முஸ்லிம் சேவையில் நிலவும் குறைபாடுகள் தீர்க்கப்படும்

முஸ்லிம் மீடியா போரம் மாநாட்டில் ஊடக அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு

0 459

(ஏ.எல்.எம்.சத்தார், ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவையில் பணிப்­பாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டாமை உள்­ளிட்ட பல­த­ரப்­பட்ட குறை­பா­டு­க­ளுக்கு விரைவில் தீர்­வினைப் பெற்றுக் கொடுப்பேன் என ஊட­கத்­துறை அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது பேராளர் மாநாடு கொழும்பு அல்-­ஹி­தாயா கல்­லூ­ரியின் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்­கி­ழமை காலை போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலை­மையில் நடை­பெற்­றது.

அதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு உறு­தி­ய­ளித்தார்.

இந் நிகழ்வில் போரத்தின் தலைவர் என். எம். அமீன் உரை­யாற்­று­கையில், முன்னாள் கல்வி அமைச்சர் கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத், இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவைக்­கென நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். பின்னர் முன்னாள் ஆளுநர் மர்ஹூம் அலவி மௌலா­னா­வினால் மேலும் நேரம் ஒதுக்கிக் கொடுக்­கப்­பட்­டது. இன்று தினமும் 6 மணித்­தி­யா­லங்கள் முஸ்லிம் சேவை இடம்­பெ­று­கி­றது. ஆனால் ஐந்து பேரே இச்­சே­வையில் பணிக்கு அமர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

முஸ்லிம் வர்த்­த­கர்­களால் பல மில்­லியன் ரூபா நிதி அனு­ச­ர­ணை ­இச்சேவைக்­காக வழங்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இதர சேவை­க­ளுக்குப் போன்று முஸ்லிம் சேவைக்கும் பணிப்­பாளர் ஒருவர் அமர்த்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார்.

ஊடக அமைச்சர் தனது உரையில் இதற்கு பதி­ல­ளிக்கும் போது மேலும் கூறி­ய­தா­வது, நான் ஊடக அமைச்­ச­ராக பத­வி­யேற்ற மறு­தி­னமே நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் தொலை­பேசி ஊடாக என்னைத் தொடர்பு கொண்டு முஸ்லிம் சேவை இடை­நி­றுத்­தப்­பட்ட தக­வலைச் சொன்­னார்கள். உடனே செயலில் இறங்­கிய நான், பிறி­தொரு கல்வி நிகழ்ச்சி ஒன்­றுக்­காக முஸ்லிம் சேவை நேரம் பெறப்­பட்­டாலும் கூட, அதனை நிறுத்தி விட்டு முஸ்லிம் சேவைக்கு மீண்டும் அதனை வழங்க வழி வகுத்துக் கொடுத்தேன் என்றார்.
இந் நிகழ்வில் அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
அர­சாங்­கத்தின் கொள்கை ஊடக தணிக்கை அல்ல. ஒழுங்­கு­ப­டுத்தல் மற்றும் சீராக்­கலே. ஊடகம் மற்றும் தொடர்­பாடல் நெருப்­பினைப் போன்­றது. அதனை சரி­யான முறையில் பிழை­யின்றி பயன்­ப­டுத்­தினால் பெரும் நன்­மைகள், பயன்கள் கிடைக்கும். தவ­றான முறையில் பயன்­ப­டுத்­தினால் அழி­வு­களே ஏற்­படும்.

தவ­றான அர­சியல் மற்றும் தவ­றான ஊடக பயன்­பாடு கார­ண­மா­கவே சகோ­தர மக்­களை சந்­தே­கத்­துடன், வைராக்­கி­யத்­து­டனும் நோக்கும் நிலைமை உரு­வா­னது. இதனால் சகோ­தர மக்கள், சகோ­தர சமூகம் வேத­னை­க­ளுக்­குள்­ளா­னது, பிள­வுகள் ஏற்­பட்­டன என்­பதை கவ­லை­யுடன் ஏற்றுக் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

இலங்கை பல் இன, பல் மத, பல் கலா­சா­ரங்­களைக் கொண்ட நாடாகும். இவ்­வா­றான நாட்டில் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு மற்றும் சகோ­த­ரத்­துவம், ஒற்­றுமை என்­ப­ன­வற்­றுக்­காக இலங்கை முஸ்லிம் மீடியா போரம் ஆற்றி வந்­துள்ள சேவைகள் அளப்­ப­ரி­யன.
நாம் ஒன்­றாக எழுந்­தி­ருக்க வேண்­டு­மே­யன்றி பிள­வு­பட்டு கீழே வீழ்ந்து விட இட­ம­ளிக்கக் கூடாது. இவ்­வாறு நாம் இலங்­கையைப் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டு­மென்றால் நாம் எம்­மி­டையே பொறுமை, புரிந்­து­ணர்வு, ஒற்­றுமை என்­ப­வற்றைக் கடைப்­பி­டிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

இலங்­கையின் கல்வி முறைமை சிறந்த சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களை உரு­வாக்­கு­கி­றது. என்­றாலும் சிறந்த இலங்­கை­யர்­களை உரு­வாக்­கு­வ­தில்லை. உலக வர­லாறு முழு­வ­திலும் மனித முன்­னேற்­றத்­துக்கும், மனித உரி­மை­க­ளுக்கும் முஸ்லிம் உலகம் அளித்த பங்­க­ளிப்­புகள் ஒப்­பற்­றவை. உமர் கையாம் போன்ற பல்­துறை கலை­ஞர்கள் எழு­திய நூல்கள் மற்றும் லெபனான் நாட்­டவர் கலீல் ஜிப்ரான், காலித் ஹுசைன் போன்ற இலக்­கி­ய­வா­தி­களின் படைப்­புகள் மற்றும் விஞ்­ஞா­னி­களின் கண்­டு­பி­டிப்­புகள் பற்றி நாம் ஏன் பேசா­ம­லி­ருக்­கிறோம். இந்து அரபி எண்­களை உல­குக்கு வழங்­கி­யவர் யார்?

எமது நாட்டை எடுத்­துக்­கொண்டால் நாம­றிந்த அர­சி­யல்­வாதி பதி­யுதீன் மஹ்மூத். அமைச்­ச­ரா­க­வி­ருந்து இலங்­கையின் கல்­வித்­து­றைக்கு எத்­த­கைய மேலான பங்­க­ளிப்­புக்­களைச் செய்­துள்ளார்.? ரி.பி. ஜாயா, அலவி மௌலானா என்போர் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துக்­காக எவ்­வ­ளவு பாரிய பங்­க­ளிப்­பினைச் செய்­துள்­ளார்கள். தற்­போ­தைய அமைச்சர் அலி­சப்ரி தற்­கா­லத்­துக்கோர் உதா­ரண புரு­ஷ­ராவார்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் தொடர்­பா­டல்­களில் ஈடு­ப­டுவோர் என்ற வகையில் எங்­க­ளுக்கு பாரிய பொறுப்­புகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இன்று உலகின் கருத்­தினை வெளி­யிடும் மேடை ஊட­கமே.

கருத்து சுதந்­திரம் என்­பது ஏனையோர் ஏற்றுக் கொண்­டாலும், ஏற்றுக் கொள்­ளா­விட்­டாலும் எவ்­வித அழுத்­தங்­க­ளுக்கும் அடி­ப­ணி­யாது தங்கள் கருத்­தினை வெளி­யி­டு­வ­தற்கு உள்ள ஜன­நா­யக உரி­மை­யாகும். இந்த உரி­மையைப் பாது­காத்துக் கொள்­வது எமது பொறுப்­பாகும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ உட்­பட தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­னதும், ஊடக அமைச்­ச­ரான எனதும் கொள்கை தணிக்­கை­யல்ல ஒழுங்­கு­ப­டுத்­தலே. இன்று உங்­க­ளுக்கு கருத்துச் சுதந்­திரம் இல்­லாமற் போனால், அச்­சு­தந்­திரம் நாளை எனக்கும் இல்­லாமற் போகலாம் என்றார்.

நிகழ்வில் இந்­திய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நவாஸ் கனி கௌரவ அதி­தி­யாகக் கலந்து கொண்டார். கலா­நிதி எம்.சி. ரஸ்மின் விசேட உரை நிகழ்த்­தினார்.

இதன்­போது, இலங்­கையில் பணி­பு­ரியும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எதிர்­நோக்கும் தொழில் ரீதி­யான சவால்கள் குறித்து முஸ்லிம் மீடியா போரத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆய்­வ­றிக்­கையும் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது. அத்­துடன் ஊடக நிறு­வ­னங்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தக­வல்கள் அடங்­கிய விபரக் கொத்தும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புதிய நிர்வாக சபை தெரிவு
இரண்­டா­வது அமர்வில் புதிய நிர்­வாக சபைத் தெரிவு இடம்­பெற்­றது. புதிய தலை­வ­ராக சிரேஷ்ட பெண் ஒலி­ப­ரப்­பாளர் புர்கான் பீ இப்­திகார் தெரிவு செய்­யப்­பட்டார். செய­லா­ள­ராக ஊட­க­வி­ய­லா­ளர் எம்.ஜே. பிஷ்ரின் முஹம்மத், பொரு­ளா­ள­ராக சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் சிஹார் அனீஸ் ஆகியோர் தெரி­வா­கினர். புதிய செயற்­கு­ழுவும் இதன்­போது தெரிவு செய்­யப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் : எஸ்.எம்.சுரேந்திரன்,
ஏ.எஸ்.எம்.ஜாவித்)

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.