பின்வழியால் நிறைவேற்றதிகார முறையை ஒழிக்க இடமளியோம்

மு.கா. தலைவர் அமைச்சர் ஹக்கீம்

0 609

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தாக இருந்தால் அது­தொ­டர்பில் அனைத்து தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டியே மேற்­கொள்­ள­வேண்டும். மாறாக, பின்­வ­ழியால் அதனை மேற்­கொள்ள இட­ம­ளிக்­க­மாட்­டோ­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வது தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்­கி­டையில் இடம்­பெற்­றுள்ள பேச்­சு­வார்த்தை தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஆத­ர­வ­ளிக்­கு­மாறு கோரி­ய­தாக எமக்கு ஒன்றும் தெரி­யாது. அவ்­வாறு செயற்­பட்­டி­ருந்தால் அது முறை­யற்ற செய­லாகும். அவ்­வாறு பின்­வ­ழியால் சென்று அதனை மேற்­கொள்ள முடி­யாது. எங்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டியே மேற்­கொள்­ள­வேண்டும்.
அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் மேற்­கொள்­வ­தாக இருந்தால் அனைத்து தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டியே மேற்­கொள்­ள­வேண்டும். யாருக்கும் தனிப்­பட்ட ரீதியில் தீர்­மானம் மேற்­கொண்டு இதனை செய்ய முடி­யாது. அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு நாங்கள் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை தொடர்பில் எங்­க­ளுக்கும் ஒரு நிலைப்­பாடு இருக்­கின்­றது. அதனால் கலந்­து­ரை­யா­டியே மேற்­கொள்­ள­வேண்டும்.

அத்­துடன் பொருத்­த­மான ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை ஆளும் கட்சி தெரி­வு­செய்­வ­தற்கு காலம் தாழ்த்­து­வது அதன் பங்­காளி கட்சி என்­ற­வ­கையில் எமக்கும் பிரச்­சினை மக்­க­ளுக்கும் பிரச்­சி­னை­யாகும். அர­சாங்­கத்தை கொண்டு செல்லும் கட்­சிக்கு யாருக்கு மக்கள் செல்­வாக்கு இருக்­கின்­றது என்­பதை தெரி­வு­செய்­து­கொள்ள முடி­யாமல் இருப்­பது தொடர்பில் நாங்கள் எமது கவ­லையை தெரி­விக்­கின்றோம்.

அதனால் ஐக்கிய தேசியக் கட்சி இதுதொடர்பாக அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை விரைவாக தீர்த்துக்கொண்டு பொருத்தமான வேட்பாளரை அறிவிக்கவேண்டும். அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.