அழகிய குணங்களால் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவோம்

இஸ்லாமிய மார்க்கம் என்பது அன்பு, மனித நேயம், ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உயர்ந்த விழுமியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இவற்றை உலகில் மலரச் செய்து தானும் தன்னைச் சூழவுள்ளவர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வழியமைத்துக் கொடுப்பதே உண்மையான முஸ்லிமின் பணியாகும், இதனை உணர்ந்த உண்மையான முஸ்லிம் தனது நாவினாலோ கரத்தினாலோ பிற மனிதர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கக் கூடியவனாக இருக்கவே மாட்டான். அதனால்தான் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை…

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

முஸ்லிம் என்பவன் தான் ஒரு முஸ்லிம் என்பதனை தனது பண்பாடுகள், நற்குணங்கள் மூலம் சமூகத்திற்குத் தெரியப்படுத்த முயற்சிக்க வேண்டும், ஒருவரது பண்பாடுகளிலும் நற்குணங்களிலும் உள்ள குறைபாடுகள் அவரது வணக்க வழிபாடுகளிலும் குறைபாடுகள் உள்ளன என்பதனையே பிரதிபலிக்கின்றது. அந்தவகையில் இஸ்லாம் எமக்கு கற்றுத்தரும் ஈமானின் அடிப்படை பண்புகளில் ஒன்றான வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்ற விடயத்தில் மிக எச்சரிக்கையுடனும் மிகக கவனமாகவும் நாம் செயற்பட வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்; "விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப்…

மார்க்கம் என்பது நன்மையை நாடுவதாகும்

"நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூ­லி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.” - அல்குர்ஆன் (18:88) நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது (பிறருக்கு) நன்மையை நாடுவது” என்று கூறியபோது, “யாருக்கு?” என நாங்கள் கேட்டோம்; அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) ஈமான் கொண்ட மனிதர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை சரியாக செய்து பிற மக்களுக்கு செய்ய வேண்டிய…

அழகாகப் பேசுங்கள், அழகானதைப் பேசுங்கள்

இறை விசு­வா­சி­களின் பேச்சில் உண்­மையும் அழகும் இருக்க வேண்டும், இத­யங்­களின் ஆழத்­தி­லி­ருந்து வரும் நேர்­மை­யான வார்த்­தை­க­ளா­கவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில்  உண்­மையும் நம்­ப­கத்­தன்­மையும் அழ­கான பேச்­சுக்­களும் ஓர் இறை­வி­சு­வா­சிக்­கான சிறந்த அடை­யா­ள­மாகும். நம்­பிக்கை கொண்­டோரே! அல்­லாஹ்­வுக்கு அஞ்­சுங்கள்! நேர்­மை­யான சொல்­லையே கூறுங்கள்! அல்­குர்ஆன் (33 : 70) (முஹம்­மதே!) அழ­கி­ய­வற்­றையே பேசு­மாறு எனது அடி­யார்­க­ளுக்குக் கூறு­வீ­ராக! ஷைத்தான் அவர்­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­துவான். ஷைத்தான்…