‘ஊடகங்கள் எங்களை கொன்றுவிட்டன!’

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லை யில் சிறு­நீ­ரக பிரி­விற்­கான வைத்­தி­ய­ராக வைத்­தியர் இமாரா ஷாபி கட­மை­யாற்­று­கிறார். 23.05.2019 அன்று வழ­மை­யான நாள் ஒன்றைப் போலவே அவ­ருக்கும் இருந்­தது. அவரும் அவ­ரு­டைய கண­வரும் நேர காலத்­துடன் எழுந்து அந்த நாளைப் பற்­றியும் தமது பிள்­ளைகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டி­னார்கள். அதி­காலை 5 மணி­ய­ளவில் வழ­மை­போல வைத்­தியர் ஷாபி தொழு­கைக்­காக அரு­கி­லுள்ள பள்­ளிக்கும் சென்று வந்­துள்ளார். வைத்­தி­யர்­க­ளான இமாரா ஷாபி மற்றும் செய்கு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி ஆகியோர் ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர…

சூறையாடப்படும் சூடான்

இன்று சர்­வ­தே­சத்தின் முழுப்­பார்­வையும் சூடான் என்ற நாட்டின் மீதே படிந்­துள்­ளது. அதற்குக் காரணம் அந்த நாட்டில் இடம்­பெறும் தொடர்ச்­சி­யான போராட்­டங்­களும் மக்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளு­மே­யாகும். சூடான் நாட்டை சுமார் 30 வரு­டங்­க­ளாக ஒமர் அல் பஷீர் ஆட்சி செய்து வந்தார். ஒமரின் ஆட்­சியால் அதி­ருப்தி அடைந்த மக்கள் நாடு முழு­வதும் ஒமரை பதவி வில­கு­மாறு கூறி ஆர்ப்­பாட்­டங்­களை கட்­ட­விழ்த்து விட்­டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இரா­ணு­வத்தால் ஒமர் கைது செய்­யப்­பட்­ட­துடன் பதவி கவிழ்க்­கப்­பட்டார்.…

‘தர்­மச்­சக்­சரம்’ என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது முஸ்லிம் என்பதால் தானே என்னைக் கைது செய்தார்கள்?

மஹி­யங்­க­னையின் ஹஸ­லக்க பிர­தே­சத்தைச் சேர்ந்த எம்.ஆர். மஸா­ஹிமா என்ற பெண் தர்­மச்­சக்­சரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­தி­ருந்­த­தாக போலி­யாகக் குற்றம் சாட்­டப்­பட்டு ஹஸ­லக்க பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். செய்­யாத தவ­றுக்­காக அவர் கைது செய்­யப்­பட்­டது மாத்­தி­ர­மின்றி சிறைச்­சா­லை­யிலும் அடைக்­கப்­பட்டார். தற்­போது சட்­டத்­த­ரணி ஸரூக் மற்றும் அவ­ரது மனை­வியின் துணை­யுடன் மஸா­ஹிமா பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். சிறைச்­சா­லையில் இருந்து வெளி­யே­றிய மஸா­ஹிமா தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­யையும் அதனால் தான் பட்ட…

பழிவாங்குவதற்கான தருணம் இதுவல்ல

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்பாராத விதங்களிலெல்லாம் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் மடிகே மிதியாலை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுட்டிக்காட்டியது போல, ஈமான் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கும்பல் செய்த பாவத்தை நாம் எல்லோருமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளதை…