போர் அபாயத்தில் மத்திய கிழக்கு

0 152

ஏ.ஆர்.ஏ.பரீல்

மத்­திய கிழக்கில் யுத்த நிலை­மை­யொன்று சூடு பிடித்­துள்­ளது. எந்த நிமி­டத்தில் அங்கு யுத்­த­மொன்று வெடிக்கும் என அப்­பி­ராந்­திய மக்கள் அச்­சத்தில் உறைந்து போயுள்­ளனர். இம்­மாத ஆரம்­பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரி­யா­வி­லுள்ள ஈரானின் தூத­ர­கத்தின் மீது எதிர்­பா­ரா­வி­த­மாக தாக்­கு­த­லொன்­றினை நடத்­தி­யி­ருந்தது. இந்த தாக்­கு­த­லுக்கு பதி­லடி நட­வ­டிக்­கை­யாக கடந்த சனிக்­கி­ழமை இரவு ஈரான் இஸ்­ரேலை நோக்கி 300க்கும் மேற்­பட்ட ஆளற்ற விமா­னங்­க­ளையும் ஏவு­க­ணை­க­ளையும் ஏவி­யி­ருந்­தது. இது இஸ்ரேல் மீது ஈரா­னினால் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது தாக்­கு­த­லாகும்.

இந்தத் தாக்­கு­தலில் 170 ஆளற்ற விமா­னங்­களும் 30 கப்பல் ஏவு­க­ணை­களும் ஈடு­பட்­டன என்­றாலும் இவை உரிய இலக்கை அடை­ய­வில்லை. ஏவப்­பட்ட 110 பீரங்கி குண்­டு­களில் சிலவே இஸ்­ரே­லிய இலக்கை அடைந்­தன. ஆளற்ற விமா­னங்கள் மற்றும் ஏவு­க­ணை­களில் சுமார் 99 வீத­மா­னவை உரிய இலக்­கினை அடை­வ­தற்கு முன்பு இஸ்ரேல், அமெ­ரிக்கா மற்றும் நேச நாடு­களின் படை­யி­னரால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டன என இஸ்­ரே­லிய இரா­ணுவப் பேச்­சாளர் ரியர் அட்­மிரல் டெனியல் ஹக்­காரி தெரி­வித்­தி­ருந்தார்.

ஈரா­னுக்கும், இஸ்­ரே­லுக்­கு­மான வான்­வ­ழி தூரம் ஈராக், சிரியா மற்றும் ஜோர்தான் ஊடாக சுமார் 1000 கிலோ மீற்­றர்­க­ளாகும். கடந்த சனிக்­கி­ழமை இரவு இஸ்­ரேலை நோக்கி ஆளற்ற விமா­னங்­க­ளையும் ஏவு­க­ணை­க­ளையும் ஏவி­யி­ருந்­த­தாக ஈரானின் புரட்­சி­கர காவல் படை (IRGC) தெரி­வித்­தது. இதே­வேளை இத்­தாக்­கு­தலை உறு­திப்­ப­டுத்தும் வகையில் குறிப்­பிட்ட ஆளற்ற விமா­னங்கள், ஏவு­க­ணைகள் தங்­க­ளது நாட்டு வான் பரப்­பு­க­ளுக்கு மேலால் பறந்­த­தாக ஈராக்­கிய பாது­காப்பு படை­யினர் ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இதே­வேளை பெரும் எண்­ணிக்­கை­யி­லான ஆளற்ற விமா­னங்­க­ளும் ஏவு­க­ணை­களும் அமெ­ரிக்க படை­யி­னரால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டன. அமெ­ரிக்க விமா­னங்கள் மற்றும் கப்­பல்­களால் 80க்கும் மேற்­பட்ட ஆளற்ற விமா­னங்­களும் சுட்டு வீழ்த்­தப்­பட்­டன. இவற்றில் யெம­னி­லி­ருந்து ஏவப்­ப­டு­வ­தற்கு தயா­ரா­க­வி­ருந்த 7 ஆளற்ற விமா­னங்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி
ஈரானின் தாக்­கு­த­லுக்கு எவ்­வாறு பதி­லடி கொடுப்­பது என்­பது குறித்து மிகவும் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்­டு­மென அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் இஸ்­ரே­லுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

அத்­தோடு அமெ­ரிக்­கா­வா­னது ஈரான் மீதான எந்­த­வொரு பதி­லடித் தாக்­கு­த­லிலும் பங்­கேற்­காது என வெள்ளை மாளிகை இஸ்­ரே­லுக்கு எச்­ச­ரித்­துள்­ள­தாக அமெ­ரிக்க சிரேஷ்ட அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

ஈரானால் மேற்­கொள்­ளப்­பட்ட முன்­னொரு போதும் இடம்­பெ­றாத செயற்­பாட்­டுக்கு தமது படை­யினர் எவ்­வாறு பதி­ல­ளிப்­பது என்­பது தொடர்பில் கவ­ன­மா­கவும், தந்­தி­ரோ­பா­ய­மா­கவும் சிந்­திக்க வேண்டும் என ஜோ பைடன் இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெத்­தன்­யா­கு­வுடன் மேற்­கொண்ட தொலை­பேசி அழைப்பின் போது தெரிவித்­த­தா­கவும் வெள்ளை மாளிகை குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு பேச்­சாளர் ஜோன் கிர்பி தெரி­விக்­கையில், அமெ­ரிக்­கா­வா­னது தான் பரந்­த­ள­வி­லான மோதலைத் தவிர்ப்­பதை விரும்­பு­வ­தாக இஸ்­ரே­லுக்குக் கூறி­யுள்ளார். தாம் இஸ்ரேலை தொடர்ந்து பாது­காக்­க­வுள்­ள­தா­கவும் ஆனால் இதில் இஸ்­ரேலின் பதி­லடித் தாக்­கு­தலில் பங்­கேற்­பது விதி­வி­லக்­கா­க­வுள்­ள­தா­கவும் கிர்­பியும் ஏனைய அமெ­ரிக்க அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் ஒஹியோ மாநி­லத்­துக்­கான குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த உறுப்­பி­ன­ரான மைக்­டேர்னர் தெரி­விக்­கையில் மோதல்­களைத் தணி­விப்­பது தொடர்­பான கிர்­பியின் விமர்­ச­னங்கள் தவ­றா­னவை எனவும் மோதல்கள் ஏற்­க­னவே தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் பதி­ல­டி­யொன்றைக் கொடுப்­பதே அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் தேவை­யா­க­வுள்­ள­தெ­னவும் கூறினார்.

இப்­போது என்ன நடக்­கி­றது?
ஈரானின் தாக்­கு­த­லுக்கு சரி­யான பதில் வழங்­கப்­படும் என இஸ்­ரேலின் சனல் 12 TV யைச் சேர்ந்த அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்ளார். இஸ்­ரேலின் அமைச்­சரவை அவ­ச­ர­மா­கக் கூடி தற்­போ­தைய நிலை­மையை ஆராய்ந்­தது. இஸ்­ரேலின் வான்­ப­ரப்பு திறக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் ஈரா­னு­ட­னான எதிர் நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­ப­ட­வில்லை என இஸ்­ரேலின் பாது­காப்பு அமைச்சர் யோஅவ் கவன்டீ தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை ஈரான் இஸ்­ரேலை மீண்டும் எச்­ச­ரித்­துள்­ளது. ‘இஸ்ரேல் ஈரா­னுக்­கெ­தி­ராக தாக்­குதல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மானால் தங்­க­ளது இரா­ணுவ நட­வ­டிக்­கைகைள் முன்­ன­ரை­விட மிகப் பல­மா­ன­தாக அமையும் என ஈரானின் ஆயுதப் படை­களின் பிர­தானி மேஜர் ஜெனரல் மொஹமட் பக்­ஹரி அரச தொலைக்­காட்சி சேவைக்கு கூறி­யுள்ளார்.

இஸ்­ரேலின் பதி­லடித் தாக்­கு­தலில் அமெ­ரிக்கா பங்­கேற்றால் அமெ­ரிக்க தளங்கள் தாக்­கப்­படும் எனவும் அவர் கூறினார்.

இஸ்­ரேலின் எத்­த­கைய தாக்­கு­த­லுக்கும் பதி­லடி வழங்கத் தயா­ராக இருப்­ப­தாக ஈரான் புரட்­சிப்­ப­டையின் கட்­டளை அதி­காரி ஹுசைன் சலமி தெரி­வித்­துள்ளார். இதே­வேளை ஈரானின் வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் நாஸர் கனானி ஈரானின் தாக்­குதல் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் தற்­பா­து­காப்­புக்­கா­ன­து­மாக இருக்கும் எனத் தெரி­வித்­துள்ளார்.

இஸ்­ரேலின் போர் அமைச்­ச­ரவை
கலந்­து­ரை­யாடல்
இஸ்­ரே­லுக்கு எதி­ரான ஈரானின் ஆளற்ற விமானம் மற்றும் ஏவு­கணைத் தாக்­குதல் தொடர்பில் இஸ்­ரேலின் அமைச்­ச­ரவை ஒன்று கூடி ஆராய்ந்­தது. ஆனால் இவ்­வி­வ­காரம் தொடர்­பி­லான தீர்­மானம் தொடர்பில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இஸ்­ரேலின் கூட்­டணி ஈரானின் நட­வ­டிக்கை குறித்து கடு­மை­யான கண்­ட­னத்தைத் தெரி­வித்­தது. பென்­ஜமின் நெதன்­யா­குவின் அர­சாங்கம் இதற்கு உரிய பதி­லடி வழங்க வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யது.

இஸ்­ரே­லுக்கு எதி­ராக பெரும் எண்­ணிக்­கை­யி­லான ஏவு­கணைத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பீரங்கி குண்­டுகள் வீசப்­பட்­டுள்­ளன. இஸ்­ரேலின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஈரானின் இத்­தாக்­கு­லுக்கு உரிய பதி­லடி வழங்­கப்­படும் என இஸ்­ரேலின் இரா­ணுவ பிர­தானி லெப். ஜெனரல் ஹர்சி ஹலேவி தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எவ்­வா­றான தாக்­குதல் மேற்­கொள்­ளப்­படும்? எப்­போது இத்­தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­படும்? என்ற விப­ரங்­களை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

ஈரான் மீது புதிய தடைகள்?
ஈரான் இஸ்ரேல் மீது அண்­மையில் மேற்­கொண்ட தாக்­கு­த­லை­ய­டுத்து ஈரான் மீது புதிய தடை­களை விதிப்­பது தொடர்பில் அமெ­ரிக்­காவும் ஐரோப்­பிய யூனி­யனும் கவனம் செலுத்­தி­யுள்­ளன.

இஸ்ரேல் மீது ஈரான் மேற்­கொண்ட தாக்­கு­த­லை­ய­டுத்து எதிர்­வரும் நாட்­களில் உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என அமெ­ரிக்க திறை­சேரி செய­லாளர் ஜெனட் யெலன் தெரி­வித்­துள்ளார். இதே­வேளை ஐரோப்பிய யூனி­யனின் வெளி­வி­வ­கார கொள்கை தொடர்­பான பிர­தானி ஜோசப் பொரல் தாம் ஈரான் மீது புதிய தடைகள் விதிப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யாடி வரு­வ­தாகத் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை தெஹ்­ரானின் ஏவு­கணைத் திட்­டத்­திற்கு தடை விதிக்­கு­மாறு இஸ்ரேல் தனது நேச நாடு­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. இந்த ஏவு­கணைத் திட்­டத்தின் மீதான ஐக்­கிய நாடு­களின் தடை எதிர்­வரும் ஒக்­டோ­ப­ருடன் கால­ாவ­தி­யா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்தத் தடை ஈரானின் அணு­சக்தி திட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­துடன் தொடர்­பு­பட்­ட­தாகும்.

எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்­கிய இராச்­சியம் (UK) உட்­பட பல நாடுகள் ஈரா­னுக்கு எதி­ரான தடை­களை தொடர்ந்தும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­­வ­துடன் புதிய தடை­க­ளையும் அமுல்­ப­டுத்­தி­யுள்­ளன.
சிரி­யா­வி­லுள்ள தனது கொன்­சி­யுலர் காரி­யா­ல­யத்தின் மீது கடந்த 1ஆம் திகதி இஸ்ரேல் வான்­வழி தாக்­கு­தலை நடத்­தி­ய­தா­கவும், இதனால் 13 பேர் பலி­யா­ன­தா­கவும் இதற்கு பதி­லடி வழங்கும் வகை­யிலே இஸ்ரேல் மீது ஏவு­கணைத் தாக்­குதல் நடத்­தி­ய­தாக தெஹ்ரான் தெரி­வித்­துள்­ளது. இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் ஈரானின் ஏவுகணைத் திட்டத்துக்கு தடை விதிக்குமாறு 30 நாடுகளின் தலைவர்களைக் கோரியுள்ளார்.

அத்தோடு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பெயரிடுமாறும் கோரியுள்ளார். அமெரிக்கா IRGC யை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ள போதிலும் ஐக்கிய இராச்சியம் (UK) இதுவரை அவ்வாறு பெயரிடவில்லை.

இதேவேளை அமெரிக்க திறைசேரி செயலாளர் யெலன் எதிர்வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
புதிய தடைகளின் கீழ் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான திட்டம் உள்வாங்கப்படும் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, பாதுகாப்பு அமைச்சு என்பனவும் உள்வாங்கப்படும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.