நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் என்னை சிறையில் அடை­யுங்கள்

தான் தேர்­தலில் தோற்­றி­ருந்தால் தன்னை ஆறடி நிலத்தின் கீழ் புதைத்­தி­ருப்பார் என மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்­திய ஜனா­தி­பதி, இன்று அவ­ரையே பிர­த­ம­ராக்­கி­விட்டு ஆட்சிக்கு கொண்டு­வந்த எம்மை கொலை­கா­ரர்கள், சூழ்ச்­சிக்­கா­ரர்கள் என குற்றம் சுமத்­து­கின்றார். நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் ஆதா­ரத்தை நிரூ­பித்து என்னை சிறையில் அடை­யுங்கள் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் ஆசு…

அமர்வுகளை புறக்கணித்த ஆளும் தரப்பு எம்.பி.க்கள்

ஆளும் கட்­சி­யாக ஜனா­தி­ப­தியால் கூறப்­படும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர் நேற்­றைய தினமும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை புறக்­க­ணித்­தனர். அத்­துடன், நவம்பர் மாதம்  14ஆம் திகதி  தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் நடை­பெற்ற சபை  அமர்­வுகள்  அர­சி­ய­ல­மைப்பு மற்றும்  பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளைக்கு அமைய இடம்­பெ­ற­வில்­லை­யென ஆளும் கட்­சி­யினர் கூறி­யுள்­ள­துடன், அன்­றைய தினங்­களின் பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் அறிக்­கை­யினை நீக்க வேண்­டு­மென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விற்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்­ளனர். 

நான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன்

நான் குற்றம் செய்­தி­ருந்தால்  நீதி, நியா­யத்­துக்­காக ‘ஜம்பர்’ அணி­வ­தற்கும் தயா­ரா­கவே இருக்­கின்றேன். என்­மீது நம்­பிக்கை இல்­லை­யென்றால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்து என்னை நீக்­குங்கள். நான் பதவி வில­கவும் தயா­ரா­கவே உள்ளேன் என சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை அமர்­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சிலர், சபா­நா­யகர் மீதான விமர்­சனம் குறித்தும் ஹன்சார்ட் அறிக்கை பொய்­யாக எழு­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் சபா­நா­யகர்…

பெரும் திரளானோரின் பங்கேற்புடன் பேருவளை மாணவனின் ஜனாஸா நல்லடக்கம்

பேரு­வளை சீனன்­கோட்டை அல் ஹுமை­ஸரா தேசிய பாட­சா­லையில் இடம்­பெற்ற சம்­ப­வத்தில் மர­ண­மான முஹம்மத் தாரிகின் ஜனாஸா நேற்­று­மாலை சீனன்­கோட்டை பாஸிய்யா பெரிய பள்­ளி­வாசல் மைய­வா­டியில் பெரும் திர­ளான மக்களின் பங்­கு­பற்­று­த­லுடன் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. பேரு­வ­ளை­ஹேன பகு­தி­யி­லுள்ள வீட்­டி­லி­ருந்து எடுத்துச் செல்­லப்­பட்ட ஜனா­ஸா­வுக்­காக சீனன்­கோட்டை பாஸிய்யா பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடை­பெற்­றது. மாண­வனின் சகோ­தரன் முஹம்மத் தமீம் ஜனாஸா தொழு­கையை நடாத்த பெரு­க­மலை ஸாக்­கிரீன் பள்­ளி­வாசல் பிர­தம இமாம் மௌலவி…