முஸ்­லிம்கள் மீதான வெறுப்பும் விரோ­தமும்

முஸ்­லிம்கள் பன்­னெ­டுங்­கா­லங்­க­ளாக தமது தனித்­து­வத்தைப் பாது­காத்து, மற்ற சமூ­கங்­க­ளுடன் புரிந்­து­ணர்­வோடு வாழ்ந்து வரு­கின்­றனர். இவற்றின் கார­ண­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்ணம் காணப்­பட்­டது. துர­திஷ்­ட­வ­ச­மாக, சீரிய சிந்­த­னை­யற்ற சில முஸ்லிம் இளை­ஞர்­களின் இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான ஈஸ்டர் தினத் தாக்­குதல், முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்­ணத்தை சுக்­கு­நூ­றாக்கி விட்­டது. தாக்­கு­த­லுக்­குள்­ளான தேவா­ல­யங்­களும், ஹோட்­டல்­களும் புனர் நிர்­மாணம் செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால்,…

வாக்களிப்பது முஸ்லிமின் கடமை

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் 8ஆவது ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் தேர்தல் இன்னும் சில நாட்­களில் எதிர்­நோக்­க­வுள்ள நிலையில், கள நிலை­வரம் சூடு­பி­டித்து களை­கட்­டி­யுள்­ளது. தத்­த­மது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளையும் பிர­தான கட்­சிகள் வெளி­யிட்ட நிலையில், பல்­வே­று­பட்ட கருத்­தா­டல்கள் எதிரும் புதி­ரு­மாக சமூக வலை­த­ளங்­களில் வைர­லாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

பொது பலசேனாவின் பெயரில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுப்பு

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளிக்­க­ாவிட்டால் அவர் தேர்­தலில் வெற்­றி­ பெற்­றதன் பின்பு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் தங்கள் பொருட்­களை எடுத்­துக்­கொண்டு இந்­நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேறி விட வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­தாக சமூக வலைத்­த­ளங்­களில் தமிழ் மொழியில் பொய்­ப்பி­ர­சாரம் செய்­யப்­பட்டு வரு­வ­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக காத்­தான்­குடி நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் பொது ஜன பெர­முன கட்­சியின் காத்­தான்­குடி செயற்­பாட்­டா­ள­ரு­மான எம்.எஸ்.எம்.சியாத் நேற்று முன்­தினம் முறைப்­பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.