அம்பாறை மாவட்ட கிராமங்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்!

0 492

றிப்தி அலி

“எனது வீட்டின் இரண்டு சுவர்த் துண்­டு­களை யானை­யொன்று கடந்த சனிக்­கி­ழமை (12) நள்­ளி­ரவு 2.00 மணி­ய­ளவில் உடைத்­து­விட்டுச் சென்­றுள்­ளது. இதனால், நாங்கள் மிகவும் அச்­சத்­து­ட­னேயே இரவில் நித்­திரை செய்­கின்றோம்” என சம்­மாந்­துறை, மலை­யடி கிரா­மத்­தினைச் சேர்ந்த எம்.ஏ. உம்மு சல்மா கூறினார்.

எட்டு பிள்­ளை­களின் தாயாரான இவர் கடந்த 50 வரு­டங்­க­ளாக இக்­கி­ரா­மத்­தி­லேயே வாழ்ந்து வரு­கின்றார். எனினும், இந்தக் கிரா­மத்­திற்குள் முதற் தட­வை­யாக யானை­யொன்று புகுந்­துள்­ளமை ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கின்­றது என அவர் குறிப்­பிட்டார்.
நாட்டில் பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார சுமைக்கு மத்­தியில் எதிர்­பா­ராத வித­மாக இடம்­பெற்ற யானைத் தாக்­கு­த­லினால் சேத­மாக்­கப்­பட்­டுள்ள சுவர்­களை நிர்­மா­ணிக்க பல்­லா­யிரம் ரூபாய்­களை செல­விக்க வேண்­டி­யுள்­ளது என உம்மு சல்மா கவ­லை­யுடன் தெரி­வித்தார்.

இவரின் வீட்­டுக்கு அருகில் நெல் சந்­தைப்­ப­டுத்தல் சபையின் களஞ்­சி­ய­சாலை காணப்­ப­டு­கின்­றது. அதில் சுமார் 15 இலட்சம் கிலோ நெல் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இங்­குள்ள நெல்­லினைத் தேடியே இந்த யானைகள் வந்­தி­ருக்க வேண்டும் என அவர் சந்தேகிக்கிறார்.

உம்மு சல்­மாவின் வீட்­டினைப் போன்று சம்­மாந்­துறை பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட நான்கு கிராம சேவை­யாளர் பிரி­வு­க­ளி­லுள்ள 12 இடங்கள் யானை­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதற்­க­மைய, “கல்­ல­ரிச்சல் – 2 கிராம சேவை­யாளர் பிரிவில் இரண்டு இடங்­க­ளிலும், புளக் ஜே கிழக்கு கிராம சேவை­யாளர் பிரிவில் நான்கு இடங்­க­ளிலும், மலை­யடி கிராமம் – 2 கிராம சேவை­யாளர் பிரிவில் ஐந்து இடங்­க­ளிலும், விளி­னை­யடி – 1 கிராம சேவை­யாளர் பிரிவில் ஒரு இடத்­திலும் யானைகள் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளன” என சம்­மாந்­துறை பிர­தேச செய­லக அனர்த்த முகா­மைத்­துவ உத்­தி­யோ­கத்தர் எம்.எஸ்.எம். அஸா­றுடீன் தெரி­வித்தார்.

சுமார் 50 வரு­டங்கள் பழைமை வாய்ந்த நெல் சந்­தைப்­ப­டுத்தல் சபையின் களஞ்­சி­ய­சாலை உட்­பட நெல் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இடங்­களே அதி­க­மாக யானை­யினால் சேதத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் எந்­த­வித உயிர் ஆபத்­துக்­களும் இது­வரை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

“எமது ஊரின் எல்லைப் பிர­தே­சங்­களில் பல தட­வைகள் யானைகள் வந்து போயுள்­ளன. எனினும் நடு ஊரிற்குள் யானை நுழைந்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்” என சம்­மாந்­துறை நம்­பிக்­கை­யாளர் சபை உறுப்­பி­ன­ரான எம்.சீ.எம். ஹாரீஸ் தெரி­வித்தார்.
மக்கள் சப்த­மிட்டே குறித்த யானை­யினை துரத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஹாரீ­ஸினால் நடத்­தப்­படும் முன்­பள்ளி பாட­சா­லையின் மதில்­களும் யானை­களால் உடைக்­கப்­பட்­டுள்­ள­மை­யையும் சுட்­டிக்­காட்­டினார்.

“தாவர உண்­ணி­யான யானைகள் – புற்கள், தென்னை, வாழை, சோளம், கரும்பு மற்றும் மூங்கில் ஆகி­ய­வற்­றினை விரும்பி உண்­கின்­றன. ஒரு நாளில் சுமார் 18 மணித்­தி­யா­லங்கள் 140 – 270 கிலோ வரை­யான உண­வினை ஒரு யானை உட்­கொள்­கின்­றது” என தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரான ஏ.எம்.றியாஸ் அஹமட் எழு­திய “யானைகள்” எனும் நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை மாவட்­டத்தின் புத்­தங்­கல பிர­தே­சத்­தி­லுள்ள காட்டுப் பகு­தி­யினை அண்­டிய பிர­தே­சங்­களில் இடம்­பெறும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் கார­ண­மாக அங்­குள்ள யானை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டு­வ­துடன், உணவுத் தட்­டுப்­பாடும் ஏற்­ப­டு­கின்­றது என வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தின் அம்­பாறை மாவட்ட அலு­வ­ல­கத்தின் சிரேஷ்ட அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இதனால், உணவு தேடி யானைகள் இம்­மா­வட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­களை நோக்கி நகர்­கின்­றன. இவ்­வாறு உணவு தேடி நகர்ந்த சுமார் 50க்கும் மேற்­பட்ட யானை­களைக் கொண்ட கூட்­ட­மொன்­றினை கடந்த வெள்ளி, சனிக்­கி­ழ­மை­களில் மாவ­டிப்­பள்ளி, காரை­தீவு மற்றும் நிந்­தவூர் பிர­தே­சங்­களில் காண முடிந்­தது.

 

இந்த யானைகள், புத்­தங்­கல சர­ணாலயத்­தி­லி­ருந்து வளத்­தாப்­பிட்டி மற்றும் சொறிக் கல்­முனை ஊடா­கவே இங்கு வந்­துள்­ளன. இவ்­வாறு வருகை தந்த யானை­களில் ஒன்று சம்­மாந்­துறை பிர­தே­சத்­திற்குள் நுழைந்­த­மை­யி­னா­லேயே மேற்­கு­றிப்­பிட்ட 12 இடங்­களில் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த யானையின் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சம்­மாந்­துறை பிர­தேச செய­லா­ளரின் ஆலோ­ச­னைக்­க­மைய நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அனர்த்த நிவா­ரண உத்­தி­யோ­கத்­த­ரினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்­டி­லுள்ள 25 மாவட்­டங்­களில் 18 மாவட்­டங்கள் யானைகளின் அச்சுறுத்தலை எதிர்­நோக்­கி­யுள்­ளன. இதில் 8 மாவட்­டங்­களில் அடிக்­கடி யானை – மனித மோதல் பதிவாகியுள்ளது. இதில் அம்­பாறை மாவட்­ட­மு­மொன்­றாகும் என வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

இம்­மா­வட்­டத்தில் நெற் செய்கை இடம்­பெ­று­கின்ற சம­யத்தில் புத்­தங்­கல காட்­டினை அண்­மித்த பகு­தி­யி­லுள்ள விவ­சா­யிகள் காவல் பணியில் ஈடு­ப­டு­கின்­ற­மை­யினால் அக்­காலப் பகு­தியில் யானை­களின் வருகை கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

எனினும், நெல் அறு­வடை செய்­யப்­பட்­ட­தனை அடுத்தே இம்­மா­வட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­களில் யானை­களின் வருகை அதி­க­ரிக்­கின்­றது. இதனால், காட்டு யானை­க­ளி­ட­மி­ருந்து வேளாண்­மை­களை பாது­காத்துக் கொள்­ள­மு­டி­யாத நிலைக்கு ஒரு தொகுதி விவ­சா­யிகள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

நிந்­தவூர் – நெல்­லித்­தீ­வினை அண்­டிய வயற் பிர­தே­சத்தில் சுமார் 150 ஏக்கர் வேளாண்மை கடந்த சனிக்­கி­ழமை (13) வரை அறு­வடை செய்­யப்­ப­ட­வில்லை.
“பக­லிலும், இர­விலும் காட்டு யானை­களின் தொல்லை அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் 105 நாட்­களில் அறு­வடை செய்ய வேண்­டிய வேளாண்­மை­யினை 90 நாட்­களில் அறு­வடை செய்­கின்றோம்” என விவ­சா­யிகள் தெரி­வித்­தனர்.

“முழு­மை­யாக முற்­றாத நிலையில் யானை­க­ளி­ட­மி­ருந்து விவ­சா­யத்­தினை பாது­காக்கும் நோக்கில் பச்சை கதிர்­க­ளுடன் அறு­வடை செய்­கின்­ற­மை­யினால் எதிர்­பார்த்த இலாபம் கிடைக்­காது” எனவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

இர­சா­யன பச­ளைக்கு நாட்டில் தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ரூபாய்கள் செல­வ­ளித்து கடந்த 4 – 5 மாதங்கள் மேற்­கொண்ட விவ­சா­யத்­திற்கு தற்­போது எந்தப் பய­னு­மில்­லாமல் போய்­விட்­டது எனவும் அப்­பி­ர­தேச விவ­சா­யிகள் கவலை வெளி­யிட்­டனர்.

இதே­வேளை, பொது­மக்கள் வாழும் பிர­தே­சங்­களில் யானை நுழை­வதை தடுக்கும் நோக்கில் பல கோடிக்­க­ணக்­கான ரூபாய்­களை செல­வ­ளித்து மின்­சார வேலி அமைத்தல், அகழி தோண்டல் போன்ற வேலைத்­திட்­டங்கள் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இதற்­க­மைய நாட­ளா­விய ரீதியில் 5,000 கிலோ மீற்றர் மின்­சார வேலிகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் 150 கிலோ மீற்றர் மின்­சார வேலிகள் அம்­பாறை மாவட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றன.

எனினும் யானை – மனித மோதல் குறை­வ­டைந்தபாடில்லை. இவ்­வா­றான நிலையில், ஒலுவில், பள்­ளக்­காடு பிர­தே­சத்­தி­லுள்ள குப்பை மேட்டில் உணவு உண்­ப­தற்­காக யானைகள் அடிக்­கடி வரு­கின்­றன.

இந்தக் குப்­பை­யி­லுள்ள பிளாஸ்ரிக் பொருட்­களை உண்­ப­தனால் கடந்த எட்டு வரு­டங்­களில் சுமார் 20 யானைகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­க­மொன்று அண்­மையில் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து குப்பை மேட்­டினைச் சுற்றி அகழி தோண்­டப்­பட்டு யானைகள் உள்­நு­ழை­வதை தடுப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.
இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த யானைகள், மக்கள் வாழும் அஷ்ரப் நக­ரிற்குள் நுழைந்து மக்­களின் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விப்­ப­தாக அப்­பி­ர­தேச மக்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

யானை, மனித மோதலை கட்­டுப்­ப­டுத்­து­வ­தனை நோக்­காகக் கொண்டு செயற்­ப­டு­கின்ற வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தின் அம்­பாறை மாவட்­டத்­திற்­கான மூன்று அலு­வ­ல­கங்கள் – அம்­பாறை நகர், வளத்­தாப்­பிட்டி மற்றும் திருக்­கோவில் ஆகிய பிர­தே­சங்­களில் காணப்­ப­டு­கின்­றன. எனினும், இந்த அலு­வ­ல­கங்­க­ளுக்குத் தேவை­யான போதிய வளங்கள் இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை, “நாட்டில் மேற்­கொள்­ளப்­படும் திட்­ட­மி­டப்­ப­டாத அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளினால் யானை­களின் வாழ்­வி­டங்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. இத­னா­லேயே மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களை நோக்கி யானைகள் நகர்­கின்­றன” என தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரான சூழ­லி­யலாளர் ஏ.எம்.றியாஸ் தெரி­வித்தார்.
யானை பற்றிய போதிய விழிப்­பு­ணர்வு இது­வரை மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் அம்­பாறை மாவட்­டத்தின் யானைப் பாதை­யான சொறிக் கல்­முனை பிர­தே­சத்தில் காணப்­பட்ட நாணல் காட்­டுக்கு கடந்த வருடம் ஒரு குழு­வி­னரின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக தீ வைக்­கப்­பட்­டது என அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

இதன் விளை­வா­கவே இன்று எமது மாவட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­களில் யானைகள் படை­யெ­டுத்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

“ஒரு யானை 20 இலட்சம் மரங்­களை உரு­வாக்­கு­கின்­றன. இதனால் ஒரு யானை­யினை அழிப்­பது, கா­டொன்றை அழிப்­ப­தற்கு சம­னாகும். இதனால் யானைகள் பாது­காக்­கப்­பட வேண்டும்” எனவும் அவர் வலி­யு­றுத்­து­கின்றார்.

இதற்­காக அர­சி­யல்­வா­திகள், கொள்கை வகுப்­பா­ளர்கள், பொது­மக்கள், அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் என அனைத்து தரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். இதன் ஊடாக யானை – மனித மோதலை கட்­டுப்­ப­டுத்த முடியும் என்றும் றியாஸ் மேலும் வலியுறுத்தினார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.