எனது தந்தையை கொன்றவரே இன்று ஜனாதிபதி வேட்பாளர்

லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமர் ரணிலுக்கு கடிதம்

0 995

என்­னு­டைய தந்­தையின் கொலைக்­காக கோத்­தா­பய
ராஜபக் ஷ ஒரு­போதும் மன்­னிப்­பு­ கோரமாட்டார். அதே­வேளை பாரிய கொலைக்­குற்­ற­வாளி என்று இன்று நீங்கள் குறிப்­பி­டு­கின்ற நபரைப் பாது­காப்­ப­தற்கும், அவ­ருடன் தொடர்­பினைப் பேணு­வ­தற்கும் கடந்த நான்­கரை வரு­ட­கா­லத்தை செல­விட்­ட­மைக்­காக நீங்கள் மன்­னிப்புக் கோரு­வீர்­களா? என்று கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் அஹிம்சா, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் வின­வி­யி­ருக்­கிறார்.

அத்­தோடு என்­னு­டைய தந்­தையின் கொலை­யுடன் தொடர்­பு­டை­யவர் தற்­போது உத்­தி­யோ­க­பூர்வ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், பொறுப்­புக்­கூ­ற­லு­ட­னான ஆட்சி, சட்­டத்தின் கீழ் அனை­வ­ருக்கும் சம­னான பாது­காப்பு மற்றும் நீதி என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தும் ஆற்­றலும் நேர்­மையும் உள்ள ஒரு­வரே அவ­ருக்கு எதி­ரான வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்க வேண்டும் என்று பிரார்த்­திப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் நிகழ்­வொன்றில் ஆற்­றிய உரை­யினை மேற்­கோள்­காட்டி பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அஹிம்சா விக்­ர­ம­துங்க எழு­தி­யுள்ள விரி­வாக கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அக்­க­டி­தத்தில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

நேற்­றைய தினம் (நேற்று முன்­தினம்) ஒரு அர­சியல் உரையின் போது கடந்த 2009 ஜன­வரி 8 ஆம் திகதி கொல்­லப்­பட்ட என்­னு­டைய தந்­தையும், உங்­க­ளு­டைய நெருங்­கிய நண்­ப­ரு­மான லசந்த விக்­ர­ம­துங்­கவைப் பற்றிக் குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள். தான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வானால் அச்­ச­மற்ற சூழ­லொன்றை உரு­வாக்­குவேன் என்று கோத்­த­ாபய ராஜ­பக் ஷ கூறி­யி­ருந்தார். அதற்குப் பிர­தி­ப­லிப்பைக் காட்டும் வகையில் அவர் எனது தந்­தையின் கொலைக்கும், மேலும் பல பயங்­க­ர­மான குற்­றச்­செ­யல்­க­ளுக்கும் மன்­னிப்புக் கோரு­வாரா என்று உங்­க­ளு­டைய உரையில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தீர்கள். ஒன்­றைக்­கூற விரும்­பு­கின்றேன். இல்லை. என்­னு­டைய தந்­தையின் கொலைக்­காக கோத்­த­ாபய ராஜ­பக் ஷ ஒரு­போதும் மன்­னிப்­புக்­கேட்க மாட்டார். இது­கு­றித்து அவர் பெரு­மை­ய­டை­கிறார் என்­பதை கடந்த 10 வரு­ட­கா­ல­மாக அவர் வழங்­கிய அனைத்துத் தொலைக்­காட்சி நேர்­கா­ணல்­களின் போது மறைத்­த­தில்லை. மன்­னிப்­புக்­கோரத் தேவை­யில்லை என்­பதே அவ­ரு­டைய எண்ணம். ஆனால் நீங்கள் மன்­னிப்புக் கோரி­னீர்­களா பிர­தமர் அவர்­களே? பாரிய கொலைக்­குற்­ற­வாளி என்று இன்று நீங்கள் குறிப்­பி­டு­கின்ற நபரைப் பாது­காப்­ப­தற்கும், அவ­ருடன் தொடர்­பினைப் பேணு­வ­தற்கும் கடந்த நான்­கரை வரு­ட­கா­லத்தை செல­விட்­ட­மைக்­காக நீங்கள் மன்­னிப்புக் கோரு­வீர்­களா?

என்­னு­டைய தந்தை மர­ணித்­தது முதல் வாக்­கு­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக நீங்கள் அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்­தி­னீர்கள். நீங்கள் பிர­த­ம­ரா­கு­வ­தற்குக் கார­ண­மான 2015 ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­களில் என்­னு­டைய தந்­தையின் கொலை உங்­க­ளுக்கு சாத­க­மான விட­ய­மாக அமைந்­தி­ருந்­தது. என்­னு­டைய தந்­தையின் கொலைக்கு நியா­யத்தைப் பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறியே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கி­ய­துடன், பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தை ஐக்­கிய தேசியக் கட்­சியின் வச­மாக்கிக் கொண்­டீர்கள்.

எனினும் அதி­கா­ரத்­திற்கு வந்­த­வு­ட­னேயே உங்­க­ளது முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட வேண்­டி­யவை தொடர்­பான அடிப்­ப­டைகள் மாற்­ற­ம­டைந்­தன. என்­னு­டைய தந்­தையின் கொலை தொடர்பில் நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு உங்­க­ளு­டைய ஆத­ரவு அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தற்­காக 2015 பெப்­ர­வ­ரியில் உங்­களை அல­ரி­மா­ளி­கையில் சந்­தித்தேன். அப்­போது இன்­னமும் பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்கள் இருப்­ப­தா­கவும், நீதி­யா­னது லசந்த விக்­ர­ம­துங்க தொடர்­பா­னது மாத்­தி­ர­மல்ல என்றும் நீங்கள் கூறி­னீர்கள். உங்­க­ளு­டைய அலு­வ­லகப் பிர­தா­னியின் நேரடிக் கட்­டுப்­பாட்டின் கீழ் பொலிஸ் திணைக்­களம் காணப்­பட்ட போது­கூட, அவர்கள் கோத்­த­ாப­யவை சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ர­வில்லை.

இது தேர்­தல்­காலம் என்­பதால் நீங்கள் கோத்­தா­பயவை கொலை­காரன் என்று பகி­ரங்­க­மாகத் தாக்கிப் பேசு­கி­றீர்கள். குறைந்­த­பட்சம் நீங்கள் இவ்­வாறு கூறி­னாலும், உங்­க­ளு­டைய அலு­வ­லகப் பிர­தானி சாகல ரத்­நா­ய­கவும் ஏனைய அமைச்­சர்­களும் அவரைச் சென்று சந்­திப்­ப­துடன், அவ­ரு­டைய இல்­லத்தில் பல மணித்­தி­யா­லங்­களைச் செல­வி­டு­கி­றார்கள். உங்­க­ளு­டைய அர­சாங்கம் அவ­ருக்கு சட்­ட­மு­ர­ணான அடை­யாள அட்டை, கட­வுச்­சீட்டை வழங்­கு­கின்­றது.
என்­னு­டைய தந்­தையின் வழக்கு விசா­ரணை தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விற்கு உதவி தேவைப்­படும் போதெல்லாம் உங்­களைக் காண­மு­டி­ய­வில்லை. விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது என்று இரா­ணு­வமும், புல­னாய்வுப் பிரிவும் கூறி­ய­போது நீங்கள் எங்­கி­ருந்­தீர்கள் பிர­தமர் அவர்­களே? அவ்­வ­ழக்கின் பிர­தான விசா­ரணை அதி­காரி நிஷாந்த சில்­வாவை அதி­லி­ருந்து ஜனா­தி­பதி நீக்­கிய போது அதற்கு எதி­ரான நிலைப்­பாட்டை நீங்கள் ஏன் எடுக்­க­வில்லை? நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­காக அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கைகள் எவற்­றை­யேனும் மேற்­கொண்­டி­ருக்­கி­றீர்­களா?
இல்லை. உங்­க­ளு­டைய குடும்­பத்­தி­னரும், உயர்­மட்ட அலு­வ­லர்­களும் கோத்­த­ாபய ராஜ­பக் ஷ­வுடன் நெருங்­கிய பிணைப்பைப் பேணும் அதே­வேளை, அவரைக் கொலை­காரன் என்று நீங்கள் பகி­ரங்­க­மாகக் குறிப்­பி­டு­கின்­றீர்கள். என்­னு­டைய தந்­தையின் கொலை­யுடன் தொடர்­பு­டை­யவர் தற்­போது உத்­தி­யோ­க­பூர்வ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், பொறுப்­புக்­கூ­ற­லு­ட­னான ஆட்சி, சட்­டத்தின் கீழ் அனை­வ­ருக்கும் சம­னான பாது­காப்பு மற்றும் நீதி என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தும் ஆற்­றலும் நேர்­மையும் உள்ள ஒரு அர­சி­யல்­வாதி அவ­ருக்கு எதி­ரான வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்க வேண்டும் என்று பிரார்த்­திக்­கின்றேன். கோத்தாபயவை எதிர்க்கும் வேட்பாளர் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்­வ­தற்­காக
ராஜ­ப­க் ஷ­வுடன் திரை­ம­றைவில் ஒப்­பந்­த­மி­டு­கின்ற ஒரு­வ­ராக இருக்­கக்­கூ­டாது என்று பிரார்த்­திக்­கிறேன்.

ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருக்கும் போது நீதியைப் பெற்­றுத்­த­ரத்­தக்க ஒரு­வ­ரையே கோத்­த­ாபய ராஜ­பக் ஷ­விற்குச் சவா­லாகக் கள­மி­றங்கி, அவரைத் தோற்­கடிக்க வேண்டும். மாறாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பெயர்­களைத் தேர்­தலில் வெற்­றி­ய­டை­வ­தற்­காக மாத்­திரம் பயன்படுத்துபவர்களால் அல்ல. இறுதியாக இந்நாடு உங்களின் கருணையின் கீழோ அல்லது உங்களது புதிய நண்பன் கோத்­த­ாபய ராஜ­பக் ஷவின் கருணையின் கீழோ இருக்குமென்றால் உங்களுடைய பழைய நண்பனும், என்னுடைய தந்தையுமான லசந்த விக்ரமதுங்கவிற்கு நீதி கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.