சிறுவனின் கழுத்தில் ஊடுருவிய உயிர்கொல்லி ஊசி மீன்

0 973

இந்­தோ­னே­ஷிய சிறுவன் ஒரு­வனின் கழுத்தில் ஒரு கத்­தி­யைப்­போல மீன் ஒன்று குத்­தி­யி­ருந்த புகைப்­ப­டங்கள் கடந்த வாரம் சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லாகிப் பர­வி­யி­ருந்­தன.

குறித்த மீனின் கூரான வாய்ப்­ப­குதி அச்­சி­று­வனின் கழுத்தில் ஒரு பக்­கத்தால் நுழைந்து மறு­பக்­கத்தால் வெளி­யே­றி­யி­ருந்­ததை அப்­பு­கைப்­ப­டங்கள் காண்­பித்­தன.

நன்னீர் மற்றும் உவர்நீர் என இரு சூழ­லிலும் வாழும் ஊசி மீன் அல்­லது முரல் மீன் என அழைக்­கப்­படும் ஒரு­வகை மீன் இனமே அந்த சிறு­வனின் கழுத்தில் பாய்ந்து தாக்­கி­யுள்­ளது.

மொஹம்­மது இதுல் என்ற 16 வயது சிறு­வனே இவ்­வாறு ஊசி மீனினால் பரி­தா­ப­மாகத் தாக்­கப்­பட்­ட­வ­னாவான்.

இந்­தோ­னே­ஷி­யாவின் சுல­வேசி மாகா­ணத்தின் தென்­கி­ழக்குப் பகு­தியில் வசிக்கும் இந்த சிறுவன் தனது நண்­ப­னுடன் பொழு­து­போக்­குக்­காக மீன்­பி­டிக்கச் சென்ற அத்­த­ரு­ணத்தில் தனக்கு இப்­ப­டி­யொரு அரிய அசம்­பா­விதம் நிக­ழு­மென ஒரு­போதும் நினைத்­தி­ருக்கமாட்டான்.

நடந்­தது என்ன?

சுல­வே­சி­யி­லுள்ள ஒரு கடற்­பி­ராந்­தி­யத்தில் தனது நண்­ப­னான சர்தி எனும் அதே­வ­யது சிறு­வ­னுடன் சென்­ற­வாரம் ஒரு இரவு நேரத்தில் மீன் பிடிப்­ப­தற்­காகப் பட­கொன்றில் சென்­ற­போதே இந்த அசம்­பா­விதம் இடம்­பெற்­றுள்­ளது. “சர்­தியின் படகு முதலில் புறப்­பட்­டது. பின்னர் நான் மற்­றொரு படகில் சென்றேன். கடற்­க­ரை­யி­லி­ருந்து 500 மீற்றர் தொலைவில் படகு சென்­றதும், அவர் ஓர் ஒளிரும் விளக்கை இயக்­கினார். அப்­போ­துதான் ஓர் ஊசி மீன் திடீ­ரென என் கழுத்தில் வந்து குத்­தி­யது” என தனது பகீர் அனு­ப­வத்தை ஊட­கங்­க­ளிடம் இதுல் பகிர்ந்து கொண்டார்.

இருள் நிறைந்த நீருக்குள் இதுல் வீழ்ந்தார். தொண்­டைக்கு அரு­கா­மையால் ஊசி மீன் தாக்­கி­ய­துடன் நீரில் வீழ்ந்த அவரால் வலியால் துடித்துக் கத்­து­வ­தற்­கான வாய்ப்­புக்­கூட கிடைத்­தி­ருக்­க­வில்லை. மீனின் நீள­மான மெல்­லிய மற்றும் கூர்­மை­யான தாடைகள் கழுத்தின் இடது பகு­தியில் மேலி­ருந்து மண்­டை­யோட்டின் அடிப்­ப­குதி வரை உடு­ரு­விச்­சென்று தாக்­கி­யி­ருந்­தது. கழுத்தில் தாக்­கிய மீன் அத்­தோடு நின்று விடாமல் சுழ­லவும் துடிக்­கவும் செய்­துள்­ளது.

இத­னா­லேயே வலி தாங்­க­மு­டி­யாமல் இதுல் பட­கி­லி­ருந்து நீரில் வீழ்ந்­துள்ளார்.
சுழலும் மீனை இதுல் இறுக்­க­மாகப் பிடித்­துக்­கொண்­டதால் காயம் பெரி­தா­காமல் இருப்­பதை ஓர­ளவு தடுக்க முடிந்­தது. “நான் சர்­தி­யிடம் உதவி கேட்டேன். இரத்தம் வடி­வதைத் தடுக்க மீனை அகற்ற முயன்றேன். சர்தி அதை தடுத்து நான் நீந்த உத­வினார்” என இதுல் தெரி­விக்­கிறார்.

இதுலின் கிரா­மத்­தி­லி­ருந்து சுமார் ஒன்­றரை மணி­நேர பய­ணத்­திற்குப் பின்னர் பா-–பா என்ற இடத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லையை அடை­ய­மு­டிந்­தது. இதுலின் தந்தை ஸஹ­்ருதீன் மிகுந்த சிர­மத்­துக்கு மத்­தியில் இரவு நேரத்தில் இதுலை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்­றி­ருந்தார்.

வைத்­தி­யர்கள் என்ன சொல்­கி­றார்கள்?

பா-–பா­வி­லி­ருந்த வைத்­தி­யர்­களால் மீனை மாத்­தி­ரமே வெட்ட முடிந்­தது. கழுத்தில் சிக்­கி­யி­ருந்த மீனின் தலைப்­ப­கு­தியை வெட்டி எடுப்­ப­தற்குத் தேவை­யான கரு­விகள் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. இதனால் தெற்கு சுல­வே­சியின் தலை­நகர் மக்­கா­சரில் உள்ள மாகாண வைத்­தி­ய­சா­லை­யொன்­றுக்கு மாற்ற வேண்­டி­யி­ருந்­தது.

அங்­குள்ள வைத்­தி­யர்­கள்­கூட இந்த நிலை­மையைக் கண்டு அதிர்ந்து போனார்கள். இது ஒரு­போ­து­மில்­லாத புதிய சம்­பவம் என்றும், மீனின் தலையை அகற்ற ஐந்து வைத்­திய நிபு­ணர்­க­ளா­வது தேவை என்றும் வைத்­தியர் காலித் சாலெஹ் தெரி­வித்­தி­ருந்தார்.

கழுத்தில் நேராக மீன் குத்­தி­யி­ருக்கும் பட்­சத்தில் உடனே உயிர் போயி­ருக்­கு­மென இது­லுக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்த வைத்­தி­யர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். கழுத்தின் பக்­க­வாட்டில் ஊசிமீன் குத்­தி­யதால் அதிஷ்­ட­வ­ச­மாக அவர் உயிர் தப்­பி­யுள்ளார். ஆனாலும், அவர் சாதா­ரண நிலை­மைக்குத் திரும்ப ஐந்து நாள் வரை கால அவ­காசம் தேவைப்­பட்­டுள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை இது­லுக்கு இரண்டு மணி­நே­ரத்­துக்கும் அதி­க­மான நேரம் சத்­தி­ர­சி­கிச்சை இடம்­பெற்­றது. இந்த நுட்­ப­மான சத்­தி­ர­சி­கிச்சை இந்­தோ­னே­ஷிய மருத்­துவ வர­லாற்றில் தடம்­ப­தித்த ஒரு சத்­தி­ர­சி­கிச்­சை­யா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்த சிகிச்­சை­க­ளுக்குப் பின்னர் உள்ளுர் ஊட­க­மான மக்­காசர் டேர்­கின்­னுக்கு கருத்துத் தெரி­வித்த வைத்­தியர் கே.ஆரிப், “சத்­திர சிகிச்­சை­யின்­போது கழுத்­தி­லி­ருந்த பெரிய தடை­யினால் மிகவும் கவ­ன­மாக செயற்­பட வேண்­டி­யி­ருந்­தது” என தெரி­வித்தார்.

இதுல் இப்­போது நன்­றாகக் குண­ம­டைந்து பழைய நிலை­மைக்கே திரும்­பி­விட்டார். ஆனாலும் மேல­திக பாது­காப்பு சிகிச்­சை­க­ளுக்­கா­கவும் மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்­கா­கவும் வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்து அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். ஆரம்­பத்தில் காய்ச்சல் இருந்­த­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். தற்­போது காய்ச்­சலும் குண­ம­டைந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

விமர்­ச­னங்கள்

முதலில் Savage Paramedics என்ற பேஸ்புக் பக்கம் இதுலின் புகைப்­ப­டங்­களை பகிர்ந்­தி­ருந்­தது. மீன் கழுத்தில் குத்­தப்­பட்ட இதுலின் புகைப்­ப­டங்கள் பேஸ்புக் சமூ­க­வ­லைத்­த­ளத்தில் வைர­லா­ன­போது அதனை அனை­வரும் கிரபிக் படங்கள் என்றே விமர்­சித்­தனர். ‘ஐ பிஷ்’ எனப்­படும் ஒரு தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் இது ஒரு மோச­மான கிரபிக் புகைப்­ப­ட­மென விமர்­சிக்­கப்­பட்­டது. பலர் இதை ஒரு போலி­யான புகைப்­ப­ட­மெனக் கடந்து சென்ற அதே­வே­ளையில் பலர் இதன் உண்­மைத்­தன்­மையை ஆரா­யவும் செய்­தனர்.

இந்தப் புகைப்­ப­டங்­களை உலகின் பல்­வேறு பகு­தி­களில் இருந்தும் பார்த்து உணர்­வு­பூர்­வ­மாக நம்­பிய பலர் இந்தச் சிறுவன் உயிர்­தப்­பி­யது எவ்­வா­றெனத் தேடத் தொடங்­கி­னார்கள். இது­லுக்­காக பிரார்த்­திக்­கவும் செய்­தார்கள். இதுல் சர்­வ­தேசம் தேடும் ஒரு பிர­ப­ல­மாக மாறினார்.

ஊசி மீன்கள்

மேலே சொன்­னது போல ஊசி மீன்கள் நன்னீர் மற்றும் உவர்நீர் என இரு பிராந்­தி­யங்களிலும் வாழக்­கூ­டிய ஓர் உயி­ரி­ன­மாகும். இவை 1.5 மீற்றர் வரை வளரும். இதுலைத் தாக்­கிய மீன் சுமார் 75 சென்­றி­மீற்றர் நீளம் கொண்­ட­தாகும். இவற்றின் நீண்ட மெல்­லிய தாடை­யினால் ஏனைய மீன்­களில் இருந்தும் வேறு­ப­டு­கின்­றன. அந்த நீண்ட தாடையில் அமைந்­துள்ள பற்கள் வேட்­டைப்­பி­ரா­ணி­களை குத்­திக்­கா­யப்ப­டுத்த ஏது­வாக உள்­ளன.

நீரின் மேற்­ப­ரப்­பி­லுள்ள உயி­ரி­னங்­களை வேட்­டை­யா­டு­வதில் வல்­லமை படைத்த இந்த மீன்கள் சில வேளை­களில் மனித உயிர்­க­ளையும் காவு­கொள்­கின்­றன. இந்த மீன்கள் நீருக்குள் இருந்தே ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு அறு­பது கிலோ­மீற்றர் வேகத்தில் பாயக்­கூ­டிய திறனைப் பெற்­றுள்­ளன. இரவில் செயற்கை ஒளி தென்­ப­டும்­போது இந்த மீன்கள் அவற்றைத் தேடி­வந்து தாக்­கு­வ­தற்­கான அதிக சாத்­தி­யக்­கூ­றுகள் உள்­ளன.

ஏனைய உயி­ரி­ழப்­புக்கள்

ஊசி மீன்­களால் உலகின் பல்­வேறு பிர­தே­சங்­களில் அவ்­வப்­போது உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன. அதில் 1977 ஆம் ஆண்டில் ஹவாய் தீவில் தனது தந்­தை­யுடன் மீன் பிடிக்கச் சென்ற 10 வயது சிறுவன் ஒருவன் ஊசி மீன் தாக்கி உயி­ரி­ழந்த சம்­பவம் உல­கையே உலுக்­கி­யது. இந்த சிறு­வனை திடீ­ரென தண்­ணீ­ரி­லி­ருந்து ஒரு ஊசிமீன் கண்ணில் பாய்ந்து மூளை­யி­னூ­டாக ஊடு­ருவி மண்­டை­யோட்­டையும் துளைத்து வெளியில் பாய்ந்­தி­ருந்­தது. குறித்த ஊசிமீன் 1.0 –1.2 மீற்றர் வரை (3.3 – 3.9 அங்­குலம்) நீள­மாக இருந்­தது.

2007 ஆம் ஆண்டில் ஹலோங் விரி­கு­டா­வுக்கு அண்­மையில் 16 வய­தான வியட்னாம் சிறுவன் ஒருவன் கடல் வெள்­ள­ரிக்­காய்­களை சேக­ரித்துக் கொண்­டி­ருக்­கும்­போது சொண்டு 15 சென்­றி­மீற்றர் நீள­மு­டைய ஊசிமீன் ஒன்று இத­யத்தில் தாக்­கி­யதால் அவன் உயி­ரி­ழந்தான். 2010 இல் புளோ­ரி­டாவில் ஊசி மீனைப்­போன்ற ‘ஹவுன்ட்பிஷ்’ எனப்­படும் டைலோ­சரஸ் இன முதலை ஒரு­வரின் மார்பில் தாக்­கி­யதில் அவர் உயி­ரி­ழந்தார். மேலும் ஊசி மீன் தாக்கி ஜேர்­ம­னியில் 2012 ஆம் ஆண்டு ஒருவர் பலத்த காய­ம­டைந்தார். எகிப்தில் 2013 ஆம் ஆண்டில் செங்­க­டலில் இருந்து ஓர் ஊசி மீன் பாய்ந்­ததில் ஒரு­வரின் முழங்கால் பலத்த சேத­ம­டைந்த சம்­பவம் பர­வ­லாகப் பேசப்­பட்­டது. அதே­யாண்டு ஒக்­டோ­பரில் தமாமில் ஒரு இளை­ஞனின் கழுத்தின் இடது பகு­தியில் ஊசிமீன் தாக்கி இரத்தக் கசி­வினால் அவர் உயி­ரி­ழந்­த­தாக சவூதி அரே­பி­யாவின் செய்தி வலைத்­த­ளங்கள் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தன. வியட்­நாமின் நாட்ரங் பகு­தியில் ரஷ்ய சுற்­று­லாப்­ப­யணி ஒருவர் 2014 ஆம் ஆண்டு ஊசி மீனினால் தாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்டார். குறித்த ரஷ்யப் பிர­ஜையை அந்த ஊசிமீன் கழுத்­தி­லி­ருந்து முதுகின் அடிப்­ப­குதி வரை தனது பற்­களால் கடித்தே கொன்­றி­ருந்­தது.

2016 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் சுல­வே­சியின் மத்­திய பகு­தியில் பாலுவைச் சேர்ந்த 39 வய­தான பெண்­ணொ­ரு­வரின் வலது கண்­ணுக்கு மேலே அரை மீற்றர் நீள­மு­டைய ஓர் ஊசிமீன் தாக்­கி­யதில் அவர் பலத்த காய­ம­டைந்து உள்ளூர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போதும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார். அவர் டஞ்சுங் கரங் எனும் இந்­தோ­னே­ஷி­யாவின் பிர­பல சுற்­றுலாத் தலத்தில் 80 சென்­றி­மீற்றர் ஆழத்தில் நீந்­திக்­கொண்­டி­ருந்த போதே இந்த சம்­பவம் நடந்­தது. இவர் காய­ம­டைந்­த­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்கள் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பரவியபோது சர்ச்சைகள் தோன்றின. இது மனித தாக்குதலாகவே இருக்குமென ஒருசில உள்ளூர் ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன.

மேலும் 2018 டிசம்­பரில் தாய்­லாந்து கடற்­படை வீரர் ஒருவர் தனது பயிற்­சி­யின்­போது கழுத்தில் ஊசி மீன் தாக்கி உயி­ரி­ழந்தார். ஊசி மீன்­களின் ஆதிக்­கத்தால் பலர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அங்­க­வீ­ன­முற்­று­முள்­ளார்கள். மீன­வர்­களும் சுற்­றுலாப் பய­ணி­களும் இதனால் பாதிக்­கக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் அதி­க­மாக உள்­ளதை ஊகிக்க முடி­கின்­றது. ஊசி மீன்கள் வாழும் கடற்­பி­ர­தேசம் மற்றும் நன்னீர் ஏரி­களை அடை­யாளம் கண்டு அவ்­வி­டங்­களில் மீன் பிடிக்­கவும் சுற்­று­லாப்­ப­ய­ணிகள் நட­மா­டவும் தடை­வி­திக்­கப்­பட வேண்டும்.

அத்­துடன் மீன­வர்­க­ளுக்கும், பொழுது போக்­குக்­காக கட­லுக்கு செல்லும் பொது­மக்­க­ளுக்கும் இது­பற்­றிய போதிய விழிப்­பு­ணர்வு வழங்­கப்­ப­டு­வது கட்டாயமானது. இதன்மூலமே ஊசி மீன்களால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.-Vidivelli

  • எம்.ஏ.எம்.அஹ்ஸன்

Leave A Reply

Your email address will not be published.