சகல இன மக்களினதும் மனங்களை வெல்ல வேண்டும்.

0 188

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ கடந்த வெள்­ளிக்­கி­ழமை குறைந்த எண்­ணிக்கை கொண்ட அமைச்­ச­ர­வை­யொன்­றினை நிய­மித்­துள்ளார். 1956 ஆம் ஆண்டின் பின்பு நிய­மனம் பெற்ற சிறிய அமைச்­ச­ரவை இது­வாகும். 1956 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் நிய­மிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை 14 பேரைக் கொண்­ட­தா­கவே இருந்­தது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி முன்­னி­லையில் 15 பேர் அமைச்­சர்­க­ளாகப் பத­விப்­பி­ர­மாணம் செய்து கொண்­டனர். நிமல் சிறி­பால டி சில்வா, ஆறு­முகம் தொண்­டமான், தினேஷ் குண­வர்­தன, டக்லஸ் தேவா­னந்தா, பந்­துல குண­வர்­தன, ஜனக பண்­டார தென்­னகோன், சமல் ராஜபக் ஷ, டலஸ் அழ­கப்­பெ­ரும, ஜோன்ஸ்டன் பெர்­ணாந்து, விமல் வீர­வங்ச, மஹிந்த அம­ர­வீர, எஸ்.எம். சந்­ர­சேன, ரமேஷ் பதி­ரன, பிர­சன்ன ரண­துங்க மற்றும் பவித்ரா வன்­னி­ஆ­ரச்சி ஆகி­யோரே அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கும் பல அமைச்­சுகள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரேனும் நியமிக்கப்படவில்லை என சிலர் குறைபடுகின்றனர். எனினும் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட இந்த அமைச்சரவையில் உள்ளீர்ப்பதற்குப் பொருத்தமான முஸ்லிம்கள் எவரும் இல்லை என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொள்வது அவசியமாகும். எம்.பி.க்களான பைசர் முஸ்தபா மற்றும் மஸ்தான் ஆகியோர் தற்போதைய அரசுக்கு ஆதரவளிக்கின்ற போதிலும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருக்கத்தக்க இவர்களுக்கு வழங்குவதென்பது சாத்தியமற்றதாகும்.

எனினும் இன்று இரா­ஜாங்க அமைச்­சர்­கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்த இரா­ஜாங்க அமைச்­சர்­களின் நிய­ம­னத்தின் போது முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் ஓரிருவர் நிய­மிக்­கப்­படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள இரா­ஜாங்க அமைச்­சர்கள் சுதந்­தி­ர­மாக தமது கட­மை­களைச் செய்­வ­தற்கு அமைச்­சர்கள் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டு­மென ஜனா­தி­பதி புதிய அமைச்­சர்­களின் பத­விப்­பி­ர­மாண நிகழ்­வி­னை­ய­டுத்து நடை­பெற்ற கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சி­யின்­போது இரா­ஜாங்க அமைச்­சர்கள் முழு­நாளும் கையொப்பம் இடும் அதி­கா­ரிகள் போன்றே இயக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் குற்றம் சாட்­டி­யுள்ளார். ஒரு­வரை திருப்­திப்­ப­டுத்துவதற்­காக மாத்­திரம் இரா­ஜாங்க அமைச்­சர்கள் போன்ற அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டக்­கூ­டாது. அதனால் நாட்டின் நிதியும் வளங்­க­ளுமே வீண் விர­ய­மாக்­கப்­படும். எனவே வேலைப்­பளு அதி­க­முள்ள அமைச்­சுக்­க­ளுக்கே இரா­ஜாங்க அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­ட­ வேண்டும்.

நாட்டின் பாது­காப்பு மற்றும் மக்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்கும் வகையில் பொது மக்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் கீழ் 25 நிர்­வாக மாவட்­டங்­க­ளிலும் முப்படையினரை கட­மையில் ஈடு­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்­டுள்ளார்.
இச்­சட்­டத்தின் கீழ் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் ஊடாக பொது மக்­களின் பாது­காப்பை தொடர்ந்தும் பேணும் நோக்­குடன் முப்­ப­டை­யி­னரை ஈடு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக விசேட அர­சாங்க வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ பதவிப் பிர­மாணம் செய்து கட­மை­களைப் பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து பல அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஜனா­தி­பதி செய­லகம் உட்­பட தனக்­கான உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்­கையை 2500 இலிருந்து 250 ஆகக் குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அவர் தனது செய­லா­ளரைக் கேட்­டுள்ளார். தனது வாகனப் பேர­ணியின் வாக­னங்­களின் எண்­ணிக்­கையைக் குறைக்குமாறும் கோரியுள்ளார். தனது படங்களை அரச அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். அவரது ஆரம்பம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

எனினும் அவர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு முப்படையினரின் பங்களிப்பினைப் பெற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி மூவின மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அவரது முன்னெடுப்புகள் இன, மத பேதங்களுக்கப்பால் மக்கள் மனங்களை வெல்வதாக அமைய வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.