28 ஆம் திகதிக்கு முன் பயணத்தை உறுதிப்படுத்துக
ஹஜ் கடமைக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள் தமது பயணத்தை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்பு உறுதிசெய்யுமாறும் மீளளிக்கப்படக்கூடிய பதிவுக்கட்டணமாகிய 25 ஆயிரம் ரூபாவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச்சீட்டினை திணைக்களத்தில் கையளிக்குமாறும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹஜ் பயணத்தை உறுதி செய்யுமாறு கடந்த மாதம் திணைக்களம் 3000…