அரச நிர்வாகத்திற்கு 19 தடையாக உள்ளது

அதனை நீக்க பலமான பாராளுமன்றம் அவசியம் என்கிறார் ஜனாதிபதி கோத்தாபய

0 903

19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் அரச நிர்­வா­கத்­திற்கு பாரிய தடை­யாகக் காணப்­ப­டு­கின்­றது. இதனை நீக்­கு­வ­தற்­கான பல­மான பாரா­ளு­மன்­றத்தின் தேவைப்­பாட்­டினை வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக் ஷ, மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஏது­வான முதன்மை காரணி அது­வாகும் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

நாட்டை அபி­வி­ருத்­தியின் பாதையில் கொண்டு சென்று, பொரு­ளா­தாரம் பல­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டில் அப்­போ­தைய அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­தது. மக்கள் அப்­போ­தைய அர­சாங்­கத்தை நிரா­க­ரித்­த­மைக்­கான கார­ணங்­களை புரிந்து செயற்­பட வேண்டும். இல்­லையேல் பெற்­றுக்­கொண்ட இந்த வெற்­றியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டி யிருக்கிறார். செயற்­தி­றன்­மிக்க நாட்டை உரு­வாக்கும் நோக்கில் மாந­கர சபைகள், நகர சபைகள் மற்றும் பிர­தேச சபை­களின் தலை­வர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடையில் சனிக்­கி­ழமை ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக் ஷ கூறி­யி­ருப்­ப­தா­வது:

மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்றும் வகையில் செயற்­பட வேண்­டி­யது மக்கள் பிர­தி­நி­தி­களின் பொறுப்­பாகும். அந்தக் குறிக்­கோள்­களை வெற்­றி­கொள்­வ­தற்கு நகர சபை­களும் பிர­தேச சபை­களும் செயற்­தி­ற­னுடன் செயற்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

மகத்­தான வெற்­றியை பெற்­றுக்­கொ­டுத்த மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை உரி­ய­வாறு நிறை­வேற்­று­வதே எனக்கும் அனைத்து மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கும் மக்கள் கைய­ளித்­துள்ள சவால்­மிக்க பொறுப்­பாகும். இதற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டி­யது அனை­வ­ரி­னதும் பொறுப்­பாகும்.

கழி­வு­களை வெளி­யேற்­றுதல் முதல் பொரு­ளா­தா­ரத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டுகள் வரை நாம் செயற்­படும் விதத்­தினை மக்கள் மிகுந்த ஆர்­வத்­துடன் எதிர்­பார்த்­துள்­ளனர். தமது அன்­றாட தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வதில் மக்கள் சிர­மங்­களை சந்­திக்­கக்­கூ­டாது. வினைத்­தி­ற­னான மக்­கள்­நேய அரச சேவையை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது அனைத்து அரச சேவை­யா­ளர்­க­ளி­னதும் கட­மை­யாகும். அரச சேவை­யா­னது ஊழல், மோச­டி­யற்­ற­தாகக் காணப்­பட வேண்டும்.

நாட்டை அபி­வி­ருத்­தியின் பாதையில் கொண்டு சென்று, பொரு­ளா­தாரம் பல­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டில் அப்­போ­தைய அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­தது. மக்கள் அப்­போ­தைய அர­சாங்­கத்தை நிரா­க­ரித்­த­மைக்­கான கார­ணங்­களை புரிந்து செயற்­பட வேண்டும். இல்­லையேல் பெற்­றுக்­கொண்ட இந்த வெற்­றியை முன்­னோக்கி கொண்டு செல்ல முடி­யாது.

வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள தொழில்­மு­யற்­சி­களை ஊக்­கப்­ப­டுத்தி, முத­லீட்­டா­ளர்­களை பாது­காத்து, இழந்த தொழில்­வாய்ப்­புக்­களை மக்­க­ளுக்கு மீண்டும் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். அத­னூ­டா­கவே பொரு­ளா­தார வளர்ச்­சியை அடைய முடியும்.

வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் 2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் நாட்டின் மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கையை மீண்டும் ஏற்­ப­டுத்த வேண்டும். நாட்டை உரிய பாதையில் கொண்டு செல்லும் செயற்­பாட்டில் புத்தி ஜீவி­க­ளி­னதும் நிபு­ணர்­க­ளி­னதும் பங்­க­ளிப்பு பாரிய பக்­க­ப­ல­மாக அமையும்.

ஏற்­று­மதி விவ­சாய பயிர்­க­ளுடன் தொடர்­பான நன்­மை­களை தற்­போது விவ­சா­யிகள் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். அதே­போன்று வரிச்­ச­லுகை உள்­ளிட்ட உபாய மார்க்­கங்­களின் நன்­மை­களை ஒட்­டு­மொத்த மக்­க­ளுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரச நிர்வாகத்திற்கு பாரிய தடையாகக் காணப்படுகின்றது. இதனை நீக்குவதற்கான பலமான பாராளுமன்றத்தின் தேவைப்பாடு அத்தியாவசியமானதாகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான முதன்மை காரணி அதுவாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.