பன்றி இறைச்சி ஊட்ட முயன்ற விவகாரம்: கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை

மனித உரிமை ஆணைக் குழுவிலும் முறைப்பாடு

0 55

(எப்.அய்னா)
தங்க நகை தொடர்­பி­லான விவ­கார விசா­ரணை தொடர்பில், கைது செய்த முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வரை படல்­க­முவ பொலிஸார், பன்றி இறைச்­சியை ஊட்ட முயற்­சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள அழுத்தம் கொடுத்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளது.

மினு­வாங்­கொடை பகு­தியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்­தகர் எதிர்­கொண்ட குறித்த சம்­ப­வத்தை விடி­வெள்ளி வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், அதனைத் தொடர்ந்த்து சில சமூக ஊட­கங்­களும் காணொ­ளி­யாக அதனை வெளி­ப்­படுத்­தின.

இந்­நி­லையில் குறித்த விவ­காரம் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோனின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஆராய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு அவர் ஆலோ­சனை வழக்­கி­யுள்ளார்.

அதன்­படி நேற்று முன்­தினம், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இந்த விடயம் தொடர்பில், பாதிக்­கப்­பட்­ட­தாக கூறப்படும் வர்த்­த­க­ரிடம் வாக்கு மூலம் பதிவு செய்­துள்­ளது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நெவில் சில்­வாவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூன் 14 ஆம் திகதி இந்த சம்­பவம் இடம்­பெற்­ற­தாக கூறும் வர்த்­த‌கர் நிப்லி, இது தொடர்பில் நீதி­மன்­றுக்கும் அறி­வித்­துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்­பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கும் வர்த்­தகர் நிப்லி முறைப்­பாடு செய்­துள்ளார்.

முன்­ன­தாக இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­துவ, வர்த்­தகர் மொஹம்மட் நிப்லி கூறு­வ­தைப்­போல ஏதேனும் அழுத்­தங்கள், அநீ­திகள் நடந்­தி­ருப்பின் அது தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கோ அல்­லது உரிய தரப்­பி­ன­ருக்கோ முறைப்­பா­ட­ளிக்கும் பட்­சத்தில் அது குறித்து விசா­ரணை நடாத்த தயார் என குறிப்­பிட்­டி­ருந்தார்.
மொஹம்மட் நிப்லி முன்பு தங்க நகை கடை நடாத்­தி­யவர். தற்­போது தங்க நகை­களை உரி­மை­யா­ள‌ர்­க­ளிடம் இருந்து கொள்­வ­னவு செய்து வர்த்­தகம் செய்து வரு­பவர். மினு­வாங்­கொ­டையை சேர்ந்த அவர், படல்­க­முவ பொலி­ஸாரால், திவு­ல­பிட்­டிய பகு­தியை அண்­மித்த இட­மொன்றில் வைத்து கடந்த ஜூன் 14 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப‌­டு­கின்­றது.

இதன்போது, 12 பவுன் தங்க நகைகளை கோரி பொலிஸார் அவரை சித்திரவதை செய்ததாகவும், இதன்போதே அவருக்கு பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சிக்கப்பட்டதாகவும் கூறப்ப‌டுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.