கொவிட் 19 குறித்த சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுக

மீறும் பள்ளி நிர்வாகிகள் பதவி நீக்கப்படுவர் என்கிறது வக்பு சபை

0 694

ஏ.ஆர்.ஏ.பரீல்

கொவிட் 19 வைரஸ் தொற்­றி­லி­ருந்தும் பாது­காப்புப் பெற்றுக் கொள்­வ­தற்­காக சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள அறி­வு­றுத்­தல்­களை பள்­ளி­வா­சல்கள் கண்­டிப்­பாக தொடர்ந்தும் பின்­பற்ற வேண்­டு­மெ­னவும் அவ்­வாறு பின்­பற்­றப்­ப­டாத பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் பதவி நீக்­கப்­ப­டு­வார்கள் எனவும் வக்பு சபை­யின் ­த­லைவர் சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

நாட்­டின் ­பல பகு­தி­க­ளில்­ அ­நே­க­மான பள்­ளி­வா­சல்­க­ளில் ­கொவிட் 19 வைரஸ் ­தொற்று தொடர்­பான சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்கள் பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை என  முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், பள்­ளி­வா­சல்­களில் ஜமா­அத் ­தொ­ழு­கை­க­ளின்­போது ஒரு மீற்றர் சமூக இடை­வெளி பேணப்­பட வேண்டும். அத்­தோடு ஒவ்­வொ­ரு­வரும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். பள்­ளி­வா­சலில் காபட் இடப்­பட்­டி­ருந்தால் அங்கு தரை­வி­ரிப்பு (முசல்லா) பயன்­ப­டுத்­தியே தொழு­கையில் ஈடு­பட வேண்டும். பள்­ளி­வா­சல்­களில் வுழூ செய்­வ­தற்­கான ஹவ்ழ் முடப்­பட்­டி­ருக்க வேண்டும். தொழு­கை­யா­ளிகள் ஹவ்ழ் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. காபட் இடப்­ப­டாது தரை­யி­லேயே தொழ வேண்டும்.

ஒவ்வொரு பள்­ளி­வா­சல்­க­ளிலும் சுகா­தார அமைச்சு ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்­றி­லி­ருந்தும் பாது­காப்புப் பெறு­வ­தற்­கான அறி­வு­றுத்­தல்கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­ற­னவா? என்­பது பள்­ளி­வாசல் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களில் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்கள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை திணைக்களத்தின் ஊழியர்கள் கண்காணிப்பார்கள் என்றார். இவ்விவகாரம் தொடர்பில் வக்பு சபை கடந்த செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்து தீர்மானம் நிறைவேற்றியது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.