முகத்­திரை அணிய நிரந்­தர தடை விதிக்க அமைச்­ச­ரவை அனு­மதி

மேலும் ஆராய ஒரு வார கால அவகாசத்தை கேட்டுப்பெற்றார் அமைச்சர் ஹக்கீம்

0 930

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், புர்கா ஆடை­களை நிரந்­த­ர­மாக தடை செய்­வ­தற்­கான யோச­னையை நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சமர்ப்­பித்­துள்ளார்.

சட­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் வரை­யப்­பட்­டுள்ள நிகாப் நிரந்­தரச் சட்ட வரை­புடன் கூடிய அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­தையே நீதி­ய­மைச்சர் இதன்­போது சமர்ப்­பித்தார். இதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கிய போதிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தின் உள்­ள­டக்கம் குறித்து மேலும் ஆரா­யப்­பட வேண்டும் என்றும் அதற்கு கால அவ­காசம் தரு­மாறும் கோரிக்கை விடுத்தார்.
எனினும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கு­பற்­றிய ஏனைய அமைச்­சர்கள், இதற்கு கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றும் தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக கொண்டு வர வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினர். இறு­தியில் குறித்த சட்­ட­மூ­லத்­துடன் தொடர்­பு­டைய ஆவ­ணத்தை ஆராய்­வ­தற்கு அமைச்சர் ஹக்­கீ­முக்கு ஒரு வார கால அவ­கா­சத்தை வழங்க அமைச்­ச­ரவை இணக்கம் தெரி­வித்­தது. கடந்த ஜூன் 3 ஆம் திகதி அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்த பின்னர், கடந்த திங்கட் கிழமை ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் அமைச்சுப் பத­வி­களை மீளப் பொறுப்­பேற்­றி­ருந்­தனர். இதனைத் தொடர்ந்தே நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். எனினும் இக் கூட்­டத்தில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் பங்­கேற்­க­வில்லை. புர்கா மற்றும் நிக்காப் தற்­போது அமு­லி­லுள்ள அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் தடை­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அதனை சட்­டத்தின் மூலம் நிரந்­த­ர­மாக தடை செய்­வ­தற்கே இந்தச் சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 4/21 தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் பெண்கள் அரச நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் முகத்­திரை அணி­வ­தற்கு சுற்­று­நி­ருபம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.