக்­கடி, போர், அடிப்­படை வச­தி­க­ளின்மை மற்றும் கடும் குளி­ரான கால நிலை போன்ற கார­ணி­களால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த மக்­க­ளுக்கு இப் பூகம்பம் பேரி­டியாய் வந்­தி­றங்­கி­யி­ருக்­கி­றது. அம்­மக்கள் படும் அவஸ்­தை­களை வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யா­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மக்­களை மீட்­ப­தற்கும் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கு­மான ஏற்­பா­டு­களை துருக்­கிய அர­சாங்கம் அந்­நாட்டின் அதிபர் ரஜப் தையிப் அர்­துகான் தலை­மையில் முன்­னெ­டுத்து வரு­கி­றது. இதற்­கென 5.3 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை அவர் ஒதுக்­கி­யுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்த அவர் மக்கள் மத்­தியில் உரை­யாற்­றினார். இது அல்­லாஹ்வின் ஏற்­பாடு என்றும் அதனைப் பொருந்திக் கொண்டு நாம் முன்­னேறிச் செல்ல வேண்டும் என்றும் அவர் மக்­களை நம்­பிக்­கை­யூட்­டினார்.

“இது அல்­லாஹ்வின் ஏற்­பாடு, அவன் நாடி­யதை நிறை­வேற்­றுவான். நாம் இழந்­த­வர்­களை ஒரு பொழுதும் மீட்­டெ­டுக்க முடி­யாது. எனினும் வீடு­களை இழந்­த­வர்கள் சஞ்­ச­லப்­ப­டா­தீர்கள். உங்கள் வீடு­களை நிர்­மா­ணிக்க ஒரு லீரா (துருக்கி நாணயம்) கூட நீங்கள் செல­வ­ழிக்க வேண்­டி­ய­தில்லை. நீங்கள் இழந்­த­தை­விட சிறந்த வீடு­களை நாங்­களே கட்டித் தரு­கிறோம். ஒரு மரத்­தைக்­கூட இழந்­தி­ருந்தால் ஒன்­றுக்குப் பத்து மரங்­களைத் தரு­கிறோம்” என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பூமி­ய­திர்ச்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடு­க­ளுக்கு சர்­வ­தேச நாடுகள் உதவ முன்­வந்­துள்­ளன. ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் என்­ப­னவும் பாரி­ய­ள­வி­லான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளன.

இதேவேளை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பணிப்­பு­ரைக்கு அமைய துருக்­கியில் ஏற்­பட்ட பூமி­ய­திர்ச்­சியில் சிக்­கி­ய­வர்­களை மீட்­ப­தற்­கான உத­வியை வழங்க இலங்கை முன்­வந்­துள்­ள­தாக வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரி­வித்­துள்ளார். துருக்­கியின் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரை தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்­பிட்­டுள்ளார்.

துருக்கி கடந்த காலங்­களில் இலங்­கைக்கு பாரிய உத­வி­களை வழங்­கிய நாடாகும். குறிப்­பாக முஸ்லிம் உலகில் எந்­த­வொரு நாடு பாதிக்­கப்­பட்­டாலும் அம் மக்­க­ளுக்க உத­வு­வதில் துருக்கி முந்திக் கொண்டு செயற்­ப­டு­வதும் கண்­கூ­டாகும். மியன்­மாரில் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்­ட­போது அதற்­காக குரல் எழுப்­பிய, நிவா­ரண உத­வி­களை வழங்­கிய, நேரில் சென்று அம் மக்­க­ளுக்கு உத­விய நாடாக துருக்­கியும் அதன் அதிபர் அர்­து­கானும் விளங்­கு­வதை இந்த இடத்தில் நினை­வூட்­டு­வது பொருத்­த­மாகும். அந்­த­வ­கையில் பாதிக்­கப்­பட்­டுள்ள துருக்­கிக்கும் அதன் அயல் நாடான சிரி­யா­வுக்கும் உதவ முழு உல­கமும் முன்­வர வேண்டும்.

அர­சாங்­கத்தின் உத­விகள் ஒரு­பு­ற­மி­ருக்க, துருக்கி மற்றும் சிரி­யாவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு முடி­யு­மான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு நாம் ஒவ்­வொ­ரு­வரும் கட­மைப்­பட்­டுள்ளோம். ஆந்த வகையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வும்­பொ­ருட்டு நாட­ளா­விய ரீதி­யி­லான நிதி சேக­ரிப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்து நாட்­டி­லுள்ள நிறு­வ­னங்கள் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்­புகள் இணைந்து நாட­ளா­விய ரீதியில் உள்ள பள்­ளி­வா­சல்கள் ஊடாக இந்த நிதி சேக­ரிப்பு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்க வேண்டும். சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நேபா­ளத்தில் ஏற்­பட்ட பூமி­ய­திர்ச்­சியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிதி­உ­த­வி­களை உலமா சபை வழங்­கி­யது நினை­வி­ருக்­கலாம். அதே­போன்று துருக்கி மற்றும் சிரியா மக்­க­ளுக்கும் இன்­றைய இக்­கட்­டான கால­கட்­டத்தில் உதவிக் கரம் நீட்ட நாம் முன்­வர வேண்டும்.

இலங்­கையும் பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்கித் தவிக்­கி­றது. இங்­குள்ள ஒவ்­வொரு பிர­ஜையும் தனது அன்­றாட வாழ்வைக் கொண்டு செல்­வதில் பொரு­ளா­தார ரீதி­யாக பலத்த சவால்­களை எதிர்­கொள்­வதை நாம் அறிவோம். எனினும் ஒரு நொடிப் பொழுதில் அனைத்­தையும் இழந்து நிற்கும் துருக்கி, சிரியா மக்­களை விட நாம் எவ்­வ­ளவோ சிறப்­பான, நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யையே வாழ்ந்து வரு­கிறோம். அந்த வகையில் அம் மக்­களை நினைவில் கொண்டு அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை நம்­மிடம் இருப்­ப­வற்றில் இருந்து வழங்­குவோம். இப் பணியில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள், இஸ்­லா­மிய அமைப்­புகள், சிவில் நிறு­வ­னங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் என சகலரும் ஒன்றுபட்டுப் பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

அதேபோன்றுதான் கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னமும் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் உயிரிழந்த மக்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்கவம் ஐவேளை தொழுகையில் பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மக்களின் கஷ்டங்களை இலகுபடுத்துவானாக. இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.