உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஹஜ்ஜுல் அக்பர் விடுதலையானார்

வெளிநாட்டு பயணத் தடையும் நீக்கப்பட்டது

0 229

(எம்.எப். அய்னா)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை செய்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய கைது செய்­யப்­பட்ட ஜமா­அதே இஸ்­லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் நீதி­மன்­றத்­தினால் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் இருந்து வந்த நிலையில், அவ­ருக்கு எதி­ராக வழக்­கினை முன் கொண்டு செல்ல போது­மான சான்­றுகள் இல்­லா­மையால், அவ­ருக்கு எதி­ராக மேல­திக நட­வ­டிக்கை எத­னையும் எடுப்­ப­தில்லை என சட்ட மா அதிபர் திணைக்­களம், கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்த நிலையில், விடு­தலை செய்­வ­தற்­கான உத்­த­ரவை கொழும்பு மேல­திக நீதிவான் ஷெஹான் அம­ர­சிங்க பிறப்­பித்தார். அதன்­படி, இது­வரை உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் வெளி­நாடு செல்ல பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த தடை உத்­த­ர­வை­யி­னையும் நீக்கி நீதிவான் ஷெஹான் அம­ர­சிங்க உத்­த­ர­விட்டார்.

தனது கைது, தடுத்து வைப்­புக்கு எதி­ராக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சார்பில் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு கடந்த வாரம் விசா­ர­ணைக்கு வந்த போது, அவ­ருக்­காக சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவை­ஸுடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் ஆஜ­ராகி விட­யங்­களை முன் வைத்­தி­ருந்­தார். இவ்­வா­றான நிலையில் அம்­மனு குறித்து ஆஜ­ரா­கி­யி­ருந்த அரச சட்­ட­வாதி, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ராக வழக்­கினை முன் கொண்டு செல்­வ­தில்லை எனவும் அது தொடர்­பி­லான சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையை கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அனுப்­பி­யுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே நேற்று நீதிவான் நீதி­மன்றில் வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, அந்த ஆலோ­ச­னைக்கு அமை­வாக அவர் விடு­தலை செய்­யப்­பட்டார்.
முன்­ன­தாக கடந்த 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை கைது செய்­தி­ருந்­தது. அது 21/4 அன்று கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளிலும் மட்­டக்­க­ளப்­பிலும் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை, அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுக்கு இலங்­கைக்குள் மீள பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்க, அதனை கட்­டி­யெ­ழுப்ப உத­வி­யமை மற்றும் இனங்­க­ளுக்கு இடையே முரண்­பா­டு­களை தோற்­று­விக்க நட­வ­டிக்­கை எடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரி­லாகும்.

முதல் தடவை கைது செய்­யப்­பட்டு சி.சி.டி.யினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை விசா­ரித்த போது, அவ்­வி­சா­ர­ணை­களில் திருப்தி இல்­லாமல், அவர் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்தார். அங்கும் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்ட பின்­ன­ரேயே, சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரி­வி­னரின் கோரிக்­கைக்கு அமை­யவே அவர் தடுப்புக் காவலில் இருந்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே, கடந்த 2021 மே 12 ஆம் திகதி அவர் மீளவும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார். அது முதல் அவர் கடந்த 2022 ஜன­வரி 11 ஆம் திக­தி­ வரை தொடர்ந்து தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டார். இந் நிலையில் அவ­ருக்கு எதி­ராக பயங்கரவாத தடைச் சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தனர்.

சட்ட மா அதி­பரின் இணக்­கப்­பாட்­டுடன், அவ­ருக்கு 2022 ஜன­வரி 11 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் சந்­திம லிய­னகே பிணை­ய­ளித்து உத்­த­ர­விட்­டி­ருந்தார்.
சட்ட மா அதி­பரின் இணக்­கப்­பாடு, மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தரவின் கையெ­ழுத்­துடன் கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலையில், 300 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடு­விக்­கப்­பட்டார். அத்­துடன் ஒவ்­வொரு ஞாயிற்றுக் கிழ­மையும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரிவில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட வேண்டும் என நிபந்­தனை விதித்­தி­ருந்த நீதிவான், வெளி­நாடு செல்­வ­தையும் தடுத்து கடவுச் சீட்­டையும் முடக்கி உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றுக்கு தனது நிலைப்பாட்டை அனுப்பியுள்ள சட்ட மா அதிபர் திணைக்களம், குறித்த வழக்கிலிருந்து உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விடுதலை செய்வதாகவும், அவருக்கு எதிராக வழக்கினை முன் கொண்டு செல்வதில்லை எனவும் அறிவித்துள்ளது. இதனையடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.