வன்செயல்களின் பின்னணி கண்டறியப்பட வேண்டும்

0 667

அண்­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றைகள் கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான குடும்­பங்­களும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளது சக­வாழ்வு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. அவர்­க­ளது வாழ்­வா­தா­ரங்கள் அழிக்­கப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­டுள்­ளன. 900 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான நஷ்டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரி­வித்­தி­ருக்­கிறார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு உட­ன­டி­யா­கவே நாட்டில் இன­வன்­மு­றைகள் வீரிட்டு எழும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. தங்­க­ளது சுய­ந­லத்­துக்­காக, நாடு பற்றி எரிய வேண்­டு­மென இன­வாத குழுக்­களும், சில அர­சியல் பின்­ன­ணியைச் சேர்ந்­த­வர்­களும் காத்­தி­ருந்­தார்கள். ஆனால் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் அதற்குத் தடை­யாக இருந்தார். மக்­களை பொறுமை காக்கச் செய்தார்.

ஆனால் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடை­பெற்று இரு வாரங்­களின் பின்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டன. வன்­செ­யல்­க­ளுக்கு இலக்­கான முஸ்லிம் கிரா­மங்­க­ளையும், பள்­ளி­வா­சல்­க­ளையும், வர்த்­தக நிலை­யங்­க­ளையும் வெளிப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து வந்த காடை­யர்­களே உள்­ளூர்­வா­சி­க­ளுடன் சேர்ந்து தாக்­கி­யி­ருக்­கி­றார்கள் என்­பது பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாக்­கு­மூ­லங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த வன்­முறைச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களே இருந்­துள்­ள­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்­ளமை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாகும்.

வன்­மு­றைகள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களைச் சேர்ந்த பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­மாறு அர­சி­யல்­வா­தி­களால் தவ­றாக வழி நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். கட்சி ரீதி­யான பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் இதன் பின்­ன­ணியில் இருந்­துள்­ளார்கள் எனவும் பேராயர் தெரி­வித்­துள்ளார்.
இதே­வேளை குரு­நாகல், சிலாபம், மினு­வாங்­கொடை வன்­முறைச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு நெருக்­க­மான குழு­வொன்று செயற்­பட்­டுள்­ள­தாக பீல்ட் மார்சல் சரத் பொன்­சேகா கூறி­யுள்ளார். பீல்ட் மார்சல் சரத்­பொன்­சே­காவின் கருத்­தையும் புறந்­தள்­ளி­வி­ட முடியாது. மினு­வாங்­கொ­டையில் 53 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டன. இவற்றில் 20 கடைகள் தீயினால் முற்­றாக எரிந்து நாச­மா­கின. இத்­தனை வன்­செ­யல்­களும் ஒரு சில மணித்­தி­யா­லங்­களில் நடாத்­தப்­பட்­டன. மினு­வாங்­கொடை நகரின் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­பட்­ட­வேளை நக­ர­சபைத் தலை­வ­ரிடம் தீய­ணைப்பு இயந்­திரம் கோரப்­பட்ட போது அதற்கு அவர் மறுப்புத் தெரி­வித்­த­தா­கவும் பின்பு இரா­ணுவம் தலை­யிட்டே தீய­ணைப்பு இயந்­திரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர் மஹிந்த அணியைச் சேர்ந்­தவர் எனக் கூறப்­ப­டு­கி­றது.

குரு­நாகல் பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் திட்­ட­மிட்­ட­தொன்று எனவும் இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் கண்­ட­றி­யப்­பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்­டார தனது பாரா­ளு­மன்ற உரையில் தெரி­வித்­துள்ளார்.

வன்­செ­யல்கள் இடம்­பெற்ற போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர மற்றும் பிவி­து­ரு­ஹெல உறு­மய கட்­சியின் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் மது­மா­தவ அரவிந்த் என்போர் களத்தில் இருந்­தி­ருக்­கி­றார்கள். இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலை­மையில் பாரி­ய­ளவில் பல பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­வர்கள் இனங்­கா­ணப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வ­துடன் வன்­செ­யல்கள் தொட­ரா­தி­ருப்­ப­தற்கு அரசு திட்­டங்கள் வகுக்க வேண்டும்.

திட்­ட­மிட்டு நடாத்­தப்­படும் இன­வாதத் தாக்­கு­தல்­களின் பின்­னணி பற்றி ஆராய்­வ­தற்கு விஷேட ஜனா­தி­பதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என கிழக்கு மாகாண அனைத்து சமூக ஒற்றுமைக்கான மன்றம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

வ்வேண்டுகோளை அரசு உதாசீனம் செய்யக்கூடாது. அளுத்கம, திகன, அம்பாறை, கிந்தோட்டை குருநாகல் மாவட்டம், சிலாபம், மினுவங்கொட என்பன திட்டமிடப்பட்ட சம்பவங்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நாட்டில் முஸ்லிம்கள் மாத்திரமல்ல அனைத்து இனங்களும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.