வஹாப்­வாத கோஷத்தை கிளப்பி ஒற்­று­மையை குலைக்கத் திட்டம்

பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் கடும் சாடல்

0 567

பிரி­வி­னை­வாத கோஷ­மெ­ழுப்பி அன்று சிங்­கள, தமிழ் மக்­களை பிரிக்க முற்­பட்­ட­வர்­களின் முயற்சி தோல்­வி­யுற்­றதால் தற்­போது வஹாப்­வாத கோஷத்தை எழுப்பி சிங்­கள, முஸ்லிம் ஒற்­று­மையை பிரிக்கும் திட்­டத்தை மேற்­கொண்­டுள்­ளனர். அத்­துடன் வைத்­தியர் ஷாபியின் கைதும் அர­சியல் சதித்­திட்­ட­மாகும் என ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு­மாத காலத்­துக்கு நீடிப்­ப­தற்­கான பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

அடிப்­ப­டை­வாதம் சகல தரப்­பிலும் இருக்­கின்­றது. முஸ்­லிம்­களில் இருந்த சிறிய குழுவே ஏப்ரல் தாக்­கு­தலை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. என்­றாலும் அந்த தாக்­கு­தலை நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். மனி­தா­பி­மானம் இல்­லா­த­வர்­களே இந்த தாக்­கு­தலை மேற்­கொண்­டி­ருக்­கின்­றனர். என்­றாலும் பயங்­க­ர­வாத தாக்­கு­தலை பயன்­டுத்­திக்­கொண்டு எதிர்க்­கட்­சியில் இருப்­ப­வர்கள் அர­சியல் லாபம் தேட முயற்­சித்து வரு­கின்­றனர்.

குறிப்­பாக வைத்­தியர் ஷாபி கைது செய்­யப்­ப­டு­வது வரு­மா­னத்­துக்கு அதிக சொத்து சேக­ரித்தார் என்ற குற்­றத்­துக்­காகும். ஆனால் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது சிங்­கள பத்­தி­ரி­கை­யொன்றில் வைத்­தியர் ஷாபி சிங்­கள தாய்­மார்கள் 4ஆயிரம் பேருக்கு கருச்­சி­தைவு செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த செய்­தியின் அடிப்­ப­டை­யி­லாகும். ஆனால் வைத்­தியர் ஷாபி கைது­செய்­யப்­பட்ட பின்­னரே அவ­ருக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் பொலி­ஸா­ரினால் சேக­ரிக்­கப்­பட்­டன.

அத்­துடன் கடந்த மே மாதம் 24ஆம் திகதி வைத்­தியர் ஷாபி பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­ப­டு­கின்றார். ஆனால் அவ­ருக்கு எதி­ரான முறைப்­பா­டு­களை பொலிஸார் மே மாதம் 25, 26ஆம் திக­தி­களில் 3வைத்­தி­யர்­க­ளிடம் அவர்­களின் வீட்­டுக்கு சென்று வாக்­கு­மூலம் பெறு­கின்­றனர். ஆனால் அந்த முறைப்­பா­டுகள் அனைத்தும் 24ஆம் திகதி பொலி­ஸுக்கு வந்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டு புத்­த­கத்தில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. இது எவ்­வாறு இடம்­பெற்­றது என்­பதை தேடிப்­பார்க்­க­வேண்டும். குரு­நாகல் பிரதி பொலிஸ்மா அதி­பரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே இவை இடம்­பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­துடன் எந்த முறைப்­பாடும் இல்­லா­மலே வைத்­தியர் ஷாபி கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். அவர் கைது­செய்­யப்­பட ஒரு நாளைக்கு முன்னர் அவ­ரது வைத்­திய சிகிச்சை நிலையம் குரு­நாகல் பிரதி பொலிஸ்மா அதி­பரின் கட்­ட­ளையின் பிர­காரம் சோதிக்­கப்­ப­டு­கின்­றது. சிகிச்சை நிலை­யத்தில் சட்­ட­வி­ரோத கர்ப்­பத்­தடை செய்­வ­தாக உள­வுத்­த­கவல் கிடைத்­ததன் பிர­காரம் இதனை மேற்­கொள்­வ­தா­கவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­ப­டி­யாயின் முன்­கூட்­டியே இவ்­வா­றா­ன­தொரு சதித்­திட்டம் மேற்­கொள்ளத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அத்­துடன் பாதிக்­கப்­பட்ட தாய்­மா­ருக்கு நஷ்­ட­ஈடு வழங்க வேண்­டு­மென எதிர்க்­கட்சித் தலைவர் தெரி­வித்­தி­ருந்தார். அதன் பின்­னரே அதி­க­மான தாய்­மார்கள் முறைப்­பா­டு­செய்ய வந்­தனர். ஆனால் குறிப்­பிட்ட தாய்­மாரை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­மாறு நீதி­மன்றம் தெரி­விக்­கும்­போது அதற்கு குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் தடை ஏற்­ப­டுத்­து­கின்றார்.

மேலும் மக்கள் வங்கி ஊடாக வைத்­தியர் ஷாபியின் வங்கி கணக்­கு­களை எதிர்க்­கட்சி உறுப்­பினர் சிசிர ஜய­கொடி பகி­ரங்­க­மாக வெளி­யி­டு­கின்றார். நீதி­மன்ற உத்­த­ர­வில்­லாமல் தனி­நபர் ஒரு­வரின் வங்கி கணக்­கு­களை வெளி­யி­ட­மு­டி­யாது. அப்­ப­டி­யாயின் ஷாபி வைத்­தி­யரின் வங்கி கணக்கு எப்­படி வெளியில் சென்­றது தொடர்பில் மக்கள் வங்கி தலைவர் விசா­ரணை நடத்­த­வேண்டும்.

மேலும் சஹ்ரான் குர்­ஆனை பின்பற்றியே குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக விமல் வீரவன்ச தெரிவிக்கிறார். ஆனால் 89 காலப்பகுதியில் விமல் வீரவன்ச இதுபோன்ற பயங்கரவாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டது தம்ம போத­னையை பின்­பற்­றியா என்று கேட்­கின்றேன்.
உலகில் 24 வீத­மா­ன­வர்கள் குர்­ஆனை வாசிக்­கின்­றனர். 1.8 பில்­லியன் மக்கள் குர்­ஆனை நம்­பு­கின்­ற­வர்கள். அவர்கள் அனை­வரும் சஹ்ரானும் அல்ல. பின்லேடனும் அல்ல என்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.