விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 03

மத்ரஸா கல்வி தீவிரவாதத்தை வளர்க்கிறதா?

0 727

ஏப்ரல் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலைத் தொடர்ந்து இரா­ணுவம் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்ட தேடு­தல்­வேட்­டையில் மத்­ர­ஸாக்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டன. சிரேஷ்ட மத்­ர­ஸாக்­களில் ஒன்­றென கலா­சாரத் திணைக்­க­ளத்தால் அடை­யா­ளப்­ப­டுத்தப் பட்­டுள்ள ஜாமிஆ நளீமியா உள்­ளிட்ட பல்­வேறு அரபுக் கல்­லூ­ரிகள் இரா­ணுவச் சோத­னைக்கு உள்­ளா­கின. திஹா­ரி­யி­லுள்ள பாதிஹ், ஈமா­னிய்யா, மஹ­ர­கமை கபூ­ரிய்யா, குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள பெரும்­பான்­மை­யான மத்­ர­ஸாக்கள் பல­முறை கடும் சோத­னைக்கு உட்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

இரா­ணுவ சோத­னைக்­கப்பால் தனிப்­பட்ட சில பௌத்த தீவி­ர­வாதக் குழுக்கள் மற்றும் மத­கு­ருக்கள் என்­போரும் மத்­ர­ஸாக்­களில் அத்­து­மீறி நுழைந்து அடா­வடி புரிந்த காட்­சி­களும் ஆங்­காங்கே இடம்­பெற்­றுள்­ளன. மத்­ர­ஸாக்­கல்வி குறித்து ஏலவே பொய்க்­குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வந்த தேரர்­க­ளுக்கும் சம்­பிக்க, கம்­மன்­பில போன்ற இன­வா­தி­க­ளுக்கும் 4/21 ஓர் அரிய சந்­தர்ப்­ப­மாகத் தோன்­றி­யது. அவர்கள் அதனை நன்கு பயன்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளனர். பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலைத் தொடர்ந்து வந்த எதிர்­வி­னை­களில் மத்­ர­ஸாக்­கல்வி குறித்த விமர்­ச­னங்­களும் ஒன்­றாகும்.

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமா­தான சக­வாழ்வு குறித்து பேசி­வரும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா கூட ஒரு முறை மத்­ர­ஸாக்கள் தடை­செய்­யப்­பட வேண்டும் என ஆத்­தி­ரத்­துடன் தெரி­வித்­தமை ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­ய­தல்ல. ஏனெனில் பயங்­க­ர­வாதி ஸஹ்ரான் ஒரு தௌஹீத் மௌலவி என்றே சிங்­க­ளவர் மத்­தியில் அறி­யப்­பட்டார்.

மத்­ர­ஸாக்­கல்வி முறை குறித்து கார­சா­ர­மான விமர்­ச­னங்­களை முன்­னி­றுத்­தி­ய­துடன் அவற்றை மூடி­வி­ட­வேண்டும் என்று அபிப்­பி­ராயம் கொண்­டோரில் தயா­சிறி, ஜீ.எல்.பீரிஸ், ஹர்ஷ டி.சில்வா, பந்­துல குண­வர்­தன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய போன்றோர் முக்­கி­ய­மா­ன­வர்கள். முன்னாள் டியூஷன் மாஸ்டர் பந்­துல ஒரு படி மேலே சென்று மத்­ர­ஸாக்கள் தடை­செய்­யப்­பட்டு அவற்றின் சொத்­துகள் அனைத்தும் அர­சு­டை­மை­யாக்­கப்­ப­ட­வேண்டும் என்று அறி­வு­றுத்­து­கிறார். தமது அர­சாங்கம் வந்தால் இதையே தாம் செய்­வ­தா­கவும் அச்­சு­றுத்­து­கிறார். இவர்கள் அனை­வரும் முன்­வைக்கும் போலிக்­குற்­றச்­சாட்­டு­க­ளையும் கற்­பி­தங்­க­ளையும் பின்­வ­ரு­மாறு தொகுத்துக் கூறலாம்.
1.மத்­ரஸாக் கல்வி தீவி­ர­வா­தத்­தையும் வன்­முறை உணர்­வையும் முஸ்லிம் இளை­ஞர்­க­ளி­டையே வளர்க்­கின்­றது. “சில மத்­ர­ஸாக்கள் அரபு மொழி­யையும் இஸ்­லாத்­தையும் கற்­பிக்­கின்றோம் என்ற தோர­ணையில் இளை­ஞர்­களின் மூளை­களைச் சலவை செய்­கின்­றன; தீவி­ர­வா­தத்தை வளர்க்­கின்­றன (தயா­சிறி ஜய­சே­கர 09.05.2019 பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பில்)

2.மத்­ர­ஸாக்­களில் தீவி­ர­வா­தத்தை ஊட்டி வளர்ப்­ப­தற்கு அரபு நாடுகள் சில நிதி­யா­த­ரவு வழங்­கி­வ­ரு­கின்­றன. குறிப்­பாக சவூதி அரே­பியா வஹா­பிஸத் தீவி­ர­வா­தத்தை இலங்­கையில் வளர்ப்­ப­தற்கு மத்­ர­ஸாக்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றன.

3.நாட்டில் 2000 க்கும் அதி­க­மான மத்­ர­ஸாக்கள் இயங்கி வரு­கின்­றன. இது மிகப்­பெரும் தொகை­யாகும். பெரும்­பா­லா­னவை பதிவு செய்­யப்­ப­டா­தவை (G.L.பீரிஸ் Daily Mirror செய்தி 12.06.2019)

4.மத்­ர­ஸாக்­கல்வி பய­னற்­றது. “குற்­றங்­க­ளுக்கு கொடூர தண்­டனை வழங்க வேண்டும் என மத்­ர­ஸாக்­களில் போதிக்­கப்­ப­டு­கின்­றது. ஒருவர் என்ன குற்றம் செய்தால் என்ன தண்­டனை கிடைக்கும் என எமது பொதுச்­சட்­டத்தில் தெளி­வாக வரை­ய­றுக்கப் பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இஸ்­லா­மிய குற்­ற­வியல் சட்­டங்­களை இங்கு கற்­பிப்­பதால் என்ன பயன் விளை­யப்­போ­கின்­றது. (பந்­துல குண­வர்­தன ஊடக சந்­திப்பு எதிர்க்­கட்சி அலு­வ­லகம் – 23.06.2019)

5.மத்­ர­ஸாக்­களின் கலைத்­திட்­டத்தில் இலங்­கையின் வர­லாறு, சிங்­க­ள­மொழி மற்றும் தொழிற்­கல்வி இடம்­பெ­ற­வில்லை. இஸ்­லா­மிய நாடு­களின் வர­லாறு மாத்­தி­ரமே போதிக்­கப்­ப­டு­கின்­றது. இதனால் மௌல­வி­மார்­க­ளுக்கும் இலங்­கையின் வர­லாற்று அறிவு இல்லை. (தயா­சிறி ஊடக சந்­திப்பில்– 09.05.2019)
6.சுற்­றுலா விசா மூலம் அரபு நாடு­க­ளி­லி­ருந்து மத­போ­த­கர்கள் இலங்கை வரு­கின்­றனர். அடிப்­படை வாதத்தைப் போதிப்­பதில் அவர்­களே மும்­மு­ர­மாக ஈடு­ப­டு­கின்­றனர். அவர்­களை நாட்டை விட்டு வெளி­யேற்ற வேண்டும். இவர்­க­ளுக்கு விசா வழங்கும் திட்­டத்தை அரசு கைவிட வேண்டும். (சம்­பிக்க 29.05.2019 அடிப்­ப­டை­வா­தத்தை எதிர்­கொள்­வ­தற்­கான ஐந்து அம்­சத்­திட்டம்)

மேலே குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களில் ஐந்­தா­வது குற்­றச்­சாட்டு பகு­தி­ய­ளவில் உண்­மை­யா­னது. ஆனால் ஏனைய ஐந்தும் அடிப்­ப­டை­யற்ற மிகப் போலி­யான, பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளாகும். அர­சாங்கம் மத்­ரஸாக் கலைத்­திட்­டத்­தையும் போதனை முறை­க­ளையும் பரி­சீலித்­துப்­பார்த்தால் இவை­யெல்லாம் அப்­ப­ழுக்­கற்ற அண்­டப்­பு­ழுகு என்­பது புல­னாகும்.

மத்­ர­ஸாக்­கல்வி முறைக்கு நூற்­றாண்டு வர­லாறு உள்­ளது. இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் முதல் மத்­ரஸா 1870 களின் தொடக்­கத்தில் காலி­யி­லுள்ள சோலை எனும் முஸ்லிம் கிரா­மத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. மக்­கியா எனப்­படும் அவ் அரபுக் கல்­லூ­ரியே 19 ஆம் நூற்­றாண்டில் தோன்­றிய முதல் மத்­ர­ஸா­வாகும். அதனைத் தொடர்ந்து பல மத்­ர­ஸாக்கள் 20 ஆம் நூற்­றாண்டில் தோற்­றம்­பெற்­றன.

அவற்றில் இஸ்­லா­மிய பாட­போ­த­னை­களே இடம்­பெ­று­கின்­றன. தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹு, ஸீரா, தாரிக், உஸூலுல் பிக்ஹு, உஹூலுல் ஹதீஸ், தஜ்வித், மன்திக், அரபு மொழி, ஆங்­கிலம் போன்ற பாடங்­களே கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. வேறு சில மத்­ர­ஸாக்­களில் இவற்­றுக்கு மேலாக தொழிற்­த­கை­மை­யு­டைய பாடங்­களும் போதிக்­கப்­ப­டு­கின்­றன. அரபு மொழி இலக்­க­ணத்­துடன் ஆங்­கிலம், சிங்­களம், தமிழ், உருது போன்ற பல்­வேறு மொழிகள் கற்­பிக்­கப்­படும் மத்­ர­ஸாக்­களும் இங்கு உள்­ளன.

மத்­ரஸாக் கல்வி முறைக்கும் முஸ்லிம் சமூ­கத்தில் தீவி­ர­வாத சிந்­தனை வளர்­வ­தற்கும் இடையில் எத்­த­கைய தொடர்பும் இல்லை. மத்­ர­ஸாக்­கல்வி தீவி­ர­வா­தத்தை ஊட்டி வளர்ப்­ப­தாக ஒரு வாதத்தை நாம் ஏற்­போ­மெனில் 100 ஆண்­டுக்கு முன்­னரே இந்­நாட்டில் பயங்­க­ர­வா­தத்­தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் அல்­லது தீவி­ர­வாத சிந்­தனை கொண்டோர் இங்கு உரு­வா­கி­யி­ருக்க வேண்டும். ஆக மத்­ர­ஸாக்­கல்­வியைப் பூர­ணப்­ப­டுத்­தாத ஓர் அரை­குறை மேற்­கொண்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை முன்­னி­றுத்தி அனைத்து மத்­ர­ஸாக்­களும் தீவ­ிர­வா­தத்தை வளர்ப்­ப­தாக குற்றம் சுமத்­து­வது சுத்த அபத்தம். எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத போலிக்­குற்றம்.

பந்­துல சொல்­வது போல மத்­ர­ஸாக்­கல்­வித்­திட்­டத்தில் இஸ்­லா­மியத் தண்­ட­னைகள் மட்­டுமே போதிக்­கப்­ப­ட­வில்லை. அதே­வேளை மத்­ர­ஸாக்­கல்­வியை பய­னற்ற கல்வி என்று தீர்ப்பு வழங்கும் உரிமை பந்­துல போன்ற டியூஷன் மாஸ்­ட­ருக்கு எங்­கி­ருந்து வரு­கின்­றது. தயா­சிறி குற்றம் சுமத்­து­வது போல் அரபு மொழி மற்றும் இஸ்லாம் போதிக்கும் தோர­ணையில் இங்கு யாரும் மாண­வர்­க­ளுக்கு தீவி­ர­வா­தத்­தையோ அடிப்­படை வாதத்­தையோ போதிக்­க­வில்லை.
ஒரு முஸ்­லிமின் நம்­பிக்கைக் கோட்­பாடு எவ்­வாறு அமைய வேண்டும். உலக வாழ்க்கை பற்­றிய அவ­னது கண்­ணோட்டம் என்ன? நற்­பண்­பு­களின் இன்­றி­ய­மை­யாமை, குர்ஆன் சுன்­னாவின் நற்­போ­த­னைகள், முஸ்­லிமின் முழு வாழ்­வையும் ஆளும் சட்டம். இவற்றைப் போதிப்­பதன் மூலம் ஒரு பண்­பட்ட ஒழுக்­க­முள்ள சமய அறி­ஞரை உரு­வாக்­கு­வதே மத்­ர­ஸாக்­கல்வி முறையின் அடிப்­படை நோக்­க­மாகும்.

இலங்­கையில் உள்ள அரபு மத்­ர­ஸாக்கள் சிந்­தனை முகாம் சார்ந்து தௌஹீத், தப்லீக், தரீகா, ஜமா­அத்தே இஸ்லாமி என பல்­வேறு வித்­தி­யா­ச­மான பாடத்­திட்­டங்­க­ளுடன் இயங்­கு­வது உண்­மையே. ஆனால் அவற்றில் தீவி­ர­வாதக் கருத்­துகள் கற்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை. தனக்கும் தனது தாய்­நாட்­டிற்கும் பய­னுள்ள நற்­பி­ர­ஜை­களை உரு­வாக்­கு­வதே எல்லா மத்­ர­ஸாக்­க­ளி­னதும் தொலை நோக்­காக உள்­ளதை நாம் மனங்­கொள்ள வேண்டும்.

மத்­ர­ஸாக்­கல்வி பய­னற்­றவை என்ற பந்­துல குண­வர்­த­னவின் கருத்து நிரா­க­ரிக்­கத்­தக்­கது. ஏனெனில் எந்­த­வொரு சமூ­கத்­தையும் சமய, கலா­சார ரீதியில் வழி­ந­டாத்­து­வ­தற்கு தகுதி வாய்ந்த சமய அறி­ஞர்­களும் சிந்­த­னை­யா­ளர்­களும் தவிர்க்க முடி­யா­த­வர்கள். அவர்­களே ஒரு சமூ­கத்தின் சமய ரீதி­யான அறிவைப் பகிர்ந்து பர­வ­லாக்கி மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான போத­னை­களைக் கொண்டு சேர்க்­கின்­றனர். அந்த வகையில் மத்­ர­ஸாக்கள் மார்க்கக் கல்­வியை வழங்கி முஸ்லிம் சமூ­கத்­திற்குத் தேவை­யான ஆலிம்­களை உரு­வாக்கும் நோக்கில் இயங்­கு­கின்­றன.

இலங்­கை­யி­லுள்ள பௌத்த சமூ­கத்­திற்கு பௌத்த மத கலா­சார அறி­வையும் போத­னை­க­ளையும் வழங்கும் நோக்கில் பிக்­கு­களை உரு­வாக்­கு­வ­தற்கு “பிரி­வென” கல்­லூ­ரிகள் செயற்­ப­டு­வ­து­போ­லவே மத்­ர­ஸாக்கள் ஓர் இஸ்­லா­மியக் கலைத்­திட்­டத்­துடன் இயங்­கு­கின்­றன. அவை முஸ்லிம் சமூ­கத்தின் அடிப்­படைத் தேவை­யொன்றை நிறை­வேற்றி வரு­கின்­றன. ஆகவே, மத்­ர­ஸாக்கள் என்­பது முஸ்லிம் சமூ­கத்­தே­வையின் குறிப்­பாக மார்க்கத் தேவையின் ஒரு பகு­தி­யாகும். அவற்றை மூடு­வதால் முஸ்­லிம்கள் சமய, கலா­சார தனித்துவங்களைப் பாது­காத்­துக்­கொள்­வது மிகப்­பெ­ரிய சவா­லாக மாறி­விடும். அதே­வேளை அரபு மத்­ர­ஸாக்­களை மூடு­வதால் அல்­லது அதனை அரசு கைய­கப்­ப­டுத்­து­வதால் நாட்­டுக்கு எந்த நன்­மையும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. அனைத்து செள­பாக்­கி­யங்­களும் கிடைத்­து­விடப் போவ­தில்லை.

மத்­ர­ஸாக்­க­ளுக்கு அரபு நாடு­க­ளி­லி­ருந்து வகை தொகை­யற்ற நிதி பாய்ச்­சப்­ப­டு­கி­றது. குறிப்­பாக சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து பெரும்­தொகைப் பணம் கிடைப்­ப­தாகச் சொல்­லப்­படும் குற்­றச்­சாட்டு பகு­தி­ய­ளவில் மிகப்­பெ­ரிய பொய்­யாகும். இலங்­கையில் மொத்­த­மாக பதிவு செய்­யப்­பட்ட மத்­ர­ஸாக்கள் 317 உள்­ளன. அவற்றில் பெரும்­பான்­மை­யா­னவை தப்லீக் மற்றும் தரீக்கா சிந்­த­னையைச் சார்ந்­தவை. சவூதி அரே­பி­யாவின் நிதி­யா­த­ரவில் இயங்கும் மத்­ர­ஸாக்கள் ஒப்­பீட்டு ரீதியில் குறை­வாகும். தௌஹீத் (ஸலபி) சிந்­தனை முகாம் சார்ந்த மத்­ர­ஸாக்கள் ஒப்­பீட்டு ரீதியில் எண்­ணிக்­கையில் குறை­வாகும்.
இலங்­கை­யி­லுள்ள பெரும்­பான்­மை­யான மத்­ர­ஸாக்கள் கடு­மை­யான நிதி நெருக்­க­டி­யு­ட­னேயே நகர்­கின்­றன. நோன்பு காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள தன­வந்­தர்­களை நாடு­வதும் தனி­ந­பர்­க­ளிடம் வசூல் செய்­வ­து­மா­கவே தமது நிதித் தேவையை நிறைவு செய்­கின்­றன.

மத்­ர­ஸாக்­களில் பெரும்­பான்­மைக்கு நிலை­யான நிதி­யா­த­ரவோ வலு­வா­னதும் நிலை­யா­ன­து­மான வரு­மான மூலங்­களோ இல்லை. அவை மிகுந்த நிதி நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்­ளமை கண்­கூடு. இத்­த­கைய ஒரு சூழ­மைவில் அனைத்து அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கும் அரபு நாடுகள் நிதி தாரா­ள­மாக வந்து குவி­கின்­றது என்று கூறு­வது அப்­பட்­ட­மா­னதொரு போலிப்­பி­ர­சா­ர­மாகும்.
பேரா­சி­ரியர் G.L.பீரிஸ் மத்­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை 2000 க்கும் அதிகம் எனத் தெரி­வித்த கருத்து ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யான Daily Mirror இல் வெளி­யா­னது. அது சிங்­க­ள­வர்­களை அச்­ச­மூட்டும் ஒரு பிழை­யான செய்­தி­யாகும். இலங்­கையில் பதிவு செய்­யப்­பட்ட மத்­ர­ஸாக்கள் 317 மாத்­தி­ரமே உள்­ளன. மேலும் சில பதிவு செய்­யப்­ப­டாத மத்­ர­ஸாக்­களும் உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் அவற்றின் சரி­யான தர­வுகள் முஸ்லிம் கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கும் தெரி­யாது. இது தவிர அஹ­திய்­யாப்­பா­ட­சா­லை­களும் ஹிப்ழு மத்­ர­ஸாக்கள் அல்­குர்­ஆனை ஓதப்­ப­ழக்கும் குர்ஆன் மத்­ர­ஸாக்கள் என்­ப­னவும் இயங்­கு­கின்­றன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்தே பேரா­சி­ரியர் இவ்­வாறு குறிப்­பி­டு­கி­றாரா என்றும் தெரி­ய­வில்லை. ஆனால் ஸஹ்ரான் போன்ற பயங்­க­ர­வா­தி­களை உரு­வாக்கும் அரபு மத்­ர­ஸாக்கள் என்றே அவர் தெரி­வித்­துள்ளார். அதுதான் பிழை என்­கிறோம்.

சுற்­றுலா விசாவில் அரபு நாடு­க­ளி­லி­ருந்து மத­போ­த­கர்­க­ளாக இலங்கை வரும் அர­பி­களே மத்­ர­ஸாக்­களில் தீவி­ர­வா­தத்தைப் பரப்­பு­கின்­றனர் எனும் குற்­றச்­சாட்டும் அடிப்­ப­டை­யற்­றது. ஆதா­ர­மற்­றது. மத்­ர­ஸாவின் நோக்கம், அவற்றின் பயன்­பாடு குறித்து ஏற்­க­னவே நாம் இப்­பத்­தியில் விளக்­கி­யுள்ளோம்.

அதன்­படி தீவி­ர­வா­தத்தை உள்ளூர் போத­கர்­களோ, வெளி­நாட்டுப் போத­கர்­களோ யாரும் ஊட்­ட­வில்லை. தீவி­ர­வாதம், வன்­முறை, பயங்­க­ர­வாதம் என்­பன இஸ்­லாத்தின் போத­னை­க­ளுக்கு முற்­றிலும் மாறா­னவை, முர­ணா­னவை. இலங்கை மத்­ர­ஸாக்­களில் மிகச் சொற்­ப­மா­ன­வற்றில் கற்­பிக்க வரும் அர­பிகள் பெரும்­பாலும் எகிப்தைச் சேர்ந்­த­வர்கள். 1970 களில் இலங்கை அமைச்­சுக்கும் எகிப்தின் கல்வி அமைச்­சுக்கும் இடையில் நடை­பெற்ற ஓர் ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே அவர்கள் இலங்கை அரபு மத்­ர­ஸாக்­க­ளில்­அ­ரபு மொழிப்­போ­த­கர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­றனர். அரபு மொழியை மாத்­தி­ரமே இவர்கள் போதிக்கும் நிலையில் எப்­படி பயங்­க­ர­வா­தத்தைப் போதிப்­ப­தாக அவ­தூறு பரப்­ப­மு­டியும்.

இலங்கை வர­லாறு, சிங்­க­ள­மொழி என்­பன கற்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை என்ற கருத்தில் பகு­தி­ய­ளவு உண்மை இருப்­பினும் தற்­போது நாட்­டி­லுள்ள கணி­ச­மான மத்­ர­ஸாக்­களில் மொழிப்­பா­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அந்த வகையில் அரபு மொழி­யுடன் ஆங்­கிலம், சிங்­களம் போன்ற மொழி­களும் கற்­பிக்­கப்­படும் முற்­போக்­கான பல அரபு மத்­ர­ஸாக்கள் நாட்டில் இல்லாமல் இல்லை. இவை குறித்து எந்த அறிவு ஞானமும் இல்லாமல் கண்மூடித்தனமான கருத்துகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதை முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மத்ரஸாக் கல்வியின் உண்மையான பக்கத்தை பெரும்பான்மையினருக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தீவிரவாதத்திற்கு மத்ரஸாக்கல்வி துணை செய்கிறது என்ற ஒரு பிழையான ஊகத்தின் அடிப்படையில் அரசாங்கம் மத்ரஸா கல்வி முறையில் தலையீடு செய்வதற்குப் பெரிதும் எத்தனிக்கிறது. மத்ரஸாக் கல்வியை ஒழுங்குபடுத்தும் சட்ட மூலமொன்றை பாராளுமன்றில் நிறைவேற்றிக்கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருத்தச் சட்டமூலம் குறித்து இன்னொரு பத்தியில் எழுதலாம் என்பது கட்டுரையாளரின் உத்தேசம்.

மத்ரஸா கல்வியை மறுசீரமைக்க வேண்டும் என்ற யோசனைகளும் கோரிக்கைகளும் மிக நீண்டகாலமாக முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்தே முன்வைக்கப்பட்டு வந்துள்ளதையும் நாம் இலகுவில் புறமொதுக்க முடியாது. இது தொடர்பான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை எதுவும் கைகூடவில்லை. பெரும்பாலும் அவை இடையில் கைவிடப்பட்டு விட்டன. இத்தகைய ஒரு சூழமைவிலேயே ஏப்ரல் 4/21 பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றது. தொடர்ந்து அரபு மத்ரஸாக்கள் இராணுவ சோதனைக்கு உட்பட்டன. தற்போது மத்ரஸாக் கல்வியை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் குறித்து விவாதிக்கப்படுகின்றது. இது குறித்த ஒரு விமர்சன ரீதியான பகுப்பாய்வையும், உண்மையில் மத்ரஸாக்கள் வேண்டி நிற்கும் மாற்றங்கள் குறித்தும் இன்னொரு பத்தியில் நோக்குவோம்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.