தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­மளிக்க ஜனா­தி­ப­திக்கு அழைப்பு

0 579

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் கால எல்­லையை மேலும் ஒரு­மாத காலம் நீ­டிக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் அது குறித்த பாரா­ளு­மன்ற அனு­ம­தியை அடுத்­த­வாரம் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ளனர். மேலும் எதிர்­வரும் 20ஆம் திக­தியில் இருந்து 23 ஆம் திக­திக்குள் ஒரு தினத்தில் தெரி­வுக்­கு­ழு­விற்கு வர ஜனா­தி­ப­திக்கு தெரி­வுக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது. 

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய்ந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் கால எல்­லை­யா­னது இந்த மாதம் 23 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வரு­கின்­றது. இந்­நி­லையில் சாட்­சி­யங்­களில் இறு­திக்­கட்ட விசா­ர­ணை­யாக ஜனா­தி­ப­தி­யிடம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ள­துடன் அறிக்­கையை முழு­மைப்­ப­டுத்த வேண்­டி­யுள்ள நிலையில் விசேட தெரி­வுக்­கு­ழுவின் கால எல்­லையை மேலும் ஒரு­மாத காலம் நீடிக்க, அதா­வது அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரையில் நீடிக்க தெரி­வுக்­குழு தீர்­மானம் எடுத்­துள்ள நிலையில் அதற்­கான பாரா­ளு­மன்ற அனு­ம­தியை கேட்­க­வுள்­ளனர்.

எதிர்வும் 20ஆம் திகதி அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வுகள் கூட­வுள்ள நிலையில் அந்­த­வார அமர்வு நாட்­களில் தெரி­வுக்­குழு கால எல்­லையை நீடிக்கும் அனு­ம­தியை கேட்­க­வுள்­ள­தா­கவும், அதேபோல் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினை சாட்­சியம் வழங்க அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.
எதிர்­வரும் 20 ஆம் திக­தியில் இருந்து 23 ஆம் திகதி வரையில் நான்கு நாட்­க­ளுக்குள் ஏதேனும் ஒரு நாளில் சாட்சியமளிக்க வருமாறும் குறித்த தினம் என்னவென தெரிவுக்குழுவிற்கு அறிவிக்குமாறும் கூறியுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.