மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து வழங்குகிறார் டாக்டர் ­ஷாபி

0 42

பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த காலப் பகு­திக்­கு­ரிய நிலுவை சம்­பளப் பணத்தில், வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சிய மருந்துப் பொருட்­களை கொள்­வ­னவு செய்து வழங்க குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் வைத்­திய அதி­காரி டாக்டர் ஷாபி சிஹாப்தீன் தீர்­மா­னித்­துள்ளார்.

சுகா­தார அமைச்­சி­ட­மி­ருந்து தனக்கு கிடைக்கப் பெற்­றுள்ள 26 இலட்­சத்து 75 ஆயிரம் ரூபா­வுக்கும் இந்­தி­யா­வி­ருந்து மருந்துப் பொருட்­களைக் கொள்­வ­னவு செய்து கைய­ளிக்­க­வுள்­ள­தாக அவர் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

பண­மா­க­வன்றி, மருந்துப் பொருட்­க­ளாக வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் தொடர்பில் தான் சுகா­தார அமைச்சின் உய­ர­தி­கா­ரி­க­ளுடன் உரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அதற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
மேலும் விரைவில் கொழும்பில் வைத்து இந்த மருந்துப் பொருட்கள் சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­க­ளிடம் கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.