இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடிய அறிகுறி தெரிகின்றது
சிங்கள மொழிப் பாடசாலையில் தமிழ் மொழிக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதைக் காணும் போது இந்த நாட்டின் மிக முக்கியமான இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைவழங்கக் கூடிய அறிகுறி துல்லியமாக தென்படுகிறது. அதே போன்று ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டின் காரணமாக நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியைக் கொண்டிருந்தாலும் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் கணிசமானளவு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கீடுகள் செய்துள்ளார்கள். இந்த அரசாங்கம் சிறந்த கல்வி…