வெலிகம பாரி அரபுக் கல்லூரி மீண்டும் திறப்பு

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பு­ரைக்­க­மைய கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்­பட்­டி­ருந்த வெலி­கம, கல்­பொக்க மத்­ர­ஸதுல் பாரி அரபுக் கல்­லூரி நேற்று முன்­தி­னம் 30 ஆம் திகதி முதல் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­லூ­ரியின் அதிபர் அப்துல் ரஹ்­மான் (மலா­ஹிரி) தெரி­வித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 5 அமைச்சுகளிலும் முஸ்லிம் செயலாளர்கள் எவரும் இல்லை

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து அமைச்­சு­க­ளிலும் எந்­தவொரு அமைச்­சுக்கும் முஸ்­லிம்கள் செய­லா­ள­ராக இல்லை. அத்­தோடு, கடந்த காலங்­களில் அரச நிய­ம­னங்­க­ளின்­போது பின்­பற்­றப்­பட்ட இனச்­ச­ம­நிலை புறந்­தள்­ளப்­பட்­டுள்­ள­தாக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்­தினார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பொலிஸ் ராஜியத்தையே உருவாக்கப் போகின்றது

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மா­னது நாட்டில் பொலிஸ் ராஜி­யத்­தையே உரு­வாக்கும் என அச்சம் வெளி­யிட்ட முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்ட மூலம் அர­சி­ய­ல­மைப்­புக்கு முற்­றிலும் முர­ணாக இருப்­பதால், அதனை சட்­ட­மாக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யோடு, சர்­வ­சன வாக்­கெ­டுப்பும் அவ­சியம் என வலி­யு­றுத்­தினார்.

பலஸ்தீனில் ‘நிலைமை மோசமடைகின்றது’ என ஐ.நா. முகவர் அமைப்­புகள் எச்சரிக்கை

ஐக்­கிய நாடுகள் நிவா­ரணப் பணி­க­ளுக்­கான அமைப்பு (UNRWA) பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உத­விக்­கொண்­டி­ருக்கும் நிலையில், இஸ்ரேல் அதற்கு எதி­ராக புதிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­த­போதும் அந் நிறு­வ­னத்தை 'பதி­லீடு செய்­யவோ அல்­லது மாற்­றவோ' முடி­யாது என காஸா உத­விக்­கான ஐ.நா.வின் ஒருங்­கி­ணைப்­பாளர் செவ்­வா­யன்று தெரி­வித்தார்.