அசாத் சாலி குற்­றச்­சாட்டை நிரூ­பித்து காட்ட வேண்டும்

பாராளுமன்றில் அமைச்சர் ஹலீம் சவால்

0 681

தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இது­வ­ரையில் எந்­த­வொரு பள்­ளி­வா­சலும் முஸ்லிம் சமய விவ­கார திணைக்­க­ளத்­தினால் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

அதனால் இது­தொ­டர்­பாக முன்னாள் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­ழுவில் தெரி­வித்த குற்­றச்­சாட்­டுக்­களை முடிந்தால் நிரூ­பித்துக் காட்­ட­வேண்டும் என்று சவால் விடு­க்கின்றேன் என்று முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை விசேட கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், ஏப்ரல் 21 ஆம் திகதி சம்­பவம் தொடர்­பா­கவும் அதற்குக் கார­ண­மான விட­யங்­களை ஆராய்­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் கடந்த 11 ஆம் திகதி மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்­சாலி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அவர் அங்கு என்­னைப்­பற்­றியும் எனது அலு­வ­லக பணி­யா­ளர்கள் தொடர்­பா­கவும் எனது அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­படும் பணிகள் தொடர்­பா­கவும் அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அவரின் சேற்றை கழு­விக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­யையே அவர் மேற்­கொண்­டி­ருந்தார் என்­பதை கண்­டு­கொள்ள முடிந்­தது. அத்­துடன் அவர் அடிக்­கடி இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை தெரி­வித்து ஊட­கங்­க­ளுக்கு பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து தனது அர­சி­யலை முன்­னெ­டுக்­கின்றார்.

எவ்­வா­றா­யினும், தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இது­வ­ரையில் எந்­த­வொரு பள்­ளியோ, அமைப்போ முஸ்லிம் விவ­கார திணைக்­க­ளத்­தினால் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தனை கூறிக்­கொள்­கின்றேன். பள்­ளி­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கைகள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட வக்பு சட்­ட­மூ­லத்­திற்­க­மைய அமைக்­கப்­பட்ட வக்பு சபையின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மை­யவே நடக்கும். இது ஓர் உயர்ந்த சபை­யாகும். இந்த சபை எந்­த­வொரு பள்­ளி­யையும் பதிவு செய்­வ­தற்குத் தேவை­யான ஆவ­ணங்­களை ஆராய்ந்து அந்த சபையின் பரிந்­துரை முஸ்லிம் சமய விவ­காரத் திணைக்­க­ளத்­திற்கு வழங்­கப்­பட்ட பின்னர் அந்தப் பள்­ளியை பதிவு செய்யும் சான்­றி­தழை அந்த திணைக்­களம் விநி­யோ­கிக்கும். இந்­நி­லையில் அமைச்­ச­ருக்கோ அமைச்சின் பணி­யா­ளர்­க­ளுக்கோ எந்­த­வொரு அதி­கா­ரி­க­ளி­னாலோ வக்பு சபைக்கு எந்­த­வித அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்க முடி­யாது.

இவ்­வா­றான நிலை­மையில் அசாத்­சாலி தெரி­வுக்­கு­ழு­வுக்கு முன் பள்­ளியை பதிவு செய்­வது தொடர்­பாக என் மீதும் எனது சகோ­தரர் பாஹிம் மீதும் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வெளி­யிட்ட கருத்தால் சிங்­கள மக்கள் மத்­தியில் என்னை பற்­றியும் எனது சகோ­தரர் பற்­றியும் தவ­றான நிலைப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­மை­யினால் இது தொடர்­பாக தெளி­வு­ப­டுத்த வேண்டும். இதே­போன்ற கருத்தை தயா­சிறி ஜய­சே­க­ரவும் வெளி­யிட்­டுள்ளார். எவ்­வா­றா­யினும் கண்டி மாவட்­டத்தில் தௌஹீத் என்ற பெயரில் ஒரு பள்­ளி­யேனும் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை.

அசாத்­சாலி என்ற நபர், நான் முஸ்லிம் விவ­கார அமைச்சு பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட காலம் முதல் அடிக்­கடி இவ்­வா­றாக என் மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­தற்கு பல்­வேறு கார­ணங்கள் இருக்­கின்­றன, அவர் ஹஜ் குழுவின் தலை­வ­ரா­கு­வ­தற்கு முயற்­சித்தார். இது குறித்த யோசனை எமக்கு வந்­தது. அவர் தகு­தி­யற்­றவர் என்­ப­தனால் அதனை நிரா­க­ரித்தேன். இது பிர­தான கார­ண­மாகும்.

அத்­துடன் அவர் கண்டி மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பா­ள­ராக கடந்த பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட வந்­த­போது அதற்கு நான் எதிர்ப்பு தெரி­வித்­த­மையும் இதற்கு மற்­று­மொரு கார­ண­மாக இருக்­கலாம்.

அஸாத் சாலி என்­பவர் கடந்த அர­சாங்க காலத்தில் ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ராக செயற்­பட்டு பாரிய நிதி மோசடி மேற்­கொண்­டவர். அத­னால்தான் நான் அவரை ஹஜ் குழு உறுப்பினராக நியமிப்பதை நிராகரித்தேன். அதனால் நான் அல்லது எனது சகோதரர் பாஹிம் மற்றும் எனது அலுவலக உறுப்பினர்கள் யாராவது தெளஹீத் அமைப்புக்கோ வேறு அமைப்புகளில் உறுப்பினராக செயற்பட்டு அந்த அமைப்புகளுக்கு உதவிசெய்ததாக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்காமல் அதனை முடியுமானால் ஒப்புவிக்க வேண்டும் என்று நான் அவருக்கு சவால் விடுக்கின்றேன் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.