கண்டி இன வன்முறைகள்நஷ்டஈடுகள் வழங்கல்கள் மாத இறுதியில் பூர்த்தியாகும்

0 468

2018 ஆம் ஆண்டு கண்டி, திகன பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான இறு­திக்­கட்ட நஷ்­ட­ஈ­டுகள் இம்­மாத இறு­திக்குள் வழங்­கப்­பட்டு பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இது­வரை நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­துள்ள 174 சொத்­து­க­ளுக்கு நஷ்ட ஈடாக 17 கோடி 5 இலட்­சத்து 67 ஆயிரம் ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பிட்ட 174 சொத்­துக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்கு காசோ­லைகள் தயார் செய்­யப்­பட்­டுள்­ள­தாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணி­ய­கத்தின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம். பதூர்தீன் தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட 174 சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார். கண்டி, திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் சொத்­து­க­ளுக்கும், வீடு­க­ளுக்கும், பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் தாம­தி­யாது நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­மாறு அப்­போ­தைய அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் ரவூப்­ஹக்கீம் ஆகியோர் பிர­த­மரும், புனர்­வாழ்வு அமைச்­சுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ரம சிங்­கவை கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கண்டி, திகன பகு­தி­களில் கடந்த வருடம் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்­கப்­பட்­டி­ருந்த விண்­ணப்­பங்­களில் 546 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணி­யகம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது. இவற்றில் ஒரு இலட்சம் ரூபா­வுக்கு உட்­பட்ட நஷ்ட ஈடு­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்கு தகுதி பெற்­றி­ருந்த 372 பேருக்கு ஏற்­க­னவே நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்டு விட்­டது.

372 சொத்­து­க­ளுக்கும் நஷ்­ட­ஈ­டாக 19 கோடி 48 இலட்ச்­தது 45 ஆயிரம் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இழப்­பீட்டு பணி­ய­கத்தின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார்.

இறு­திக்­கட்­ட­மாக வழங்­கப்­ப­ட­வுள்ள 174 சொத்­து­க­ளுக்­கு­மான நஷ்­ட­ஈ­டு­க­ளுடன் இந்­தப்­பணி நிறை­வு­று­வ­தா­கவும், 174 சொத்­து­களும் தலா ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இழப்பீடுகளாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அமைச்சரவையின் அங்கீகாரம் தாமதமாகியமையே நஷ்டஈடு வழங்குவதிலும் தாமதங்களை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.