காஸா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

காஸா மீது 2023 அக்டோபரில் இஸ்ரேல் யுத்தத்தை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களால் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் தற்போது குறைந்தது 56,531 ஆக உயர்ந்துள்ளதாகவும், 133,642 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

டிரம்ப் ஊடக மற்றும் உளவியல் ரீதியாக விளையாடுகிறார்: ஈரான் சாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம் ஊடக மற்றும் உளவியல் விளையாட்டில் ஈடுபடுவதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதா இல்லையா என்பது குறித்து டிரம்ப் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவதை "விளையாட்டு" என்று ஈரான் விமர்சித்துள்ளது.

பேச்சுவார்த்தை மேசைக்கு வர முன் அமெரிக்கா தாக்குதலை நிராகரிக்க வேண்டும் – ஈரானிய வெளிவிவகார பிரதியமைச்சர்

இராஜதந்திர முயற்சிகளை மீண்டும் தொடங்க விரும்பினால், ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலையும் அமெரிக்கா நிராகரிக்க வேண்டும் என ஈரானிய வெளிவிவகார பிரதியமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்கும் நிறுவனங்களுடனான வணிகத்தை நிறுத்தியது நோர்வே நிதியம்

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்கும் இரண்டு நிறுவனங்களுடனான வணிக தொடர்புகளை இனி மேற்கொள்ளப்போவதில்லை என நோர்வேயின் மிகப்பெரிய ஓய்வூதிய நிறுவனமொன்று அறிவித்துள்ளது.