இஸ்லாம் பாடநூலில் பயங்கரவாத கருத்து

பொலிஸ் தலைமையகத்தில் இரு முறைப்பாடுகள்

0 661

பாட­சா­லை­களில் இஸ்லாம் மதத்தைக் கற்­பிக்கும் பாட­நூல்­களில் அடிப்ப­டை­வாதம் மற்றும் பயங்­க­ர­வாதம் தொடர்­பான கருத்­துகள் உள்­ள­டங்­கப்­பட்­டுள்­ளன எனவும் அவற்றை இஸ்லாம் பாட­நூல்­க­ளி­லி­ருந்து நீக்­கு­மாறும் கோரி சிங்­களே அமைப்பும் பௌத்த தகவல் கேந்­திர நிலை­யமும் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளன.

இஸ்­லாத்­தி­லி­ருந்து ஏனைய மதங்­க­ளுக்கு மதம் மாறு­ப­வர்­க­ளையும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளையும் கொலை செய்து தண்­டனை நிறை­வேற்ற வேண்டும் என இஸ்லாம் சமய பாடப்­புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக அண்­மையில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த இஸ்லாம் மதத்­தி­லி­ருந்து வெளி­யேறி வேறு மதத்­தினைத் தழுவிக் கொண்ட ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

குறிப்­பிட்ட சாட்­சி­யத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு சிங்­களே அமைப்பு மற்றும் பௌத்த தகவல் கேந்­திர நிலை­யத்தைச் சேர்­நத தேரர்கள், பாட­சாலை மட்­டத்­திலே அடிப்­ப­டை­வா­தமும் பயங்­க­ர­வா­தமும் போதிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இது மிகவும் பயங்­கர முன்­னெ­டுப்­பெ­னவும் தங்­க­ளது முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இஸ்லாம் மத பாட­நூல்­க­ளி­லி­ருந்து அடிப்­படை வாதத்தைப் போதிக்கும் கருத்துகள் உடனடியாக அகற்றப்படவேண்டுமெனவும் கல்வி அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.