பழிவாங்கும் படலம்

0 667

எமது எதிர்த்­த­ரப்­பி­னரைப் பழி­வாங்கும் தன்­மை­யா­னது பழங்­கு­டி­யி­னர்­க­ளி­ட­மி­ருந்து எமக்கு கிடைக்­கப்­பெற்ற பழக்­க­மொன்­றாகக் குறிப்­பி­டலாம். அது இலங்கை அர­சி­யலில் ஆழ­மாக பதிந்­தி­ருக்கும் ஒன்­றா­கவும் குறிப்­பி­டலாம்.

இலங்­கை­யா­னது ஜன­நா­யக நாடாக இருப்­பது அதன் வெளித்­தோற்­றத்தில் மாத்­தி­ரமே என்­பது இத­னூ­டாகத் தெளி­வா­கின்­றது. இலங்­கையில் தொட­ராகத் தேர்­தல்கள் நடாத்­தப்­ப­டு­கின்­ற­போ­திலும் ஜன­நா­யகம் குறித்த ஆழ­மான புரிதல் இருக்­கின்ற நாடொன்­றாகக் குறிப்­பிட முடி­யா­ம­லுள்­ளது. இலங்­கையில் மக்கள் மத்­தியில் அபி­மானம் பெற்ற லிபரல் முறை­யி­லான அமைப்­புக்கள் எந்தக் காலப்­ப­கு­தி­யிலும் இருந்­த­தாகத் தெரி­ய­வில்லை என்­ப­துடன், இலங்­கையின் அர­சியல் தலைவர்­க­ளிலும் லிபரல் சிந்­த­னை­யு­டைய எவ­ருமே இருக்­க­வில்லை. பொன்­னம்­பலம் அரு­ணா­சலம், ஈ.டப்ளிவ். பெரேரா, டீ.பீ.ஜய­தி­லக போன்ற எமது ஆரம்­ப­காலத் தலை­வர்கள் எவ­ரை­யுமே லிபரல் குறித்த தெளி­வுள்ள அர­சியல் தலை­வர்­க­ளாகக் கரு­த­மு­டி­வ­தில்லை.

இலங்­கை­யி­லி­ருந்து வந்த தேசப்­பற்று குறித்த சிறந்த விளக்­க­வுரை ஒன்று டொனமூர் ஆணைக்­குழு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் இலங்­கையின் தேசப்­பற்­றா­னது நாட்டின் அனைத்து மக்கள் தொகு­தி­யி­ன­ரையும் உள்­ள­டக்­கி­யதும் நாட்டை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தா­கவும் இருக்­க­வில்லை. மாறாக சாதி, இன, மதங்­களை முதன்­மைப்­ப­டுத்­திய அமைப்­பி­லான தேசப்­பற்­றா­கவே அது குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. குறித்த அறிக்கை வெளி­யி­டப்­பட்டு 90 வரு­டங்கள் அளவில் கழிந்­து­விட்­ட­போ­திலும் இலங்­கையின் தேசப்­பற்று என்­ப­தா­னது எந்­த­வி­த­மான மாற்­ற­மு­மின்றி அன்­றி­ருந்த அதே நிலை­யி­லேயே இன்றும் காணப்­ப­டு­கின்­றது.

பழங்­குடி அர­சியல்

எதிர்த்­த­ரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து பழி­தீர்த்­துக்­கொள்­கின்ற நடை­முறை இலங்கை சுதந்­திரம் பெற்­றுக்­கொண்ட காலப்­ப­கு­தி­யி­லி­ருந்தே இருந்து வரு­கின்ற ஒரு ஜன­நா­யக முறைக்கு மாற்­ற­மான முறை­யாகக் குறிப்­பி­டலாம். அர­சாங்­கங்கள் மாற்றம் பெறும்­போது எதிர்க்­கட்­சிகள் சார்ந்த தலை­வர்­க­ளிடம் மாத்­தி­ர­மன்றி எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளிடமும் பழி­தீர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றது. அர­சி­யல்­வா­தி­கள்­கூட நாட்டின் நலன்­களை முன்­னி­றுத்தி செய­லாற்­றாது தமது கட்சி ஆத­ர­வா­ளர்­களின் நலன்­களை முன்­னி­ருத்­தியே செயற்­பட்டு வருக்­கின்­றனர். கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் தவறு என்­ப­தாகக் கரு­து­வது எதிர்த்­த­ரப்­பி­னரால் செய்­யப்­ப­டு­கின்ற தவ­று­களை மாத்­தி­ர­மாகும். தமது தலை­வர்கள் மூல­மாக நிகழ்­கின்ற தவ­று­களை அவர்கள் தவறு என்­ப­தாகக் கரு­து­வ­தில்லை. தான் ஒரு வெற்­றியைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்னர் அதற்கு முன்னர் ஆட்­சி­யி­லி­ருந்­த­வர்­களின் பழி­வாங்­கல்­க­ளுக்கு இலக்­கான தமது கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு தாரா­ள­மாக நஷ்­ட­ஈடு வழங்கும் செயன்­மு­றை­களை அனைத்து அர­சியல் கட்­சி­களும் பழக்­க­மாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. அதற்­காக இலங்கை நாடு செலுத்­தி­யி­ருக்கும் நஷ்­ட­ஈ­டு­களை கணக்­கி­டு­மி­டத்து அது பாரிய தொகை­யாக அமை­யக்­கூடும்.

இலங்­கையின் கட்­சி­க­ளுக்கு ஏதோ ஒரு அடிப்­ப­டையில் குடும்ப பின்­ன­ணிகள் காணப்­ப­டு­வ­துடன் அவற்­றுக்கு உரிமை கோரு­கின்ற குடும்­பங்­களோ அல்­லது குடும்­பங்­களின் தொகு­தி­களோ காணப்­ப­டு­வ­துண்டு. ஐக்­கிய தேசியக் கட்­சியின் உரிமை ஒரு குடும்­பத்தைச் சேர்ந்த குழு­வொன்­றி­டமே காணப்­ப­டு­கின்­றது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உரிமை ஒரு குடும்­பத்­திடம் காணப்­பட்­டது. தற்­போது பொது­ஜன பெர­மு­னவின் உரி­மையும் ஒரு குடும்­பத்­தி­டமே இருக்­கின்­றது.

தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­ப­வர்கள் கட்­சியின் நிர்­வா­கத்­தினால் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும் என்­ற­போ­திலும் கட்­சியின் உரி­மை­யா­ளி­யினா­லேயே வேட்­பா­ளர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர். அங்­கத்­துவக் கட்­டணம் செலுத்­து­கின்ற அமைப்­பி­லான எந்த அங்­கத்­த­வர்­களும் இலங்­கை­யி­லி­ருக்­கின்ற கட்­சி­களில் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அனைத்துக் கட்­சி­களும் கறுப்புப் பணத்­தி­லேயே இயங்­கி­வ­ரு­கின்­றன. கட்­சி­க­ளுக்கு நிதி கிடைக்கும் முறைகள் குறித்தோ கிடைக்­கப்­பெ­று­கின்ற நிதியின் அளவு குறித்தோ அல்­லது அவை செல­வி­டப்­ப­டு­கின்ற முறை குறித்தோ கட்சித் தொண்­டர்கள் அறி­வ­தில்லை.

பழி­வாங்கும் கலா­சாரம்

முத­லா­வது பிர­த­ம­ரான டீ.எஸ். சேன­நா­யக்க இந்­திய தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாக்­கு­ரி­மையை நீக்­கி­விட்டார். தோட்­டப்­ப­கு­தி­களில் அவர்­க­ளது வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டாத தொகு­தி­களில் சம­ச­மாஜக் கட்­சிக்கு வாக்­கு­களை வழங்­கிய கார­ணத்­தி­னாலும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் கட்­சி­க­ளி­லி­ருந்து தெரி­வா­ன­வர்கள் தனக்கு அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என­பது இதற்­கான காரண­மாகும். 1956 ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்க தமிழ் மக்­களின் மொழி உரி­மையை இல்­ல­ாம­லாக்­கி­யது தனக்கு ஆத­ர­வ­ளித்த சிங்­கள பௌத்­தர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வாகும். இந்த அடிப்­ப­டையில் எதிர்த்­த­ரப்­பி­ன­ரிடம் உச்ச அளவில் பழி­தீர்த்­துக்­கொண்ட தலை­வ­ராக ஜனா­தி­பதி ஜய­வர்­த­னவை குறிப்­பி­டலாம். தான் ஆட்­சிக்கு வந்­ததும் பொலிஸ் படை­யி­ன­ருக்கு ஒரு வார­காலம் விடு­முறை வழங்­கு­வ­தாக 77 ஆம் ஆண்டில் தேர்தல் கூட்­ட­மொன்றில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். சிறி­மா­வோவின் ஐக்­கிய முன்­னணி ஆட்சிக் காலத்தில் யூ.என்.பி. ஆத­ர­வா­ளர்கள் கடு­மை­யாகப் பழி­வாங்­கப்­பட்­டி­ருந்­த­தனால் அதற்­காகப் பழி­தீர்த்­துக்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கு­வ­தற்­கா­கவே பொலிஸ் படை­யி­ன­ருக்கு ஒரு­வாரம் விடு­முறை வழங்­கு­வ­தாக தனது கட்சிக் கூட்­டத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திக்கு அமைய வெற்­றி­பெற்­றதன் பின்னர் பழி­தீர்த்­துக்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பமும் தமது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. பொலிஸ் அறிக்­கையின் பிர­காரம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட வீடு­களின் எண்­ணிக்கை ஆயி­ரத்தை அண்­மித்­தி­ருந்­தது.

இந்தப் படலம் அத்­துடன் நின்­று­வி­ட­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் ஆறில் ஐந்து பெரும்­பான்­மையைப் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி ஜய­வர்­தன, தனது எதிர்த்­த­ரப்­பு­வா­தி­யினால் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத அடிப்­ப­டையில் அவ­ரது குடி­யு­ரி­மையை இல்­லா­ம­லாக்­கினார். விஜே­வீ­ரவின் மக்கள் விடு­தலை முன்­னணி அம்­மை­யாரின் குடி­யு­ரி­மையை நீக்­கு­வதில் பிர­தான பங்­கா­ள­ராக செயற்­பட்­டது.

ஜே.வி.பியின் இரண்­டா­வது கல­வரக் காலப்­ப­கு­தியில் தமது பாது­காப்­புக்­காக பிரத்­தி­யேக பாது­காப்புப் படை­யினை வைத்­தி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது எதிர்த்­த­ரப்­பி­னரை ஜே.வி.பி. அங்­கத்­த­வர்கள் என்­ப­தாக குறிப்­பிட்டு கொலை செய்­தனர். ஜே.வி.பியி­னரும் தமது முதல் சுற்றில் ஆளும் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளையும் இட­து­சாரிக் கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்­க­ளையும் கொலை­செய்­த­துடன் இரண்­டா­வது சுற்றில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளையும் கொலை­செய்­தனர்.

பழி­வாங்கும் செயன்­மு­றையில் மாற்றம் உரு­வாதல்

ஐ.தே.கயின் 17 வருட ஆட்­சியின் பின்­ன­ரான சந்­தி­ரிகா ஆட்­சிக்­கா­ல­மானது பழி­வாங்கும் செயன்­மு­றையில் பாரி­ய­தொரு மாற்­ற­மேற்­பட்ட கால­மாகக் குறிப்­பி­டலாம். குறித்த மாற்­றத்­திற்கு குறிப்­பி­டத்­தக்­க­ளவில் எனது பங்­க­ளிப்பும்; கார­ண­மாக அமைந்­த­துடன் இன்னும் சில கார­ணங்­களும் அந்த மாற்­றத்தில் செல்­வாக்கு செலுத்­தின. 94 ஆம் ஆண்டு தேர்­த­லின்­போது தேர்தல் பிர­சா­ரத்­துக்குப் பொறுப்­பான குழு­வுக்குத் தலை­வ­ராக நான் செய­­லாற்­றினேன்.

வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தி­யி­லா­யினும் பிர­சாரப் பணி­களில் சேறு­பூசும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தில்லை என்­ப­தற்கு குழு­வி­னரை உடன்­படச் செய்­வ­தற்கு என்னால் முடி­யு­மாக அமைந்­தது. தேர்தல் பிர­சா­ரங்­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ர­வேண்­டிய இறு­தித்­தி­னத்தின் பின்னர் அனைத்துப் பிர­தான செய்­தித்­தாள்­க­ளிலும் இரண்டு பக்­கங்­க­ளுக்­கான அறி­வித்­த­லொன்றைப் பிர­சு­ரிக்க நட­வ­டிக்கை மேற்­கொண்டோம். வரு­கின்ற தேர்தல் வெற்­றியின் பின்னர் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்கு சங்­க­டங்கள் ஏற்­ப­டுத்தக் கூடாது என்­ப­தாக அந்த அறி­வித்தல் ஊடாக வேண்­டுகோள் விடுத்தோம். செயற்­பா­டுகள் மூல­மாக மாத்­தி­ர­மன்றி வார்த்­தைகள் ஊடா­கவும் சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்தக் கூடாது என்­ப­தாக வேண்­டினோம். அது சந்­தி­ர­ிகா­வினால் வேண்­டப்­பட்ட ஒன்­றல்­லாத போதிலும் குறித்த அறி­வித்­தலைப் பிர­சு­ரிப்­ப­தற்­கான அனு­ம­தி­யினை சந்­தி­ரிகா வழங்­கினார்.

கடு­மை­யான போட்­டி­யாக இருப்­பினும் இறு­தியில் வெற்றி கிட்­டு­மென்ற நிலை இருந்­தாலும் பிர­த­மரைத் தெரி­வு­செய்யும் உரிமை ஜனா­தி­பதி விஜே­துங்க வசமே இருந்­தது. சந்­தி­ரிகா பொது­ஜன முன்­ன­ணியின் பிர­ப­ல­மான நட்­சத்­தி­ர­மாக இருந்­த­போ­திலும் கட்­சியின் தலை­வ­ராக அப்­போது அவர் இருக்­க­வில்லை. கட்­சியின் தலைமை அவ­ரது தாயார் வசமே இருந்­து­வந்­தது. ஜனா­தி­ப­தி­யினால் தவ­று­த­லா­க­வேனும் பிர­தமர் பத­விக்­காக சந்­தி­ரி­காவைத் தெரிவு செய்­யாது அவ­ரது தாயார் தெரிவு செய்­யப்­ப­டு­வா­ரானால் அதற்­காக மேற்­கொள்­வ­தற்­கான எந்­த­வி­த­மான மாற்று நட­வ­டிக்­கையும் இலாமல் போய்­விடும். அவ்­வா­றான ஒரு­நிலை ஏற்­படா­ம­லி­ருப்­ப­தற்­காக முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­யொன்று இறுதித் தறு­வாயில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அப்­போது ஓய்­வு­பெற்­றி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­னவை சந்­தி­ரிக்கா சந்­தித்தார். தனது தாயார் பிர­த­ம­ராகத் தெரிவு செய்­யப்­ப­டு­வா­ரானால் அவர் ஜே. ஆர். உட்­பட ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லி­ருந்தும் பழி­தீர்த்­துக்­கொள்ளும் நிலை ஏற்­ப­டலாம் என்­ப­தா­கக்­கூறி அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­ப­டா­தி­ருப்­ப­தற்­காக பிர­தமர் பத­வியை தன்­னிடம் வழங்­கு­மாறு ஜே.ஆரிடம் கேட்­டுக்­கொண்டார். ஜே.ஆர். ஜனா­தி­பதி விஜே­துங்­கவைத் தொடர்­பு­கொண்டு நிலை­மையை விளக்­கினார். அதன் பின்னர் ஜனா­தி­ப­தியின் அழைப்­பின்­றியே சந்­தி­ரிகா அவரை சந்­திக்கச் சென்றார்.

தேர்தல் முடிவு வெளி­யா­கிக்­கொண்­டி­ருக்­கும்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரை இடம்­மாற்றி அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்ளும் முயற்­சியில் காமினி திசா­நா­யக்க ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்தார். பிர­தமர் பத­வி­யி­லி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு அலரி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யா­னது காமினி திசா­நா­யக்­காவின் முயற்­சியை பல­வீ­னப்­ப­டுத்தும் திட்­டத்தின் ஓர் அங்­க­மா­க­வாகும். இந்த நட­வ­டிக்­கை­யா­னது ரணில், சந்­தி­ரி­கா­வுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்ட இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஒரு­வரை ஒருவர் பாது­காத்­துக்­கொள்ளும் முறையின் உரு­வாக்கம்

அன்­றைய இக்­கட்­டான சூழ்­நி­லையில் ஏதேதோ கார­ணங்­க­ளுக்­கா­க­வேனும் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன, ஜனா­தி­பதி டீ.பீ. விஜே­துங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் சந்­தி­ரி­கா­வுக்கு உத­வி­பு­ரிந்­தனர். இதன் விளை­வாக அதி­காரம் கிடைத்த பின்னர் நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்­துடன் புதி­ய­தொரு அங்கம் இணைந்­து­கொண்­ட­தாகக் குறிப்­பி­டலாம். எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டும்­போது ஆட்­சியைக் கைப்­பற்­றிக்­கொள்­வ­தற்­காக ஆட்­சி­யி­லி­ருக்­கின்ற கட்சி தொடர்­பிலும் அதன் தலை­வர்கள் தொடர்­பிலும் எப்­பேர்ப்­பட்ட ஊழல் குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்­து­வ­தற்­காக முற்­ப­டு­கின்­ற­போ­திலும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிக்­கொண்­டதன் பின்னர் அந்த ஊழல் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்­கா­ம­லி­ருப்­ப­தற்­காக பிர­தான கட்­சிகள் இரண்­டுக்­கு­மி­டையே அமை­தி­யா­ன­தொரு இணக்­கப்­பாடு அமைத்­துக்­கொள்­வ­தா­னது அர­சியல் கலா­சா­ரத்தில் புதி­தாக இணைக்­கப்­பட்ட அங்­க­மொன்று என்­ப­தாகக் குறிப்­பி­டலாம்.

அதன் கார­ண­மாக சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­விடம் பல­வ­கை­யான கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் 17 வருட ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்­ப­தற்­கான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. சந்­தி­ரிகா ஜனா­தி­பதி பத­வியில் இருக்­கும்­போது பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தை ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைப்­பற்­றிக்­கொண்ட போதிலும் சந்­தி­ரிகா ஆட்சிக் காலத்தில் நடை­பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்­ப­தற்­காக முற்­ப­ட­வில்லை. அதன்­பின்னர் ஆட்­சிக்­கு­வந்த மஹிந்த அர­சாங்­கம்­கூட சந்­தி­ரி­கா­வுடன் பிணக்­குகள் இருந்­த­போ­திலும் அவ­ரது ஆட்சிக் காலத்­திலோ அல்­லது பாரா­ளு­மன்ற அதி­காரம் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வச­மி­ருந்த காலப்­ப­கு­தி­யிலோ ஏற்­பட்ட ஊழல்கள் தொடர்பில் நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வில்லை. ஆட்­சி­யி­லி­ருக்­கின்ற கட்­சிக்கு அந்தக் காலப்­ப­கு­தியில் முடிந்­த­ளவு சொத்­துக்­களை ஈட்­டிக்­கொள்ளும் உரிமை வழங்கும் அடிப்­ப­டை­யி­லான விதி­மு­றை­களே ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. அது­தொ­டர்பில் பேசு­வ­தற்­கான உரிமை எதிர்க்­கட்­சிக்கு இருந்­த­போ­திலும் ஆட்­சியைக் கைப்­பற்­றிய பின்னர் முன்னர் ஆட்­சி­யி­லி­ருந்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தவ­றுகள் குறித்து தேடிப்­பார்ப்­ப­தி­லி­ருந்து தவிர்ந்­து­கொள்­வ­தற்­காக இரண்டு கட்­சி­க­ளி­டையே ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட அமை­தி­யா­ன­தொரு இணக்­கப்­பாடு காணப்­பட்­டது.

அவ்­வா­றா­ன­தொரு நடை­முறை காணப்­பட்­டது என்­ப­தனை நிரூ­பிப்­ப­தற்­கான பல­மான இரண்டு எடுத்­துக்­காட்­டுகள் வரு­மாறு:

ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் ஆட்­சிக்­கா­லத்தில் பட்­ட­லந்த வதை­முகாம் குறித்து அராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக மூன்­றுபேர் கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யி­லி­ருந்த முக்­கி­ய­மான தக­வல்கள் அடங்­கிய அத்­தி­யா­ய­மொன்று அச்­சி­டப்­பட்ட அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­ப­டா­ம­லி­ருந்­த­தாக குறித்த ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து எனக்கு அறி­யக்­கி­டைத்­தது. நான் அது­கு­றித்து முன்னர் எழு­தி­யி­ருக்­கின்றேன். அது உண்­மை­யாயின் ரணில் விக்­கிர­ம­சிங்­கவைப் பாது­காப்­ப­தற்­கா­கவே அவ்­வாறு செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்டும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் பதி­வியில் இருக்­கும்­போது முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னையில் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவை பாது­காப்­ப­தற்­காக நட­வ­டிக்கை மேற்­கொண்­டி­ருக்­கின்றார். வங்­கி­களில் தனியார் காப்­ப­கங்கள் வைத்­தி­ருக்­கின்ற அர­சி­யல்­வா­தி­களின் தக­வல்கள் அறிந்த ஒரு­வ­ரூ­டாக பிர­த­ம­ருக்கு அவை ஒவ்­வொன்­றாக வழங்­கப்­பட்­டி­ருந்­தன. காப்­ப­கங்கள் இருக்­கின்ற வங்­கிகள் மற்றும் அவற்றில் இருக்­கின்ற பணப்­பெ­று­மதி என்­பன ஏதோ ஒரு விதத்தில் அவ­ருக்கு கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தது. சொந்த நலன்­க­ளுக்­கா­க­வன்றி பொது­நலன் கரு­தியே குறித்த தக­வல்­களை அவர் வழங்­கி­யி­ருந்தார். முத­லா­வது, இரண்­டா­வது தக­வல்கள் குறித்து சட்டம் முறை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டன. அவ­ரது மூன்­றா­வது தகவல் சந்­தி­ரி­காவின் காப்­பகம் குறித்­த­தாக இருந்­தது. எனினும் பிர­தமர் முன்­னைய இருவர் தொடர்பில் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யினை இதற்­கா­கவும் மேற்­கொள்­ள­வில்லை. இது தொடர்­பான விப­ரங்­களை எனது “சவ்ர ரெஜினி” எனும் நூலில் குறிப்­பிட்­டி­ருக்­கின்றேன்.

மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி உத்­தி­யோ­க­பூர்வ தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அழைத்து தனது பத­வியை விட்டுச் சென்­ற­து­கூட அது­வரை காலமும் நடந்­து­வந்த நடை­மு­றைக்­கேற்பத் தனது விட­யங்­க­ளையும் மேற்­கொள்­வ­தற்­காக ரணில் விக்­கிர­ம­சிங்­க­விடம் உறு­தி­மொழி வாங்­கு­வ­தற்­காக இருக்­கலாம்.

நல்­லாட்­சியின் முட்­டாள்­த­ன­மான நடை­முறை

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் ஊழல்­களை சீரா­ன­மு­றையில் மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாது மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தை மாத்­திரம் இலக்­கு­வைத்து செயற்­பட்­ட­தா­னது அர­சாங்கம் தூக்­கி­யெ­றி­யப்­படும் நிலை உரு­வாகக் கார­ண­மாக அமைந்­தது. ஊழலின் அள­வு­களில் வித்­தி­யா­சங்கள் இருந்­த­போ­திலும் ஊழல் என்­பது ராஜபக் ஷ காலத்தில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட ஒன்­றல்ல என்­ப­தா­கவே குறிப்­பி­ட­வேண்டும். அதற்கு முன்­ன­ரான சந்­தி­ரிகா காலத்­திலும் அதற்கும் முன்­ன­ரான யூ.என்.பி.ஆட்­சிக்­கா­லத்­திலும் காணப்­பட்டே வந்­தி­ருக்­கி­ன்றன.

மஹிந்த ராஜபக் ஷவை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்­காக ஒன்­றி­ணைந்­தி­ருந்த பழைய அர­சி­யல்­வா­தி­களில் அதி­க­மா­னோ­ருக்கு ஊழல் சார்ந்த வர­லாறு காணப்­ப­டு­கின்­றது. ஆட்­சியை பெற்று நாட்டை அபி­வி­ருத்­திப்­பா­தையில் இட்டுச் செல்­வது அவர்­க­ளது நோக்­க­மாக இருக்­க­வில்லை. மீண்டும் பொரு­ளீட்­டு­வ­தற்கு சந்­தர்ப்­ப­மொன்றைப் பெற்­றுக்­கொள்­வதே அவர்­க­ளது நோக்­க­மாக இருந்­தது. ஊழ­லுக்கு எதி­ராக செயற்­படும் அர­சாங்கம் ஒன்­றாயின் அது ஊழ­லற்ற ஒன்­றா­கவே இருக்­க­வேண்டும். அது மக்­க­ளுக்குத் தெரியும் வித­மா­கவும் இருக்­க­வேண்டும். எனினும், நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் அத்­த­கைய தன்மை இருந்­த­தாகக் கரு­த­மு­டி­ய­வில்லை.

ஊழல் விசா­ர­ணைகள் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு மட்டும் வரை­ய­றுக்­கப்­ப­டும்­போது அது அர­சியல் பழி­வாங்­க­லா­கவே மஹிந்த ஆத­ர­வா­ளர்­களால் நோக்­கப்­படும். 1977 ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தோல்­வி­ய­டைந்­தது போன்று படு­தோல்­வி­யாக மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வி அமை­ய­வில்லை. சிங்­களப் பகு­தி­களின் வாக்­குகள் வெற்­றி­ய­டைந்­த­வரை விட தோல்­வி­ய­டைந்­த­வ­ருக்­கா­கவே அதி­க­மாக கிடைத்­தி­ருந்­தன. இந்த விடயம் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஊழல் விசா­ர­ணை­களை ராஜபக் ஷ ஆட்­சிக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாது அனைத்து ஆட்சிக் காலங்­க­ளிலும் இடம்­பெற்ற ஊழல்கள் குறித்து பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்பின் அது மக்­களால் ஏற்­றுக்­கொள்ளும் விதத்தில் அமைந்­தி­ருக்க வாய்ப்­பி­ருந்­தது. ஏதா­வது கார­ணங்­க­ளினால் அவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் சிக்­கல்கள் இருந்­தி­ருப்பின் இதன் பின்னர் ஊழல் ஏற்­ப­டாத விதத்­தி­லான சட்ட ஒழுங்­கு­களை மீள்­கட்­ட­மைத்­தி­ருக்­கலாம். பார­ாளு­மன்ற உறுப்­பி­னர்கள் சட்­டத்­துக்கு முர­ணாக அர­சாங்­கத்­துடன் வியா­பா­ரங்கள் மேற்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­களை இல்­லா­ம­லாக்கி கட்சி பேதங்கள் பாராமல் குறித்த தவ­று­களை செய்­தி­ருப்­ப­வர்­களைப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து நீக்கம் செய்­தி­ருக்­கலாம். ஹொங்கொங் அல்­லது சிங்­கப்பூர் போன்ற நாடு­க­ளி­லி­ருக்­கின்ற ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் போன்று இலங்­கையின் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவை மீள் கட்­ட­மைத்­தி­ருக்­கலாம். இவ்­வா­றான வழி­மு­றை­கள் இருந்­த­போ­திலும் நல்­லாட்சி அரசு சிக்­க­லான முறை­களைத் தெரி­வு­செய்­தி­ருந்­தது. அத­னூ­டாக மஹிந்த தரப்பு தங்­களைப் பாது­காத்துக் கொள்­வ­த­ற்­காகப் போராடும் நிலை­யொன்றை உரு­வாக்­கி­விட்­டது. அதன் விளை­வாக நல்­லாட்சி அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்து ராஜபக் ஷ அர­சாங்கம் மீண்டும் உரு­வா­னது.

மறு­பக்கம் சுழ­லுதல்

புதிய அர­சாங்­கத்தின் கீழ் மேற்­கொள்­ளப்­படும் பழி­வாங்­க­லா­னது நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்ட மஹிந்­த­வுக்கு எதி­ரான ஊழல் விசா­ரணை செயற்பா­டு­களை அடிப்­ப­டையாக் கொண்­ட­தாகக் குறிப்­பி­டலாம். அந்த முட்­டாள்­த­ன­மான செயற்­பா­டுகள் மூல­மாக அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்­டது குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­திற்­காகும். அனைத்துக் குற்­றங்­களும் அவர்கள் மீதே சுமத்­தப்­பட்­டன. அத­னூ­டாக நீதித்­து­றைக்கும் பாரிய பாதிப்­புக்கள் ஏற்­ப­டலாம்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது வேட்டையாக சம்பிக ரணவகவின் கைது அமைந்திருக்கின்றது. இது இன்றளவில் பொதுமக்களின் பேசுபொருளாகவும் மாறியிருக்கின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் அவரது உயிரைப் பாதுகாப்பதற்கு நானும் உதவியிருக்கின்றேன். புதிய அரசாங்கத்தின் கையிலிருக்கின்ற சிங்கள பௌத்த கொடியை மீண்டும் பறித்தெடுக்கத்தக்க ஒரு தலைவராக அவர் இருப்பதானது ஏனையவர்களைவிட அவர் இலக்கு வைக்கப்படக் காரணமாக அமையலாம். சிங்கள பௌத்தத்தினை முற்படுத்தி விடுதலைக்காகப் போராடுவது என்பது எண்ணக்கரு ஒன்றாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலங்களில் அந்த சிந்தனையை விதைத்தவர் அவராவார். 1956 ஆம் ஆண்டு நிகழ்வுகளுக்குப் பின்னர் பிக்குகளை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தவரும் அவராவார்.

தற்போது அவர் முகம்கொடுக்கின்ற விடயங்கள் சங்கடங்கள் நிறைந்ததாக இருந்தபோதிலும் எதிர்காலத்தில் பலம்வாய்ந்த தலைவராவதற்கான வாய்ப்புகள் உள்ளவர் என்ற அடிப்படையில் பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்துவது அவருக்கு சிறந்ததாகவே அமையப் போகின்றது. அவரிடம் மறைக்க வேண்டிய விதத்திலான அசிங்கமான இரகசியங்கள் இல்லாதிருப்பின் தற்போது நடைபெறுகின்ற பரிசோதனைகள் ஊடாக அவர் ஒரு பிரகாசமான தலைவராக மிளிரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. அவ்வாறில்லையெனில் கடந்த கால தலைவர்கள் போன்று வரலாற்றின் குப்பைகளுடன் இணைந்துவிடுவார்.

பழிவாங்குவது என்பது வெற்றிபெற்ற கட்சிக்கு மகிழ்சியை பெற்றுத்தரும் ஒரு விடயம் என்றாலும், இலங்கை முகம்கொடுத்திருக்கின்ற பாரிய பிரச்சினைகளுக்கு அது ஒரு சிறந்த தீர்வாக ஒருபோதுமே அமையப் போவதில்லை. கப்பல் ஒன்றின் கெப்டன் ஒருவருக்கு கப்பலில் ஏற்படும் கோளாறுகளை திருத்திக்கொள்ளும் திறன் இருக்கலாம். எனினும், கப்பலின் அடியில் ஓட்டை விழுந்து நீர் நிரம்பி கப்பல் அமிழ்ந்து கொண்டிருக்குமாயின் அந்த நிலையை அவரால் தனியாக நின்று திருத்தியமைப்பது சாத்தியமான விடயமாகாது. அந்தப் பணிக்காக கப்பலின் ஊழியர்களிடம் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதுடன் அந்த கப்பலில் பயணிக்கின்ற பயணிகளிடத்திலிருந்தும் அதிகபட்ச உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.-Vidivelli

  • விக்டர் ஐவன்
    தமிழில்: ராஃபி சரிப்தீன்

Leave A Reply

Your email address will not be published.