ஓர் ஏழை போல வௌ்ளை மாளி­கைக்குள் இருக்­கிறேன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­விப்பு

0 644

அமெ­ரிக்க – மெக்­ஸிக்கோ எல்­லையின் பாது­காப்பு கருதி சுவர் எழுப்ப வேண்டும் எனவும், அதற்­காக 500 கோடி டொலர் நிதி ஒதுக்க வேண்­டு­மெனவும் ஜனா­தி­பதி ட்ரம்ப் கோரிக்கை வைத்தார்.

ஆனால் இந்தக் கோரிக்­கைக்கு அமெ­ரிக்க எதிர்க்­கட்­சி­யான ஜன­நா­யகக் கட்சி தொடர்ந்தும் மறுத்­து­வ­ரு­கி­றது. மேலும் அமெ­ரிக்க அரசின் செல­வின நிதி மசோ­தாவை செனட்டில் நிறை­வேற்ற எதிர்க்­கட்சி முன்­வ­ர­வில்லை.
இதனால் தொடர்ந்து 3 ஆவது நாளாக அமெ­ரிக்க அரசு நிர்­வாகம் முடங்­கி­யுள்­ளது. அத்­தோடு அர­சாங்க ஊழி­யர்கள் ஊதி­ய­மின்றிப் பணி­யாற்ற வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கிறிஸ்மஸ் பண்­டி­கையை கொண்­டாட செல்­லாமல், ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளி­கையில் தங்­கி­யுள்ளார்.

இது­கு­றித்து அவர் தனது டுவிட்டர் பக்­கத்தில், “வெள்ளை மாளி­கையில் நான் தனி­யாக இருக்­கிறேன். அவ­ச­ர­மாக தேவைப்­படும் எல்லை பாது­காப்­புக்கு ஒரு ஒப்­பந்தம் செய்­ய உழைத்துக் கொண்­டி­ருக்­கிறேன்.

ஜன­நா­யக கட்சி எம்.பி.க்கள் திரும்பி வந்து அமெ­ரிக்க – மெக்­ஸிக்கோ எல்­லையின் பாது­காப்பு ஒப்­பந்­தத்­துக்கு அனு­மதி அளிக்க வேண்டும் அதற்­காக காத்­தி­ருக்­கிறேன்.

ஆனால், ஜன­நா­யகக் கட்சி எம்.பி.க்கள் நாட்­டைப்­பற்றி கவ­லைப்­ப­டாமல் கிறிஸ்மஸ் கொண்­டாடி வரு­கின்­றனர். அவர்கள் நாட்­டைப்­பற்றி பேசு­கி­றார்கள். வேடிக்­கை­யாக இருக்­கி­றது. ஆனால், நான் வெள்ளை மாளி­கையில் ஒரு ஏழை போன்ற உணர்­வுடன் தனி­யாக இருக்­கிறேன்.” என தெரி­வித்­துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.