தெரிவுக்குழுவை கண்டு ஜனாதிபதி அஞ்சுகிறார்

சாடுகிறார் இம்ரான் எம்.பி

0 447

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக விசா­ரிக்கும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை கண்டு ஜனா­தி­பதி அஞ்­சு­கிறார் என திரு­கோ­ண­மலை மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் மூதூர் தொகுதி பிர­தான அமைப்­பா­ள­ரு­மான இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

நேற்று காலை  திரு­கோ­ண­மலை பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட தமிழ் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற கம்­பெ­ர­லிய அபி­வி­ருத்தி திட்­டத்தின் ஆரம்பம்  நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

2015 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சியை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து நடை­பெறும் நல்ல விட­யங்­க­ளுக்கு ஜனா­தி­பதி பொறுப்­பேற்­பதும் கெட்ட விட­யங்­களை ஐக்­கிய தேசியக் கட்சி மீது சுமத்­து­வ­து­மாக காணப்­பட்­டன. அதுவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லிலும் நடை­பெற்­றது. போதைப்­பொருள் கைப்­பற்­றப்­பட்ட போதும் மதூஷ் கைது­செய்­யப்­பட்ட போதும் ஊட­கங்­க­ளுக்கு முன் ­வந்து புள்­ளி­களை பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின் ஊட­கங்­க­ளுக்கு முன் வ­ர­வில்லை. ஐக்­கிய தேசிய கட்­சியின் பக்­கமே கைநீட்­டினார்.

இப்­போது பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை அமைத்து விசா­ரணை செய்­யும்­போது ஜனா­தி­பதி கூறிய பொய்கள் ஒவ்­வொன்­றாக வெளி­வ­ரு­கின்­றன. முன்னாள் பாது­காப்பு செய­லாளர், முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போது இது தொடர்­பாக தெளி­வாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.

“தான் கடந்த வரு­டமே ஸஹ்­ரானை கைது­செய்ய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­த­தா­கவும் அதன்­போதே தான் கைது­செய்­யப்­பட்­ட­தா­கவும்” முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நால­க­சில்வா சாட்­சியம் அளித்­தி­ருந்தார். யாரோ ஒரு நாமல் குமா­ரவின் பேச்சை கேட்டு இவர் கைது செய்­யப்­பட்­ட­துக்கும் இந்த தாக்­கு­த­லுக்கும் எதா­வது சம்­பந்தம் உள்­ளதா? என விசா­ரித்து மக்­களை தெளி­வு­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு இந்த தெரி­வுக்­கு­ழு­வுக்கு உள்­ளது.

இவ்­வாறு இந்த விசா­ரணை தொடர்ந்தால் ஜனா­தி­பதி விட்ட தவ­றுகள், அவர் கூறிய பொய்கள் அனைத்­தையும் பொது­மக்கள் அறிந்­து­கொள்­வார்கள் என பயந்தே இந்த  தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக நிறுத்த சொல்லி அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­கிறார்.

இந்த தெரி­வுக்­குழு தொடர்­பான முடி­வெ­டுக்கும் சகல அதி­கா­ரமும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் சபா­நா­ய­க­ருக்­குமே உள்­ளது. ஜனா­தி­பதி தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி இந்த விசா­ர­ணை­களை தடுக்க நினைப்­பா­ராயின் நாம் நீதி­மன்றம் சென்றாவது மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்துவோம்.

ரணில் மீண்டும் பிரதமரானால் தான் ஒரு நிமிடம் கூட ஜனாதிபதி பதவியில் இருக்கமாட்டேன் என கூறிய ஜனாதிபதியே இப்போதுள்ளார் ஆகவே அவரின் பேச்சுக்களை நாம் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.