ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கில் பதவி விலகவில்லை

முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் சுட்டிக்காட்டு

0 554

முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாக பதவி வில­கி­யமை தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சி­ய­லாக்க வேண்டாம். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை  பாது­காக்கும் நோக்கில் எவரும்  பதவி வில­க­வில்லை. ஒரு தனி­ம­னி­தனின் முறை­யற்ற செயற்­பாட்டை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் பாரிய பிரச்­சி­னைகள் தொடர்பில் இன்று மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். எச். அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தின் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து சுய­மாக வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள் இன்று மகா­நா­யக்க தேரர்­களை சந்­திக்­க­வுள்­ளார்கள். இச்­சந்­திப்பு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறி­பிட்டார்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இஸ்லாம் மதத்­திற்கு முர­ணாகத் தாக்­கு­தலை மேற்­கொண்ட அடிப்­ப­டை­வா­தி­களின் மிலேச்­சத்­த­ன­மான செயற்­பா­டு­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். முஸ்லிம் மக்கள் என்றும் தீவி­ர­வா­தத்­திற்கு துணை செல்­ல­வில்லை. ஒரு தனி­ம­னி­தனின் செயற்­பாட்டின் கார­ண­மாக ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­களும் உட­ல­ள­விலும், மன­த­ள­விலும் பாதிப்­பிற்கு உள்­ளா­கி­யுள்­ளார்கள்.

தாக்­கு­தலை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வர  திக­தியும் நிச்­ச­யிக்­கப்­பட்­டது. குற்­றச்­சாட்­டுக்கள் ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்டால் ரிஷாத் பதி­யுதீன் சட்­டத்தின் பிர­காரம் தண்­டிக்­கப்­பட வேண்டும். சட்­டத்தால் வழங்­கப்­படும் தண்­ட­னை­யினை முழு­மை­யாக ஏற்றுக் கொள்­ளவும் தயார் என்று அவர் குறிப்­பிட்டார்.

ஆனால் நிலைமை ஒரு தரப்­பி­ன­ருக்கு எதி­ரா­கவே கட்­ட­விழ்த்து விட்­டப்­பட்­டது.  முன்னாள் ஆளு­நர்­க­ளான அசாத் சாலி, ஹிஸ்­புல்லா மற்றும் ரிஷாத் பதி­யு­தீனை பதவி விலக்­கு­மாறு கோரி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய தேரர் தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடுப்­பட்டார். இதன் கார­ண­மாக ஏற்­க­னவே பாதிக்க­ப்பட்ட மக்கள் மேலும் பாதிப்­ப­டையும் சூழ்­நிலை காணப்­பட்­டது. ஆகவே  முஸ்லிம் மக்­க­ளினால் பிரச்­சினை ஏற்­பட்­டது என்ற நிலைமை உரு­வாகி விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் பத­வி­களை எவ்­வித அழுத்­தங்­க­ளு­மின்றி சுய­மாகத் துறந்தோம்.

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை மாத்­தி­ரமே பதவி விலக கோரினோம் என்று குறிப்­பி­டு­ப­வர்கள் கடந்த காலங்­களில் குறிப்­பிட்ட விட­யங்­களை நினை­வு­ப­டுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் எது செய்­தாலும் அதில் தவறு கண்­டு­பி­டித்து தூற்றும் செயற்­பா­டுகள் மாத்­தி­ரமே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சுயா­தீ­ன­மான அமைப்­புக்கள் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளுக்கு எவரும் தடை­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. அமைச்சர் ரிஷாத் மாத்­திரம் பதவி வில­கி­யி­ருந்தால் அவ­ருக்கு சார்­பாக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் செயற்­ப­டு­கின்­றார்கள் என்ற கருத்தும் வெளிவரும். ஆகவே பல விட­யங்­களை தூர­நோக்­குடன் ஆராய்ந்தே அனை­வரும் அமைச்சு பத­வி­களை துறந்தோம். எங்­களின் தீர்­மானம் எவ­ருக்கும் எந்­நி­லை­யிலும் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தாது.

முஸ்லிம் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைக்­கப்­பெற வேண்டும். இன்று நாட்டில் மதத் தலைவர்கள் முறையான வழிநடத்தல்களை முன்னெடுக்கின்றார்கள். தேசிய நல்லிணக்கம் மீண்டும் சீர்பட வேண்டும். ஆகவே அரசாங்கமும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை காண துரிதமாக செயற்படுதல் அவசியம். எமது தரப்பு நியாயத்தை எடுத்து கூறவே இன்று மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளோம். என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.