முஸ்லிம் தனியார் சட்ட வரைபு அங்கீகாரத்தை பெறுவதற்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு

0 566

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அங்­கீ­கா­ரத்­துடன் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சுகள் சட்ட வரைபு திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் சட்­ட­வ­ரைபு திணைக்­க­ளத்தின் அங்­கீ­காரம் கிடைக்கப் பெற்­றதும் பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் அடுத்த வருடம் முதல் சட்­டத்தை அமுல்­ப­டுத்த முடி­யு­மெ­னவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சம­ய­வி­வ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில் ‘திருத்த சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு 2/3 பெரும்­பான்­மையைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்ட திருத்­தங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளார்கள். அத்­தோடு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் இத்­தி­ருத்­தங்­களை வர­வேற்­றுள்­ளார்கள்.

அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்கள் பாரா­ளு­மன்­றத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு 2/3 பெரும்­பான்­மையால் நிறை­வேற்­றப்­பட்­டதும் 2020 ஆம் ஆண்டு முதல் இத்­தி­ருத்­தங்­களை அமுல்­ப­டுத்த முடியும். இத்­தி­ருத்­தங்­க­ளினால் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு எமது நாட்டின் நீதிக்­கட்­ட­மைப்­புக்கு சமமான தரத்தினைக் கொண்டதாக அமையும்.

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் இந்த திருத்தங்களை விமர்சிப்பதைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.