சிங்கள – முஸ்லிம் சமூகப் பிளவே நாட்டுக்கு அச்சுறுத்தல்

கொழும்பில் சர்வதேச கருத்தரங்கில் பேராசிரியர் ரொஹான் குணரத்ன

0 803

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து நாட்டின் சிங்­கள – முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இது­வரை காலமும் பேணப்­பட்டு வந்த இணைப்பு சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தற்­போது எமக்­கான அச்­சு­றுத்தல் இஸ்­லா­மிய அரசு என்­ப­திலும் பார்க்க, இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள பிளவே பாரிய அச்­சு­றுத்­த­லாக இருக்கும் என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும் என்று பிர­பல பயங்­க­ர­வாத எதிர்ப்பு விவ­கார நிபு­ண­ரான பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

முன்­கூட்­டியே தெளி­வான விப­ரங்­க­ளுடன் தாக்­கு­தல்கள் குறித்த எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இந்த அனர்த்­தத்தை பாது­காப்புப் பிரி­வினால் தடுக்க முடி­யாமல் போன­மைக்குக் காரணம் என்ன? இது­வி­ட­யத்தில் ஒரு­போதும் பாது­காப்புப் பிரி­வி­னரை குறை­கூற முடி­யாது. மிகத்­தெ­ளி­வான தூர­நோக்­கற்ற, பிள­வ­டைந்த அர­சியல் தலை­மைத்­து­வமே இந்தத் தாக்­கு­தல்கள் தடுக்­கப்­ப­டா­மைக்குக் கார­ண­மாகும் என்றும் அவர் சாடி­யி­ருக்­கிறார்.

”பூகோள ரீதியில் இஸ்­லா­மிய அரசின் விரி­வாக்கம்: இலங்கை மீதான தாக்கம்” என்ற தலைப்­பி­லான சர்­வ­தேச கருத்­த­ரங்­கொன்று மஹிந்த ராஜபக் ஷ நிலை­யத்­தினால் கொழும்­பி­லுள்ள கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அக்­க­ருத்­த­ரங்கில் இலங்­கையில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் பின்­னணி மற்றும் எதிர்­கா­லத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய பாது­காப்பு செயற்­றிட்­டங்கள் தொடர்பில் பேரா­சி­ரியர் குண­ரத்ன விரி­வாகப் பேசினார்.

இலங்கைப் பாது­காப்பு அமைச்சின் சிந்­தனை அமைப்­பான தேசிய பாது­காப்பு ஆய்­வு­க­ளுக்­கான நிறு­வ­னத்தை அமைப்­ப­தற்­கான வரை­வுத்­திட்­டத்தை எழு­தி­ய­துடன், சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் தொடர்பில் சான்று ஆதா­ரத்­துடன் அபிப்­பி­ரா­யங்­களை வெளி­யி­டு­வதில் பெய­ரெ­டுத்­த­வ­ரான ரொஹான் குண­ரத்ன மேலும் கூறி­ய­தா­வது:

மூன்று இஸ்­லா­மிய வலை­ய­மைப்­புக்கள்

நாட்டில் இடம்­பெற்ற தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள் பற்றிப் பேசு­வ­தாயின் முதலில் இலங்­கை­யி­லுள்ள மூன்று இஸ்­லா­மிய அரசின் வலை­ய­மைப்­புக்கள் பற்றிக் குறிப்­பி­ட­வேண்டும். முத­லா­வது கண்டி மாந­க­ரத்தை மைய­மாகக் கொண்ட வலை­ய­மைப்­பாகும். அதி­லி­ருந்து 42 இலங்­கை­யர்கள் ஈராக் மற்றும் சிரி­யா­விற்குச் சென்­றி­ருப்­ப­துடன், முத­லா­வ­தாக மொஹமட் நிஸாம் என்­பவர் கடந்த 2015 ஜன­வரி 15 ஆம் திகதி அங்கு சென்றார். அவ­ரது சகோ­த­ர­ரான ஐக்­கிய இராச்­சி­யத்தை மைய­மாகக் கொண்டு இயங்­கிய தொண்­டு­நி­று­வ­னத்தில் பணி­பு­ரிந்த அபூ இஷாக் என்­பவர் சிரியா, ஈராக்­கிற்கு சென்று இலங்­கைக்குத் திரும்பி தனது குடும்­பத்­த­வர்­க­ளையும், தனது மனை­வியின் குடும்­பத்­த­வர்­க­ளையும் மத அடிப்­ப­டை­வாதத் தீவி­ர­வா­தத்­திற்குள் உள்­ளீர்த்தார். ஈராக்­கிற்கு சென்ற மொஹமட் நிலாம் ஆறு­மாத காலத்தின் பின்னர் அங்கு கொல்­லப்­பட்டார். அவர் கொல்­லப்­பட்­டமை தொடர்­பி­லான செய்தி இஸ்­லா­மிய அர­சிற்கு சொந்­த­மான பத்­தி­ரி­கையில் வெளி­வந்த போதுதான், இலங்­கை­யர்­களும் இஸ்­லா­மிய அரசின் போரா­ளி­க­ளாக இருந்­து­வ­ரு­கி­றார்கள் என்ற உண்­மையை உலகம் அறிந்­து­கொண்­டது.

இவ்­வாறு ஈராக் மற்றும் சிரி­யா­விற்கு சென்று வந்­த­வர்கள் இஸ்­லா­மிய அரசின் கொள்­கை­களை இலங்­கையில் விஸ்­த­ரிக்க ஆரம்­பித்­தார்கள். அவ்­வா­றுதான் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாகக் கரு­தப்­படும் சஹ்ரான் காசீம் தலை­மை­யி­லான காத்­தான்­கு­டியை மைய­மாகக் கொண்ட கிழக்குப் பிராந்­திய வலை­ய­மைப்பும், மேல்­மா­காண வலை­ய­மைப்பும் உரு­வாக்­கப்­பட்­டன. சஹ்­ரானால் உரு­வாக்­கப்­பட்ட வலை­ய­மைப்பில் சுமார் 150 இளை­ஞர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டனர். இவ்­வாறு இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்ட வலை­ய­மைப்­புக்­க­ளுக்கு தௌலா-­ – இஸ்­லா­மியா என்று பெய­ரி­டப்­பட்­டது. இதற்கு இலங்­கை­யி­லுள்ள இஸ்­லா­மிய அரசின் கிளைகள் என்று பொருள்­கொள்ள முடியும்.

இவ்­வாறு இஸ்­லா­மிய அர­சினால் ஈர்க்­கப்­பட்ட சஹ்ரான் காசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் இலங்­கையில் தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்னர், அந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய அரசு இயக்கம் பொறுப்­பேற்றுக் கொண்­ட­துடன், தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் சஹ்ரான் காசீம் தலை­மை­யி­லான குழு­வினர் இஸ்­லா­மிய அரசின் தலைவர் அபூ பக்கர் அல்-­பக்­தா­தியை முன்­னி­றுத்தி சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்­துக்­கொண்ட காணொ­லி­யையும் வெளி­யிட்­டது. எனவே அவர்­களின் தலைவர் இலங்­கையின் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ அல்ல. ஈராக், சிரி­யா­வி­லி­ருக்கும் ஒரு மனி­தனே அவர்­களின் தலைவர். அவரை முன்­னி­றுத்தி சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்­துக்­கொள்­ப­வர்கள் மர­ணிப்­ப­தற்குத் தயா­ராக இருப்­ப­துடன், அந்த மர­ணத்தின் மூலம் ஐந்து விட­யங்கள் தமக்குக் கிட்டும் என்ற நம்­பிக்­கையைக் கொண்­டி­ருக்­கி­றார்கள். சுவர்க்­கத்தை சென்­ற­டைய முடியும், இறை­வனைக் காண­மு­டியும், மனி­தர்­க­ளாக இருந்த போது இழைத்த பாவங்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கப்­படும், பல உற­வி­னர்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் (அத­னா­லேயே பலர் தமது குடும்­பத்­தி­ன­ரையும் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளாக மாற்­றி­யி­ருப்­ப­துடன், சில குடும்ப அங்­கத்­த­வர்கள் தம்மைச் சார்ந்­த­வர்­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உத­வு­கின்­றார்கள்), 72 கன்னிப் பெண்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் ஆகி­யவை அந்த நம்­பிக்­கை­க­ளாக இருக்­கின்­றன.

பாது­காப்புப் பிரி­வி­னரைக் குறை­கூற முடி­யாது

அடுத்­த­தாக முன்­கூட்­டியே தெளி­வான விப­ரங்­க­ளுடன் தாக்­குதல் குறித்த எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இந்த அசம்­பா­வி­தத்தை பாது­காப்புப் பிரி­வினால் தடுக்க முடி­யாமல் போன­மைக்குக் காரணம் என்ன? இவ்­வி­ட­யத்தில் ஒரு­போதும் பாது­காப்புப் பிரி­வி­னரை குறை­கூற முடி­யாது. மிகத்­தெ­ளி­வான தூர நோக்­கற்ற, பிள­வ­டைந்த அர­சியல் தலை­மைத்­து­வமே இந்தத் தாக்­கு­தல்கள் தடுக்­கப்­ப­டா­மைக்குக் கார­ண­மாகும். அவர்கள் இது­வி­ட­யத்தில் பொறுப்­புக்­கூற வேண்­டி­யது அவ­சியம் என்­ப­துடன், சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். எப்­போதும் எச்­ச­ரிக்கை உணர்­வு­டனும், வேட்­டை­யாடும் துடிப்­பு­டனும் செயற்­பட்­டு­வந்த பாது­காப்புப் பிரி­வி­னரின் உத்­வேகம் 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து பிடுங்­கப்­பட்­டது. சாதா­ரண விட­யங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அவ­தானம் கூட தேசிய பாது­காப்பு சார்ந்த மிக முக்­கிய விட­யங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே இந்தத் தாக்­கு­தல்கள் புல­னாய்வுப் பிரிவின் குறை­பாடோ அல்­லது பாது­காப்புத் தரப்பின் குறை­பாடோ அல்ல. மாறாக திற­னற்ற அர­சியல் தலை­மைத்­து­வத்தின் குறை­பா­டே­யாகும்.

இந்­நி­லையில் நாட்­டி­லி­ருந்து இந்தப் பயங்­க­ர­வா­தத்தை முற்­றாகக் களை­வ­தற்கு தூர­நோக்கில் சிந்­தித்து, நீண்­ட­கால திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். தற்­போது பாது­காப்பைப் பலப்­ப­டுத்­து­வதும், சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதும் குறுங்­கி­ய­காலத் தீர்­வையே பெற்­றுத்­தரும். ஒரே­யொரு இரவில் ஒரு பயங்­க­ர­வாதி உரு­வாகி விடு­வ­தில்லை. அவ்­வாறு உரு­வா­கு­வ­தற்­கான வட்ட செயற்­பாட்டை முழு­மை­யாக முறி­ய­டிக்க வேண்டும். அதே­போன்று இஸ்­லா­மிய அர­சினால் ஈர்க்­கப்­பட்ட அடிப்­ப­டை­வா­திகள் தமது குடும்­பங்கள், உற­வி­னர்­க­ளையும் அதற்குள் உள்­ளீர்க்­கி­றார்கள். எனவே அத்­த­கைய நபர்கள் தொடர்பில் கண்­ட­றிந்து அவர்­களைச் சார்ந்­தோ­ருக்கும் முறை­யான உள­வள ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட வேண்டும். தற்­போது கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான திட்­ட­மி­டப்­பட்ட புனர்­வாழ்வு செயற்­றிட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­கை­த­ருவோர், இங்­கி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்குச் செல்வோர் குறித்து நிலை­யாகக் கண்­கா­ணிக்கும் ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்க வேண்டும். அத்­தோடு இன, மதம் சார்ந்த தனி­யான பாட­சா­லை­களைத் தவிர்த்து, பல்­லினப் பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வது காலத்தின் தேவை­யாக மாறி­யி­ருக்­கி­றது. அத­னூ­டா­கவே இன, மத அடிப்­ப­டை­யி­லான அடை­யா­ளங்­களைப் புறந்­தள்ளி, இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தைக் கொண்ட இளைய தலை­மு­றையை உரு­வாக்க முடியும். அதே­போன்று எமது நாட்டில் இத்­த­கைய அடிப்­ப­டை­வா­தி­களைத் தண்­டிப்­ப­தற்­கான சட்­டங்கள் போது­மா­ன­வை­யாக இல்லை. எனவே அவ­சி­ய­மான சட்­டங்கள் விரை­வாக நிறை­வேற்­றப்­பட வேண்டும். அதற்­கு­ரிய பொறுப்பை அர­சியல் தலை­வர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். காரணம் அவர்கள் அதனை முன்­ன­ரேயே செயற்­ப­டுத்­தி­யி­ருந்தால் இத்­த­கைய தாக்­கு­தலே இடம்பெற்றிருக்காது.

சமூக இணைப்பு வேலைத்திட்டம்

மேலும் சமூகங்களுக்கு இடையில் இணைப்பை உருவாக்கத்தக்க வேலைத்திட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று, பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டதன் பின்னர் முஸ்லிம் தலைவர்கள் தமது பெண்களைப் பாதுகாப்பதற்கு வாளை வைத்திருக்கிறோம் என்பது போன்ற பொருத்தமற்ற கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இது தேசிய பாதுகாப்பு குறித்த அவர்களின் தெளிவின்மையையே காட்டுகின்றது. இத்தகைய கருத்துக்கள் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவொன்று உருவாகியிருக்கிறது. எமக்கான அச்சுறுத்தல் இஸ்லாமிய அரசு என்பதை விடவும், இத்தனை வருடகாலமாக சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் காணப்பட்ட நெருக்கமான பிணைப்பு சேதப்படுத்தப்பட்டு விட்டது. அதுவே தற்போது எமக்குள்ள பாரிய அச்சுறுத்தலாகும். எனவே சமூகங்களை இணைக்கும் வேலைத்திட்டமொன்று தற்போது மிகவும் அவசியமானதாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.