வைத்தியர் ­ஷாபிக்கு நிலுவை சம்பளம் கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை

மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்ட மா அதிபர்

0 235

( எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட விரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்பட்ட வைத்­தியர் ஷாபிக்கு, கட்­டாய விடு­முறை காலத்தில் வழங்­கப்­ப­ட­வேண்­டிய சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களை செலுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சட்ட மா அதிபர் நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

சட்ட விரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்பட்ட தனக்கு, வழங்­கப்­பட வேண்­டிய சம்­பள நிலுவை மற்றும் கொடுப்­ப­ன­வு­களை உட­ன­டி­யாக வழங்க உத்­த­ர­வி­டு­மாறு கோரி குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த எழுத்­தாணை ( ரிட்) மனு நேற்று (23) மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான சோபித்த ராஜ­க­ருணா மற்றும் தம்­மிக கனே­பொல ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இம்­மனு இவ்­வாறு பரி­சீ­லிக்­கப்­பட்­டது. இதன்­போதே அரச நிர்­வாக அமைச்சின் நிறு­வனங்கள் தொடர்­பி­லான பணிப்­பாளர் நாய­கத்தின் கடிதம் ஒன்­றினை மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுமதி தர்­ம­வர்­தன இதனை தெரி­வித்தார்.

குறித்த கடிதம் மூலம், வைத்­தியர் ஷாபி கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட காலப்­ப­கு­தியில், அவ­ருக்கு செலுத்­தப்­ப­ட­வேண்­டிய அடிப்­படை சம்­பளம், கொடுப்­ப­னவு, வாழ்க்கைச் செலவு கொடுப்­ப­னவு, இடைக்­கால கொடுப்­ப­ன­வுகள் உள்­ளிட்­ட­வற்றை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நீதி­மன்­றுக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வைத்­தியர் ஷாபி­யினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த எழுத்­தாணை மனுவில், குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சந்­தன கெந்­தன்­க­முவ, அவ்­வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பணிப்­பாளர் வைத்­தியர் ஏ.எம்.எஸ். வீர­பண்­டார, சுக­ாதார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, சுகா­தார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்­தியர் எஸ்.எம். முண­சிங்க, சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அசேல குண­வர்­தன ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

இம்­மனு கடந்த பெப்­ர­வரி 10 ஆம் திகதி முதன் முத­லாக ஆரா­யப்­பட்ட நிலையில் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ராகும் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் சுமதி தர்­ம­வர்­தன கோரிய கால அவ­கா­சத்­துக்கு அமைய, பின்னர் பெப்­ர­வரி 17 ஆம் திகதி பரி­சீ­லிக்­கப்­பட்­டி­ருந்­தது.
இதன்­போது, மனு­தா­ர­ரான வைத்­தியர் ஷாபி சார்பில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி புலஸ்தி ரூப­சிங்க, தனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­க­ப்­படும் அடிப்­படை ஒழுக்­காற்று விசா­ர­ணைகள், தற்­போ­தைய குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சந்­தன கெந்­தன்­க­முவ ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்பில் ஆட்­சே­ப­னை­களை முன் வைப்­ப­தாக கூறினார். குறித்த பணிப்­பாளர் பக்­கச்­சார்­பான நபர் எனவும், அவர் தொடர்பில் அரச சேவை ஆணைக் குழு­வுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது சட்­டத்­த­ரணி புலஸ்தி ரூபசிங்க குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நேற்றைய ( 23) பரிசீலனைகளின் போது, குறித்த ஆட்சேபனைகளை எதிர்ப்பதாக சட்ட மா அதிபர் தரப்பில் ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன மன்றில் குறிப்பிட்டார்.

இந் நிலையில் இம்மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.