5 தினங்கள் பாராளுமன்றம் கூட மூன்றரை கோடி செலவு

0 658

கடந்த ஐந்து தினங்­க­ளாக நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளுக்­கான செலவு மூன்று கோடி 25 இலட்சம் ரூபாய்கள் என பாரா­ளு­மன்ற நிதிப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்றம் கூடிய ஒரு நாள் அமர்­வுக்கு சுமார் 65 இலட்சம் ரூபாய் செல­வா­கி­யுள்­ள­தாக பாரா­ளு­மன்ற நிதிப்­பி­ரிவின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற ஊழி­யர்­களின் சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள், மின்­சாரம், உணவு என்­பன இச்­செ­லவில் உள்­ள­டங்­கு­வ­தாக அவர் கூறினார்.

மற்றும் பாரா­ளு­மன்ற பாது­காப்பு செல­வு­களும் அதில் உள்­ள­டங்­கி­யுள்­ளன. பாரா­ளு­மன்ற அமர்­வுகள் கடந்த நவம்பர் மாதம் 23, 27, 29, 30 மற்றும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.