அனைத்து மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன்

அடிப்படைவாத அமைப்புகளுக்கு இடமில்லை: தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

0 238

இந்த நாட்டில் ஜன­நா­யக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டதன் பின்னர் அவர் இந்­நாட்டின் அனைத்து மக்­க­ளதும் ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட வேண்டும். தனது பதவிக் காலத்­தினுள் ஒட்­டு­மொத்த இலங்கை மக்­க­ளுக்­கா­கவே சேவை­யாற்ற வேண்டும். தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்­காக மட்டும் சேவை­யாற்றும் கட்­டுப்­பா­டு­டை­ய­வ­ராக இருக்க முடி­யாது. ஆகவே ஒரு சமூ­கத்­திற்கு மட்டும் சேவை புரியும் அர­சியல் தலை­வ­ராக அல்­லாது அனைத்து மக்­க­ளி­னதும் அரச தலைவர் என்ற வகையில் மக்­க­ளுக்­காக சேவை­யாற்­றுவேன் என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

இலங்­கையின் 72 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு நேற்று கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் இடம்­பெற்­றது. அதில் உரை­யாற்­றிய போதே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தன­து­ரையில் மேலும் கூறி­ய­தா­வது,

இலங்கை ஒற்­றை­யாட்சி அர­சாகும். சுதந்­தி­ரமும், இறை­மையும் தன்­னா­திக்­கமும் கொண்ட ஜன­நா­யகக் குடி­ய­ர­சாகும். இலங்கை 500 ஆண்­டு­க­ளாக ஏகா­தி­பத்­திய கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ரம்­பெற்று இன்­றுடன் 72 வரு­டங்­க­ளா­கின்­றன. இன்­றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் பெற்ற சுதந்­தி­ரத்தை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக உறு­தி­பூண்டே உங்­க­ளுக்கு உரை நிகழ்த்­து­கின்றேன். இச்சுதந்­தி­ரத்தைக் கைப்­பற்றிக் கொள்­வ­தற்கும் அதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கு­மாக தம்மை அர்ப்­ப­ணித்த சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பேகர் இனத் தலை­வர்­க­ளுக்கு எனது பெரு­ம­திப்பை செலுத்­து­கின்றேன்.

இலங்கை வாழ் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சுதந்­தி­ர­மா­கவும் பாது­காப்­போடும் வாழும் உரி­மை­யுண்டு. அவர்­க­ளது சுதந்­தி­ர­மாக சிந்­திக்கும் உரி­மை­யையும், சுயா­தீ­ன­மாக அபிப்­பி­ராயம் கொள்ளும் உரி­மையைப் போன்று சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை தெரி­விக்கும் உரி­மை­யையும் நாம் எப்­பொ­ழுதும் உறுதி செய்வோம். எந்­த­வொரு பிர­ஜைக்கும் தான் விரும்பும் மதத்தை வழி­ப­டு­வ­தற்­கா­க­வுள்ள உரி­மைக்கு நாம் எப்­பொ­ழுதும் மதிப்­ப­ளிப்போம். தத்­த­மது நண்­பர்­களை தெரிவு செய்­வது போன்று அமை­தி­யான ஒன்றுகூட­லுக்கும் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் உரிமை உள்­ளது. இலங்கைப் பிர­ஜை­யொ­ருவர் தான் தெரிவு செய்துகொள்ளும் மக்கள் பிர­தி­நி­திகள் ஊடாக அர­சியல் செயற்­பாட்­டிலும் அரச நிரு­வா­கத்­திலும் சம்­பந்­தப்­படும் உரி­மையை நாம் எப்­பொ­ழுதும் பாது­காப்போம்.

இவை அனைத்தும் எவ­ராலும் சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாத மனித உரி­மைகள் என்றே நாம் கரு­து­கிறோம். ஜன­நா­ய­கத்தை சீரான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்தும்போது எம்மால் சரி­ச­மப்­ப­டுத்த வேண்­டிய பல துறைகள் உள்­ளன.

நிறை­வேற்­றுத்­துறை, சட்­ட­வாக்­கத்­துறை மற்றும் நீதித்­து­றை­யா­னது இதன்போது மிக முக்­கி­ய­மா­கி­றது. அதி­காரப் பர­வ­லாக்­கலின் போது மத்­திய அரசு மற்றும் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பொறுப்­புக்­க­ளுக்கு இடையே சிறந்த ஒரு­மைப்­பாடு இருக்க வேண்டும். பொதுமக்­களும் பாது­காப்புத் துறை­களும் ஒவ்­வொ­ரு­வரின் பொறுப்­புக்­களை புரிந்துகொள்ள வேண்டும் என்­ப­துடன் பிர­ஜை­க­ளுக்கு தனிப்­பட்ட உரி­மை­களைப் போன்று கூட்­டு­ரி­மை­களும் உள்­ள­ன­வென்­பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அர­சுக்கும் மக்­க­ளுக்கும் இடை­யே­யான கூட்­டி­ணைப்பு இதன்­போது முக்­கி­ய­மா­கி­றது.

சுதந்­தி­ரத்தின் பின் இக்குடி­ய­ர­சுக்குள் ஆட்­சிக்கு வந்த ஒவ்வோர் அரச தலை­வரும் சர்­வ­ஜன வாக்கு அதி­கா­ரத்தின் மூல­மா­கவே தெரிவு செய்­யப்­பட்­டனர். அவ்­வாறு மக்கள் வாக்­கினால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தற்­போ­தைய அரச தலைவர் என்ற வகையில் எனது பதவிக் காலத்­திற்குள் நாட்டின் அனை­வ­ரி­னதும் தலை­வ­ராக, நாட்டின் நலன்­க­ருதி உய­ரிய அர்ப்­ப­ணிப்­போடு சேவை­யாற்ற நான் தயா­ராக உள்ளேன். ஜன­நா­யக ரீதி­யி­லான ஒரு நாட்டில் முறை­யாக அரச தலைவர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டதன் பின்னர் அவர் இந்­நாட்டின் அனைத்து மக்­க­ளதும் ஜனா­தி­ப­தி­யாவார். அவர் தனது பதவிக் காலத்­தினுள் முழு­மொத்த இலங்கை மக்­க­ளுக்­கா­கவே சேவை­யாற்ற வேண்டும். அவர் தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு மட்டும் சேவை­யாற்றும் கட்­டுப்­பா­டு­டை­ய­வ­ராக இருக்க முடி­யாது. ஒரு சமூ­கத்­திற்கு மட்டும் சேவை புரியும் அர­சியல் தலை­வ­ரல்­லாது அனைத்து மக்­க­ளி­னதும் அரச தலைவர் என்ற வகையில் சேவை புரியும் நோக்கு எனக்­குள்­ளது.

ஜனா­தி­ப­தி­யாக இன்று நான் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வது இன, மத, கட்சி அல்­லது வேறு எவ்­வித பேதங்­க­ளு­மின்றி ஒட்­டு­மொத்த இலங்கை மக்­க­ளுக்­கா­க­வே­யாகும். எந்­த­வொரு ஜன­நா­யக ரீதி­யி­லான சமூ­கத்­திலும் நன்­மைக்­கா­கவும் முன்­னேற்­றத்­திற்­கா­கவும் பல­மான நிறை­வேற்­றுத்­து­றையும், சட்­ட­வாக்­கத்­து­றையும் அதே­போன்று சுயா­தீன நீதி­மன்­றமும் தேவைப்­ப­டு­கி­றது. ஒரு நாட்டின் இருப்­புக்­காக இன்­றி­ய­மை­யாத இம் முக்­கிய நிறு­வ­னங்கள் தொடர்பில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மக்கள் நம்­பிக்கை சீர்­கெ­டு­மானால் அது நாட்டின் அரா­ஜ­கத்­திற்கு கார­ண­மாகும். ஆகையால் அனைத்துத் தரப்­பு­களும் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களை நாட்டின் நலன் கரு­தியும், மக்­களின் இறை­மையை பாது­காப்­ப­தற்­கான தேசிய நோக்­கையும் கட­மை­யையும் நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது.

இந்­நாட்டு மக்­களின் தேவை­களை பூர்த்­தி­செய்யும் கடப்­பாடு எனக்கு உண்டு. அது எனது பொறுப்பும் கட­மை­யு­மாகும். அதனை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான எந்­த­வொரு தடை­யையும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­ட­மி­ருந்தோ அல்­லது சட்­ட­வாக்கத் துறை­யி­ன­ரி­ட­மி­ருந்தோ, அல்­லது நீதித்­து­றை­யி­ட­மி­ருந்தோ நான் எதிர்­பார்ப்­ப­தில்லை. மக்­களின் சுதந்­தி­ரத்தை மதிப்­பது மட்­டு­மல்­லாது அதன் வளர்ச்­சிக்­கா­கவும் அர்த்­த­முள்ள ஜன­நா­யக நாட்டில் அர­சியல், பொரு­ளா­தார ரீதியில் சுதந்­தி­ர­மாக செய­லாற்­று­வ­தற்­கா­கவும் உறு­தி­ய­ளிக்­கின்றேன். நீண்ட கால­மாக அர­சாங்க நிரு­வாக விஸ்­த­ரிப்பு முறை­யினால் மக்­களின் சுதந்­திரம் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது. தகுந்த ஆய்வு அல்­லது ஒருங்­கி­ணைப்­பின்றி விதிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­திட்­டங்கள் மற்றும் ஒழுங்கு விதி­க­ளினால் இன்று மக்கள் பெரும் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். இத­னூ­டாக பல ஊழல்­க­ளுக்கும் மோச­டி­க­ளுக்கும் வழி­வ­குக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் மக்கள் காலம், வளங்கள் மற்றும் ஜீவ­னோ­பாயம் போன்­ற­வற்றை இழக்கும் சந்­தர்ப்பம் அதி­க­மாகும்.
தவ­றி­ழைக்­கின்ற அற்­ப­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக உட­னுக்­குடன் சட்­டத்தை நடை­முறைப்படுத்­து­வதே தவிர பெரும்­பா­லா­ன­வர்­களின் மீது தேவை­யற்ற கட்டுப்­பா­டு­களை விதிப்­பதை நாங்கள் மேற்­கொள்ளக் கூடாது. சட்­டத்தை மதித்தும், ஒழுக்கப் பண்­பாட்­டோடும், நன்­நெ­றி­க­ளோடும் வாழ்­வ­தற்­கான முறை­யான சுதந்­தி­ரத்தை நாம் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்கள் சுதந்­தி­ர­மாக சுய­தொ­ழி­லினை, பாரம்­ப­ரிய கைத்­தொ­ழி­லினை அல்­லது தொழிற்­று­றை­யினை புரி­வ­தற்குத் தடை­யாகும் காலங்­க­டந்த சட்­ட­திட்­டங்கள், வரி மற்றும் ஒழுங்கு விதிகள் கட்­ட­ணங்கள் துரி­த­மாகத் திருத்­தப்­பட வேண்டும்.

மக்­களின் உயிர் வாழும் உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர்கள் மேல் சுமத்­தப்­பட்­டுள்ள அநா­வ­சி­ய­மான தடை­களை நீக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை நாம் எடுப்போம். இலங்கை பழைமை வாய்ந்த வர­லாற்­று­டைய நாடாகும். பௌத்த தத்­து­வத்­தினால் போஷிக்­கப்­பட்ட சகல மதத்­த­வர்­க­ளுக்கும், சகல இனத்­த­வர்­க­ளுக்கும் பாது­காப்­பான நாடாகும். எனது ஆட்சிக் காலத்­தினுள் எவரும் தான் விரும்பும் மதத்தை வழி­ப­டு­வ­தற்­கான சுதந்­தி­ரத்தை நான் உறு­திப்­ப­டுத்­துவேன். நீதி, நியா­யத்தை உறு­திப்­ப­டுத்தும் அத்­துடன் எந்­த­வொரு பிர­சைக்கும் அநீதி விளை­யாத தார்­மீ­க­மான அரச நிரு­வாக முறையை நடாத்­து­வ­தற்கே பௌத்த தத்­து­வத்தின் மூலம் எமது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆலோ­சனை கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

எனது பத­விக்­கா­லத்­தி­னுள்ளும் இந்­நாட்டில் பௌத்த தத்­து­வத்தைப் பாது­காத்து போஷிப்­ப­தற்­காக நான் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவேன். சமூக மற்றும் பொரு­ளா­தார முரண்­பா­டு­களை ஒழித்தல் மூலமே மக்­க­ளுக்கு உண்­மை­யான சுதந்­தி­ரத்தை பெற்றுக் கொடுக்க முடி­கி­றது. ஒற்­றை­யாட்­சி­யினுள் எல்லாப் பிர­ஜை­க­ளுக்கும் சம உரி­மைகள் கிடைக்­க­ப்பெற வேண்டும்.

இன்றும் எமது மக்கள் சமூ­கத்­தினுள் இருப்­பவர், இல்­லா­தவர் எனும் பெரு­ம­ள­வி­லான ஏற்­றத்­தாழ்வு இருக்­கின்­றது. நகர்ப்­புறப் பிர­தே­சங்­களில் உள்ள வச­திகள் கிரா­மியப் பிர­தே­சங்­களில் இல்லை. எல்லாப் பிர­தே­சங்­க­ளிலும் கல்வி வச­திகள் சம­நி­லையில் இல்லை. எல்லாப் பிர­தே­சங்­க­ளிலும் சுகா­தார வச­திகள் சம­நி­லையில் இல்லை. தொழில் வாய்ப்­புக்கள் எல்லாப் பிர­தே­சங்­க­ளுக்கும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இவை இன ரீதி­யா­கவோ, மத ரீதி­யா­கவோ வலுப்­படும் நிலை­மைகள் அல்ல. அவை நாட்டின் பொதுப் பிரச்­சி­னை­க­ளாகும். வாழும் சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்தும் போது நாங்கள் முதன் முத­லாக செய்ய வேண்­டி­யது மக்­களின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களைத் தீர்த்­த­லாகும். ஆகவே தான் நாங்கள் மக்­களின் வறு­மையை ஒழித்­தலை அரசின் முன்­னு­ரி­மை­யாகக் கரு­து­கின்றோம். முப்­பது வருட கால யுத்­தத்தைப் போன்று மேலும் பல்­வேறு கார­ணங்­க­ளினால் எமது நாட்டின் அபி­வி­ருத்திப் பணிகள் மிகவும் தாம­த­மா­கி­யுள்­ளன. எம்மால் மேலும் காலத்தை வீணாக்க முடி­யாது. எமது நாட்டின் முக்­கி­ய­மாக புவி­யியல் அமைவு, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என்­ப­வற்றை உரி­ய­வாறு பயன்­ப­டுத்தி உலகப் பொரு­ளா­தா­ரத்தின் புதிய போக்­கு­களை அணுகி எமது அபி­வி­ருத்திப் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம்.

வினைத்­தி­றன்­மிக்க தூய்­மை­யான ஒரு அரச சேவை நாட்டின் அபி­வி­ருத்­திக்கு இன்­றி­ய­மை­யாத கார­ணி­யாகும். மக்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தின் அதி­க­பட்ச பயன்­களை வழங்­கு­வ­தாயின் அர­சாங்க நிரு­வாகம் உரி­ய­வாறு நடை­மு­றை­ப­டுத்தப் படுதல் வேண்டும். இதற்­காக முழு அர­சாங்க நிரு­வா­கமே பொறுப்பை கையேற்க வேண்டும். பயங்­க­ர­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள், கள்­வர்கள், எதி­ரிகள், குண்­டர்கள், கப்பம் பெறு­ப­வர்கள், பெண்கள் மற்றும் சிறு­வர்­களை துன்­பு­றுத்­து­ப­வர்கள் ஆகி­யோ­ரினால் இயல்­பான மக்கள் வாழ்­விற்கு தடைகள் ஏற்­ப­டு­மாயின் அவ்­வி­டத்தில் மக்­க­ளுக்கு பாது­காப்பு இல்லை.

தேசிய பாது­காப்பைப் போன்று மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தன்­பாலும் நாங்கள் முக்­கிய கவனம் செலுத்­தி­யுள்ளோம். பயங்­க­ர­வா­தத்­திற்கு வழி­வ­குக்கும் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களை மேலும் இந்­நாட்டில் செயற்­ப­டு­வ­தற்கு நாங்கள் இட­ம­ளிக்க மாட்டோம். நாடு பூரா­கவும் பர­வி­யுள்ள போதைப்­பொருள் இடை­யூ­றி­லி­ருந்து பிள்­ளை­களை மீட்கும் வரை பெற்­றோ­ருக்குச் சுதந்­திரம் இல்லை. அரச நிறு­வ­னங்­க­ளினுள் ஊழல்கள், மோச­டிகள் இருக்கும் வரை பொது மக்­க­ளுக்கு சுதந்­திரம் இல்லை. ஆகவே, இயல்­பான மக்கள் வாழ்­வுக்கு அழுத்தம் செலுத்­து­கின்ற அனைத்து சமூக இடை­யூ­று­க­ளையும் ஒழிப்­ப­தற்­காக சட்­டத்தை கடு­மை­யாகச் செயற்­ப­டுத்து வதற்கு நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம். இந்­ந­ட­வ­டிக்­கை­களை வினைத்­தி­றமை யாக்­கு­வ­தற்குத் தேவை­யான சீர்­தி­ருத்­தங்­களை தற்­போது பாது­காப்­புத்­து­றை­யினுள் ஆரம்­பித்­துள்ளோம்.

சிந்­திக்கும் சுதந்­தி­ரத்­தையும், எழு­து­வ­தற்­கான சுதந்­தி­ரத்­தையும் நான் முழு­மை­யாக உறு­திப்­ப­டுத்­துவேன். அப்­போதுதான் தத்­து­வ­ஞா­னி­களைப் போன்று உயர்­மட்ட கலை ஆக்­கங்கள் உரு­வாகும். எனது அர­சாங்கம் எப்­பொ­ழுதும் எதிர் அபிப்­பி­ரா­யங்­களை பொறு­மை­யுடன் செவி­ம­டுக்கத் தயா­ராக உள்­ளது.

ஊட­கங்­க­ளுக்கு இன்று முழு­மை­யான சுதந்­திரம் இருக்­கின்­றது. எந்த ஒரு­வரும் சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களைத் தெரி­விக்கும் உரி­மையை நாங்கள் வழங்­கி­யுள்ளோம். சமூக ஊட­கங்கள் ஜன­நா­ய­கத்­திற்கு புதிய சவால்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இணை­யத்­த­ளத்தில் அதி­க­மான காலத்தைக் கழித்துக் கொண்டு அநே­க­மான சந்­தர்ப்­பங்­களில் அறி­மு­க­மற்­ற­வர்­க­ளுடன் தொடர்பு கொள்­வதால் அவர்­க­ளது குற்­றங்­க­ளின்­படி பிழை­யான தகவல் பிரச்­சா­ரங்­க­ளுக்கு உட்­பட்டு தமது அபிப்­பி­ரா­யங்­களை விட வேறு அபிப்­பி­ராயம் கொண்­ட­வர்கள் தொடர்பில் உட­னுக்­குடன் தவ­றான அபிப்­பி­ரா­யங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புண்டு.

உங்­க­ளது மனச்­சாட்­சி­யின்­படி செயற்­ப­டு­மாறு நாங்கள் அனை­வ­ரி­டமும் கேட்டுக் கொள்­கின்றோம். எப்­பொ­ழுதும் நாட்டைப் பற்றி சிந்­தி­யுங்கள். ஏனைய சகோதர நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள். அரசியல் தேவைகளைப் பற்றி மட்டும் சிந்திக்காது உங்கள் செயல்களினாலும் சொற்களினாலும் நாட்டுக்குத் தீமை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கவும். ஆயினும் அரசு பிழையான வழியில் செல்கிறதென உங்களுடைய மனச்சாட்சிக்குத் தெரியுமாயின் எப்பொழுதும் தயங்காது அதனைச் சுட்டிக் காட்டவும். நாங்கள் எப்பொழுதும் சட்டத்தின் இறைமையை மதித்து நடக்க வேண்டும். நீதி, நியாயமாக செயற்படும் போது தான் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் நிகழும் கலாசாரத்தை மாற்றுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எமக்கு பல சவால்கள் உள்ளன. அதில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு உங்கள் அனைவரதும் ஆதரவு தேவைப்படுகின்றது.

நான் தங்களின் முன்னிலையில் வைத்த கொள்கைப் பிரகடனம் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய செயல் நெறியாகும். அதன் வாயிலாக சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும்.எதிர்கால சந்ததியினருக்காக தற்கால சந்ததியினரால் தான் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். வரலாற்றினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவரினதும் வளமான எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கின்றேன்.-Vidivelli

  • ஆர்.யசி, ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.